Showing posts with label பதிகம். Show all posts
Showing posts with label பதிகம். Show all posts

Friday, December 15, 2017

பாவங்கள் போக்கும் பாவநாசத் திருப்பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

Thiruvannamalai


தலம் : பொது                                                                                                                                         பண் : பழம் பஞ்சுரம்

திருமுறை : நான்காம் திருமுறை                                                                                         அருளியவர் : திருநாவுக்கரசர்


    1. பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
      சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
      வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
      ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.
    2. ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
      கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
      வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
      மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
    3. மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
      அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
      விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
      நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
    4. புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
      உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
      கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
      அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.
    5. கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
      ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
      பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
      சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    6. மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
      கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
      பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
      திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
    7. எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
      குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
      நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
      அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
    8. மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
      ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
      சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
      மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
    9. சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
      ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
      நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
      தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    10. புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
      வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
      பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
      வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
    11. முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
      அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
      சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
      எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.

நாம் மேலே காணும் பதிகம் பாவநாசத் திருப்பதிகம் ஆகும்.  இது நான்காம் திருமுறையில் 15ம் பதிகமாக அமைந்துள்ளது.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இது எந்த ஒரு தலத்தையும் குறித்து பாடப்படவில்லை.  எனவே இது பொது என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளது.  இதன் பண் பழம் பஞ்சுரம் ஆகும்.  இப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானினின் பெயர்களை குறிப்பிடுகிறார்.

இப்பதிகத்தின் கடைசி வரியில் பாவங்கள் நாசமாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது.  சிவபெருமானின் பல்வேறு பெயர்களை உள்ளன்புடன் கூறி வழிபாடு செய்ய நாம் செய்த பழம் வினைகள் அனைத்தும் நாசமாகும் என்பது திண்ணம்.   இப்பதிகத்தை தினமும் காலை -  மாலை இரு வேளையும் பாராயணம் செய்ய நாம் எத்தனை பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து போகும் என்பது உறுதி.

இப்பதிகத்தை முதன் முதலில் பிரதோஷ வேளையில் பாராயணம் செய்வது நல்லது.  காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.  இதனை பாராயணம் செய்பவர்கள் அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டவர்களாக இருத்தல் நலம் பயக்கும்.  பாராயணம் விரைவில் பலன் தரும்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நோய்கள் ஆகியன நமது முற்பிறவிகளில் செய்த பாவங்களால் தான் ஏற்படுகிறது.  முற்பிறவி மட்டுமல்லாது இப்பிறவி பாவங்களும் அழிந்தால் மட்டுமே நம் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  பாவங்களை அழித்து வாழ விழைவோர் அவர் தம் முன்வினைகளை – கர்மவினைகளை அழித்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பாதம் பணிந்து இப்பதிவினை பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல… அனைத்தும் உன்னுடையதே…! அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


கடன் தீர்க்கும் உன்னத பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

saraparapeswararthirucherai s

runavimochana lingam

தலம் : திருச்சேறை                                                                                                                     அருளியவர் : திருநாவுக்கரசர்

    1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
      கூரி தாய அறிவுகை கூடிடும்
      சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
      நாரி பாகன்றன் நாம நவிலவே.
    2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
      செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
      மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
    3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
      இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
      சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
      மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
    4. மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
      ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
      சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
      ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.
    5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
      துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
      திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
      அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
      ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
      செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
      அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
      ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
      சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
      அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.
    8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
      துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
      இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
      அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
      விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
      திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
      அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
      வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
      திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
      கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

நாம் மேலே காணும் பதிகம் கடன் தீர்க்கும் பதிகம் ஆகும்.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இப்பதிகம் திருச்சேறை என்னும் தலத்தில் அருளப்பட்டதாகும்.  இத்தலத்து இறைவன் பெயர் செந்நெறியப்பர் – சாரபரமேசுவரர்.  இத்தலத்து இறைவி பெயர் ஞானவல்லி – ஞானாம்பிகை.  இத்தலத்தில் மார்கண்டேய முனிவர் ருணவிமோசன லிங்கத்தினை நிறுவி பூசித்து தனது பிறவிகடன் நீங்க பெற்றார்.

இதனை முதன் முதலில் தொடங்கும் போது திங்கட்கிழமையில் தொடங்க வேண்டும்.  தினமும் 1 முறை இப்பதிகத்தை கடன் தீர்த்த இறைவனை நினைத்து உள்ளன்புடன் பாராயணம் செய்ய இப்பிறவியின் கடன்கள் அனைத்தும் நீங்கி பிறவியில்லா பெருநிலை சித்திக்கும்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வர எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.  இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்களின் அனைத்து விதமான இடர்களையும், கடன்களையும் இறைவன் நீக்கியருள்வார் என்பது திண்ணம்.  மீண்டும் இடர்களும், கடன்களும் ஏற்படாது என்பது உறுதி.  இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் கடன்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே வாழ்வில் வராது.

இப்பிறவியின் கடன்கள் மட்டுமல்லாது அனைத்து இடர்களையும் போக்கி துன்பமில்லா இனிய வாழ்வை தரும் – கடன் தீர்க்கும் உன்னமான பதிகத்தை கடன் உள்ளவர்கள் மட்டுமல்லாது பிறவி கடன்களை போக்கி பிறவியில்லா பெருவாழ்வினை வாழ நினைப்பவர்களும் நிம்மதியான வாழ்வு பெற ஆதி சித்தன் - கருணையின் வடிவம் – அருணையின் நாயகன் எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பொற்பாதம் பணிந்து பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல…!  அனைத்தும் உன்னுடையதே…!  அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

Friday, December 13, 2013

முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம்

murugan

swamigal-muruganஓம் குமர குருதாச குருப்யோ நம:


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்

 

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.

