Showing posts with label அறுமுகன். Show all posts
Showing posts with label அறுமுகன். Show all posts

Saturday, December 2, 2017

பயணத்தில் காக்கும் முருகனின் மந்திரம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

manivelu-saivite-sym-vel_ful


வேகமான இவ்வுலகில் குறுந்தொலைவு பயணமாகிலும், நெடுந்தொலைவு பயணமாகிலும் அதில் வேகமே தென்படுகிறது.  வேகமான பயணத்தில் விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் விலைமதிப்பில்லாத உயிரிழப்புகள் நேருவது வாடிக்கையாகி விட்டது.  இத்தகைய பயணங்களில் பாதுகாப்பை அளிக்கும் முருகனின் வேல் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


”வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்பிரமண்ய வேல்”


இந்த மந்திரம் அகத்தியர் பெருமானால் நாடி மூலம் தரப்பட்ட உன்னதமான ஒரு மந்திரம் ஆகும்.  இந்த மந்திரத்தை அகத்தியர் விஜயம் மாத இதழில் கண்டேன்.  இதனை பல முறை பயன்படுத்தி இதன் சக்தியை உணர்ந்திருக்கிறேன்.  இந்த மந்திரத்தின் பெருமையை உணர்த்தவே இதனை நம் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.


இதனை பயணம் செய்வதற்கு முன்பாக 18 முறைகள் செபித்து விட்டு பயணம் மேற்கொள்ள அந்த பயணத்தில் எவ்வித தடங்கல்களும் இராது.  பாதுகாப்பான பயணமாக அமையும் என்பது உறுதி.  இதை பயன்படுத்துபவர்கள் இதன் சக்தியை உணர்வார்கள்.  மேலும் தடங்கல்கள் என்பது விபத்துக்கள் மட்டுமல்ல, காரிய தடையும் தடங்கல் தான் என்பதை உணர வேண்டும்.


இந்த மந்திரம் தெரிந்திருந்தும் பயணம் செய்வதற்கு முன்பாக இதனை செபிக்க மறந்தால் அது அவரவர் வினைப்பயன் என்று கருத வேண்டும்.  அவ்வாறு செபிக்க மறந்து விபத்தில் சிக்கிய அனுபவமும் எனக்குண்டு.  இதை செபித்த பின்பு செய்த பயணங்கள் அனைத்தும் பாதுகாப்பான பயணங்களாகவே அமைந்திருக்கின்றன.  மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவமும் எமக்குண்டு.


இதனை பயன்படுத்தி அனைவரும் விபத்தில்லாத – தடங்கல்கள் இல்லாத பயணங்களை மேற்கொண்டு நலமுடன் - காரிய சித்தியுடன் வாழ எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல.  அனைத்தும் உன்னுடையதே.  அருளாளா…! அருணாச்சலா…!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


Friday, January 16, 2015

2015 ம் ஆண்டு விசாகம் நட்சத்திரம் வரும் நாட்கள்

lord murugu

Visagam - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஒம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சரவணபவ

Thursday, January 1, 2015

2015 ம் ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்கள்

murugan with wives

Kiruthigai - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சரவணபவ

Sunday, March 2, 2014

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-

  • அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
  • அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. 
  • எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
  • குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
  • ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
  • மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
  • அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
  • சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
  • ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
  • குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
  • தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
  • ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
  • லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
  • சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
  • ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
  • கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
  • லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
  • அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
  • துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
  • அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
  • சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, February 16, 2014

2014 ம் வருட விசாகம் நட்சத்திரம் வரும் நாட்கள்

shanmugar, valli, deivanai, palani HILL SHANMUGAN GOOD QUALITY

Visagam - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ரீங் சரவணபவ

Sunday, February 9, 2014

2014 ம் வருட கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்கள்

murughan

Kiruthigai - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சரவணபவ

Tuesday, January 14, 2014

2014 ம் வருட வளர்பிறை சஷ்டி வரும் நாட்கள்

muruga family

Valapirai Shashti - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Sunday, January 12, 2014

2014 ம் வருட தேய்பிறை சஷ்டி வரும் நாட்கள்

bairavar

Theipirai Shashti - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Friday, December 13, 2013

முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம்

murugan

swamigal-muruganஓம் குமர குருதாச குருப்யோ நம:


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்

 

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.

 

மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.

 

அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.

 

எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே

 

இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும்.  இது மொத்தம் 10 பாடல்களை உடையது.  இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம்.  வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.

 

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும்.  பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும்.  அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம்.  நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.

 

பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம்.  தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.  அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.

