Friday, November 29, 2013

தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு

lord muruga

 image

thanga aanandha kallippu_Page_1thanga aanandha kallippu_Page_2

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும்.  இது 10 பாடல்களை உடையது.  ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

 

இப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது.  இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.  பெரும் செல்வ யோகம் உண்டாகும்.  இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர்.  இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டதாகும்.  அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.

 

நியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  மேலும் செய்யும் தொழிலில் லாபத்தினை அளிக்கக்கூடியதாகும்.  மனதிற்கு அமைதியையும் தர வல்லது.  கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது.  திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும்.  இதை பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.

 

இத்தகைய சிறப்புகள் கொண்ட தங்க ஆனந்த களிப்பு பாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும்.  இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.  பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது  செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத்தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும்.  அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.  எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.  முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம்.  நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு.  எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

தினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக்குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெருமானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

மிகச் சிறப்பு வாய்ந்த தங்க ஆனந்த களிப்பு துதி பற்றிய பதிவினை ஆன்மீகச்சுடர் வலைப்பூ எல்லாம் வல்ல பாம்பன் சுவாமிகளின் பொற்பாதங்கள் வணங்கி வெளியிடுகிறது.

 

தங்க ஆனந்தக் களிப்பு பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் குமரகுருதாசாய போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

10 comments:

 1. In many of your article you asked to start paaraayanam in nearby temple. but the people like me who are in foreign country and
  there is no such temple availabilty, what can we do and where can we start to do paaraayanam sir.Please reply

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் தங்களின் வீட்டின் பூசையறையிலேயே பாராயணத்தை ஆரம்பிக்கலாம். கோவில் அருகே இருந்து அங்கே சென்று பாராயணத்தை ஆரம்பிக்காமல் இருந்தால் தான் குற்றம். கோவில் அருகில் இல்லையெனில் வீட்டின் பூசையறையில் ஆரம்பிப்பது நல்லது.

   Delete
 2. thankyou for your immediate response sir,and the availability of above mentined oil like vilakennai and iluppai ennai also in doubtful
  can we do with ghee or seasame oil sir

  ReplyDelete
  Replies
  1. விளக்கெரிக்கும் எண்ணெய்களில் ஒரு சில கிடைக்காத போது நெய் அல்லது நல்லெண்ணெய் உபயோகம் செய்யலாம்...!

   Delete
 3. இந்த பாடலின் ஆரம்பத்தில் என்ற "சுயமான தங்கமித்தங்கம் - சிவ
  சுப்ரமணிய மெனுந் தெய்வத்தங்கம்" வரிகள் ஒரு முறை மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. ஒரு முறை பாராயணம் செய்தால் மொத்தம் 11 முறை இந்த வரிகள் வருகிறது. 9 முறை பாராயணம் செய்தால் மொத்தம் 99 முறை வருகிறது. இது சரியா அல்லது 108 முறை வரும்படி ஆரம்பிக்கும் பொது 2 முறை "சுயமான தங்கமித்தங்கம் - சிவ
  சுப்ரமணிய மெனுந் தெய்வத்தங்கம்" என்ற வரிகளை பாராயணம் செய்ய வேண்டுமா? எது சரி. தயவு செய்து விளக்கவும். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் எப்படி பாராயணம் செய்தாலும் பலனுண்டு. எப்படி செய்தாலும் சரியே. பாம்பன் சுவாமிகளும், முருக கடவுளும் துணையிருப்பர். தங்களின் குறை தீர்ப்பர்...!

   Delete
  2. respected sir,
   irandavadhu naal 4 vilakku temple la ettranuma?108 days daily temple la vilakku ettranuma?please clarify......

   Delete
 4. 50 நாட்களை கடந்து பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். திடிரென்று, இன்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தங்கள் உதவியை நாடினேன். இன்று காலையில் இருந்து ஒரு வித வருத்தத்தில் இருந்தேன். தங்கள் பதிலால் தெளிவு பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 5. முருக பெருமான் அருளே அனைத்திலும் பெரியது.....நிரந்தரமான ஆனந்தத்தை தரவல்லது...
  பாம்பன் ஸ்வாமிகள் முருக பெருமான் அருளை மட்டுமே கேட்டார்...
  முருக பெருமான் மீது கொண்ட பேரன்பினால் அவரை சுயமான தங்கமே என பொங்கும் அன்பினால் துதித்து மகிழ்ந்தார்

  ReplyDelete