 

தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத்தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

மேற்கண்ட பகை கடிதல் பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

 

Tuesday, December 3, 2013

Friday, November 29, 2013

தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு

lord muruga

 image

thanga aanandha kallippu_Page_1thanga aanandha kallippu_Page_2

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும்.  இது 10 பாடல்களை உடையது.  ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

 

இப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது.  இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.  பெரும் செல்வ யோகம் உண்டாகும்.  இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர்.  இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டதாகும்.  அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.

 

நியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  மேலும் செய்யும் தொழிலில் லாபத்தினை அளிக்கக்கூடியதாகும்.  மனதிற்கு அமைதியையும் தர வல்லது.  கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது.  திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும்.  இதை பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.

 

இத்தகைய சிறப்புகள் கொண்ட தங்க ஆனந்த களிப்பு பாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும்.  இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.  பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது  செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத்தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும்.  அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.  எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.  முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம்.  நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு.  எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

தினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக்குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெருமானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

மிகச் சிறப்பு வாய்ந்த தங்க ஆனந்த களிப்பு துதி பற்றிய பதிவினை ஆன்மீகச்சுடர் வலைப்பூ எல்லாம் வல்ல பாம்பன் சுவாமிகளின் பொற்பாதங்கள் வணங்கி வெளியிடுகிறது.

 

தங்க ஆனந்தக் களிப்பு பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் குமரகுருதாசாய போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

Saturday, November 23, 2013

புத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்

imageஓம் குமர குருதாச குருப்யோ நம:image
image

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆகும்.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.   உயிரெழுத்து வரிசை (12) மற்றும்  உயிர்மெய் வரிசை (18) ஆக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பித்தளையில் இரண்டு வேல்கள் வாங்கி பூசையறையில் வைத்துக் கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 3 முறை பாராயணம் செய்யவும்.
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து ஒரு பித்தளை தட்டில் பச்சரிசி பரப்பி வாங்கி வைத்துள்ள இரண்டு வேல்களையும் வைத்து அதன் முன்னர் கணவன் – மனைவி இருவரும் 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். 108 நாட்கள் தினமும் 3 முறை கணவன் – மனைவி இருவரும் அமர்ந்து பாராயணம் செய்து வரவும்.
 
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
 
இரண்டு குத்து விளக்குகளில் மூன்று முகங்கள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.  பருத்தி பஞ்சுத்திரி கிழக்கு முகமாகவும், சிவப்புத்துணி திரி மேற்கு முகமாகவும், வாழைத்தண்டு திரி வடக்கு முகமாகவும் வைத்து குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.  ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  108 நாட்கள் கழித்து ஒரு வேலை அருகிலுள்ள முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.  இரண்டாவது வேலை குழந்தை பிறந்த பிறகு 40 நாட்கள் தீட்டு கழிந்து பழநி அல்லது திருச்செந்தூர் முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.
 
மேற்கண்ட முறை மிகவும் சக்தி வாய்ந்தது.  நிச்சயம் பலனளிக்கும்.  ஆண் – பெண் ஜாதகத்தில் உள்ள எவ்வித கடுமையான புத்திரதோஷத்தையும் நீக்க வல்லது.  வேறு எந்த பரிகாரமும் தேவையில்லை.  தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து புத்திரதோஷத்தை நீக்கி நன்மக்கட்டிபேறினை அளித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 

ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் குமர குருதாச குருப்யோ நம:


Thursday, November 21, 2013

பாம்பன் சுவாமிகளின் அருள் மழை – உண்மை சம்பவம்

image

image

image

நாம் மேலே காணுவது ஞானபானு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆவார்.  நம்மில் பலர் இவரைப் பற்றி அறிந்திருப்பார்கள்.  இவர் ஒரு மூர்த்தி கொள்கையை உடையவர்.  முருக வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்.  இவருக்கு அகத்தியர் மற்றும் முருகர் ஆகியோர் நேரில் காட்சி தந்துள்ளனர்.  நம் வாழ்வின் துயர் தீர இவர் பல பாடல்களை உலக மக்களின் நலன் வேண்டி இயற்றியுள்ளார்.  இவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை சம்பவத்தை  இங்கே பதிவாக வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது.

நாம் குறிப்பிட்ட அந்த வயதான பெண்மணி சுமார் 63 வயது கொண்டவர்.  முருகனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்.  பாம்பன் சுவாமிகளின் மேல் மாறா பக்தி கொண்டவர்.  அவர் எந்த கோவிலுக்கு சென்றாலும் அவரின் முன்னே முருகன் இருப்பதாக எண்ணியே வழிபடுவாராம்.  குறிப்பாக திருச்செந்தூர் முருகன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.  அவர் 10 வகுப்பு வரை படித்தவர்.  அந்த கால 10 வகுப்பு.  பாம்பன் சுவாமிகளின் கருணையினால் அவரால் இயற்றப்பட்ட குமாரஸ்தவம், சண்முக கவசம், பகை கடிதல், மயூர பந்தம், சஸ்திர பந்தம், துவிதநாக பந்தம், கமல பந்தம், ரத பந்தம், சதுரங்க பந்தம் மற்றும் சண்முக நாமாவளி இவற்றை தன்னுடைய 63 ம் வயதில் மனப்பாடம் செய்து பாடும் திறமை பெற்றார்.  அசைவ உணவினை விட்டு விட்டார்.

அவருக்கு கனவில் முருகனும் அவரது வாகனமும் வந்து அருள் பாலித்தனர்.  இதுவே பாம்பன் சுவாமிகளின் அருளுக்கு மிகச்சிறந்த உதாரணம்.  தன்னுடைய உடல் பிணிகளை இறைவன் அருளால் போக்கிக் கொண்டார்.    அவருக்கு உடல் வலிமையைக் காட்டிலும் மன வலிமையே அதிகம்.  பாம்பன் சுவாமிகள் இயற்றிய அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்யும் நோக்கம் கொண்டவர்.  தூங்க செல்லும் போதும் கூட பாம்பன் சுவாமிகள் இயற்றிய பாடல்களின் புத்தகம் அவரது கையில் இருக்கும்.  கனவிலும், நனவிலும் அறுமுகக் கடவுளை துதிக்கும் இயல்பினை உடையவர்.  படிப்படியாக அவரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டன.  என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் கர்ம வினைகளின் தாக்கம் அவரை விட வில்லை.

முருகனின் அருள் பெற்ற அவர் கடந்த தீபாவளியன்று அசைவ உணவை சாப்பிட்டு இருக்கிறார்.  சாப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் 2 நாட்கள் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.  அவரால் எதுவும் சாப்பிட முடிய வில்லை.  படுக்கையை விட்டு அவரால் எழ முடியவில்லை.  அவ்வாறு இருக்கும் சமயம் எம்மை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.  உடல்நிலை பாதிப்பினை மட்டும் என்னிடம் கூறினார்.  அவர் அசைவம் சாப்பிட்டதை நான் உணர்ந்து கொண்டேன்.  அவரிடம் அசைவம் சாப்பிட்டீர்களா?  என கேட்டேன்.  அவர் தயங்கிய படியே உண்மையை ஒப்புக் கொண்டார்.  பிறகு அவர் தன் வாழ்நாளில் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று முருகனிடமும், பாம்பன் சுவாமிகளிடமும் வேண்டி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  பிறகு சுமார் அரை மணி நேரத்தில் அவரது உடல் நிலை குணமாகியது.  இதை அவரை நேரில் சந்திக்கும் போது என்னிடம் தெரிவித்தார்.

தற்போது நல்ல உடல் நிலையுடன் காணப்படுகிறார்.  அவருக்கு உடலில் வலிமை தான் இல்லை.  நோய்கள் அவரை அணுக வில்லை.  முருகனின் அருளையும், பாம்பன் சுவாமிகளின் அருளையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இப்போது பாம்பன் சுவாமிகளின் அனைத்துப் பாடல்களையும் அச்சிட்டு தருமாறு அவர் என்னிடம் கேட்டிருக்கிறார்.  இப்பதிவினை எழுதும் போது கூட அவர் ஏதாவது பாம்பன் சுவாமிகளின் பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.  பாம்பன் சுவாமிகளின் அருள் மழைக்கு பாத்திரமான அடியார்களுள் இவரும் ஒருவர்.  இது போல் ஆனால் வெளியே தெரியாமல் இருக்கும் முருகனின் அடியார்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

அவரின் அனுமதி பெற்று பாம்பன் சுவாமிகளின் அருளினை உலகலறிய செய்ய இப்பதிவு ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் வெளியிடப்படுகிறது.

 

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகா வேன்றோது வார்முன்.

ஓம் சரவணபவ

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

 

 

Tuesday, November 19, 2013

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்

image
image

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.  நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.  நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
 
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.  வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
 
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. 
 
 
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
 
 
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
 
 
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 
 
ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!
 
 
 
 

Sunday, November 17, 2013

பித்ரு தோஷம் நீக்கும் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்

image

image

image

image

image

image

 

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய திருவிராமேச்சுரம் பாடல் ஆகும்.  இது நமக்கு வெளியே உள்ள பகை, நமக்கு உள்ளே உள்ள பகை (கர்மவினை) இவற்றை அழித்து பித்ருக்களின் சாபத்தையும், தோஷத்தையும் போக்க வல்லது.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது உங்களின் பிறந்த நட்சத்திரம் அல்லது பிறந்த திதி வரும் நாளில் ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அல்லது அமாவாசை திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.  அமாவாசை திதியே மிக மிக சிறப்பானது.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.  மேலும் பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

 

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்றும், ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

 

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.  அனைத்துவித தோஷங்களும் நீங்கும்.

 

தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  பாராயணம் செய்த பின்பு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக அளிக்கவும்.  வெகு விரைவில் பித்ரு தோஷம் நீங்கும்.  வாழ்வில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்கும்.  நிம்மதியும், பித்ருக்களின் அருளும் கிட்டும்.  நமக்கு வெளியே உள்ள பகையும், நமக்கு உள்ளே உள்ள பகையும் அழிந்து பித்ரு தோஷம் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

 

Wednesday, November 6, 2013

தெய்வங்களுக்குரிய மலர்கள்











வ.எண் தெய்வம் மலர்கள்
1. சிவபெருமான் வில்வம், கொன்றை
2. விநாயகர் அருகம்புல், திருவாத்தி
3. முருகன் கடம்பு
4. திருமால் முல்லை
5. கலைமகள் அல்லி
6. சூரியன் தாமரை, சிவப்புப்பூ
7. சந்திரன் வெள்ளைப்பூ
8. செவ்வாய் சிவப்புப்பூ
9. புதன் பொன்னரளி
10. வியாழன் மஞ்சள் பூ
11. வெள்ளி வெள்ளைப்பூ
12. சனி நீலப்பூ
13. ராகு புகை வண்ணப்பூ
14. கேது சிவப்புப்பூ
15. உக்கிரமான தெய்வங்கள் சிவப்பு மலர்கள்
16. எல்லா தேவர்கள் கருங்குவளை

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்

Monday, September 23, 2013

எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும் குமாரஸ்தவம்

  
  
(கையடக்க வடிவம்)
   
(கையடக்க வடிவம்)
 
(பெரியது)



              1.    ஓம் ஷண்முக பதயே நமோ நம :

              2.    ஓம் ஷண்மத பதயே நமோ நம :

              3.    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :

              4.    ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :

              5.    ஓம் ஷட்கோண பதயே நமோ நம :

              6.    ஓம் ஷட்கோச பதயே நமோ நம :

              7.    ஓம் நவநிதி  பதயே நமோ நம :

              8.    ஓம் சுபநிதி  பதயே நமோ நம :

              9.    ஓம் நரபதி பதயே நமோ நம :

             10.   ஓம் சுரபதி பதயே நமோ நம :

             11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம :

             12.   ஓம் ஷடஷர பதயே நமோ நம :

             13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம :

             14.   ஓம் தபராஜ பதயே நமோ நம :

             15.   ஓம் இகபர பதயே நமோ நம :

             16.   ஓம் புகழ்முநி பதயே நமோ நம :

             17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம :

             18.   ஓம் நயநய பதயே நமோ நம :

             19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம :

             20.   ஓம் குஞ்சரி பதயே நமோ நம :

             21.   ஓம் வல்லீ பதயே நமோ நம :

             22.   ஓம் மல்ல பதயே நமோ நம :

             23.   ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :

             24.   ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :

             25.   ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :

             26.   ஓம் இஷ்டி பதயே நமோ நம :

             27.   ஓம் அபேத பதயே நமோ நம :

             28.   ஓம் சுபோத பதயே நமோ நம :

             29.   ஓம் வியூஹ பதயே நமோ நம :

             30.   ஓம் மயூர பதயே நமோ நம :

             31.   ஓம் பூத பதயே நமோ நம :

             32.   ஓம் வேத பதயே நமோ நம :

             33.   ஓம் புராண பதயே நமோ நம :

             34.   ஓம் ப்ராண பதயே நமோ நம :

             35.   ஓம் பக்த பதயே நமோ நம :

             36.   ஓம் முக்த பதயே நமோ நம :

             37.   ஓம் அகார பதயே நமோ நம :

             38.   ஓம் உகார பதயே நமோ நம :

             39.   ஓம் மகார பதயே நமோ நம :

             40.   ஓம் விகாச பதயே நமோ நம :

             41.   ஓம் ஆதி பதயே நமோ நம :

             42.   ஓம் பூதி பதயே நமோ நம :

             43.   ஓம் அமார பதயே நமோ நம :

             44.   ஓம் குமார பதயே நமோ நம :


நீங்கள் மேலே  காண்பது   பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும்.  இதை  நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும்  இருக்கலாம்.   ஆனால்  இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.


இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும்.  இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும்.  மொத்தம் 44 வரிகளை உடையது.  இதனை படிக்கும் போது நம :” என்ற சொல்லை நமஹ்என்று உச்சரிக்கவும்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும்.  முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.


பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும்.  அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.  அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.


நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது.  ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.  அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.


ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும்.  மந்திர சக்தி உண்டாகும்.  பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம்.  முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.  இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.
 

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும்.  மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும்.  மனதில் முருகா என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.


தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 


ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்