 

மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.

 

அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.

 

எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே

 

இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும்.  இது மொத்தம் 10 பாடல்களை உடையது.  இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம்.  வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.

 

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும்.  பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும்.  அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம்.  நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.

 

பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம்.  தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.  அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.

 

தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத்தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

மேற்கண்ட பகை கடிதல் பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

 

Friday, November 29, 2013

தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு

lord muruga

 image

thanga aanandha kallippu_Page_1thanga aanandha kallippu_Page_2

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும்.  இது 10 பாடல்களை உடையது.  ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

 

இப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது.  இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.  பெரும் செல்வ யோகம் உண்டாகும்.  இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர்.  இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டதாகும்.  அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.

 

நியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  மேலும் செய்யும் தொழிலில் லாபத்தினை அளிக்கக்கூடியதாகும்.  மனதிற்கு அமைதியையும் தர வல்லது.  கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது.  திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும்.  இதை பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.

 

இத்தகைய சிறப்புகள் கொண்ட தங்க ஆனந்த களிப்பு பாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும்.  இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.  பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது  செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத்தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும்.  அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.  எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.  முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம்.  நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு.  எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

தினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக்குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெருமானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

மிகச் சிறப்பு வாய்ந்த தங்க ஆனந்த களிப்பு துதி பற்றிய பதிவினை ஆன்மீகச்சுடர் வலைப்பூ எல்லாம் வல்ல பாம்பன் சுவாமிகளின் பொற்பாதங்கள் வணங்கி வெளியிடுகிறது.

 

தங்க ஆனந்தக் களிப்பு பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் குமரகுருதாசாய போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

Saturday, November 23, 2013

புத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்

imageஓம் குமர குருதாச குருப்யோ நம:image
image

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆகும்.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.   உயிரெழுத்து வரிசை (12) மற்றும்  உயிர்மெய் வரிசை (18) ஆக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பித்தளையில் இரண்டு வேல்கள் வாங்கி பூசையறையில் வைத்துக் கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 3 முறை பாராயணம் செய்யவும்.
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து ஒரு பித்தளை தட்டில் பச்சரிசி பரப்பி வாங்கி வைத்துள்ள இரண்டு வேல்களையும் வைத்து அதன் முன்னர் கணவன் – மனைவி இருவரும் 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். 108 நாட்கள் தினமும் 3 முறை கணவன் – மனைவி இருவரும் அமர்ந்து பாராயணம் செய்து வரவும்.
 
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
 
இரண்டு குத்து விளக்குகளில் மூன்று முகங்கள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.  பருத்தி பஞ்சுத்திரி கிழக்கு முகமாகவும், சிவப்புத்துணி திரி மேற்கு முகமாகவும், வாழைத்தண்டு திரி வடக்கு முகமாகவும் வைத்து குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.  ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  108 நாட்கள் கழித்து ஒரு வேலை அருகிலுள்ள முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.  இரண்டாவது வேலை குழந்தை பிறந்த பிறகு 40 நாட்கள் தீட்டு கழிந்து பழநி அல்லது திருச்செந்தூர் முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.
 
மேற்கண்ட முறை மிகவும் சக்தி வாய்ந்தது.  நிச்சயம் பலனளிக்கும்.  ஆண் – பெண் ஜாதகத்தில் உள்ள எவ்வித கடுமையான புத்திரதோஷத்தையும் நீக்க வல்லது.  வேறு எந்த பரிகாரமும் தேவையில்லை.  தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து புத்திரதோஷத்தை நீக்கி நன்மக்கட்டிபேறினை அளித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 

ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் குமர குருதாச குருப்யோ நம:


Thursday, October 31, 2013

எதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்

nataraj 

  தலம்: தில்லை                                                                             ராகம்: மோகனம்

 

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

 
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

 
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

 
உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

 
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற.

 
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

 
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

 
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

 
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

 
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

 
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற.

 
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.

 
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

 
நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

 
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

 
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

 
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

 
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.


தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற.

 
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

 
திருச்சிற்றம்பலம்

ஆக்கம்: மாணிக்கவாசகர்

 

நாம் மேலே காண்பது திருவுந்தியார் பதிகம் ஆகும்.  இதை இயற்றியவர் மாணிக்கவாசகர்.  இதில் மொத்தம் 20 பாடல்கள் உள்ளன.  இந்த 20 பாடல்களிலும் சிவபெருமானின் வெற்றியே கூறப்பட்டுள்ளது.  இதனை பாராயணம் செய்ய செய்ய பகைமை, விரோதம் மற்றும் எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும்.

 

முதன்முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய்க்கிழமை அன்று காலபைரவருக்கு குங்கும நீரால் அபிசேகம் செய்து எலுமிச்சை பழ மாலை அணிவித்து சிவந்த நிற உணவு பொருட்களை படையிலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.  அதாவது மாதுளம் பழம், ஜிலேபி, கேசரி ஆகிய உணவு பொருட்களை படையலிட வேண்டும்.  மேற்கண்ட பதிகத்தை 8 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

வீட்டிற்கு வந்து குத்துவிளக்கேற்றி பருப்பு பொடி கலந்த சாதத்தை படையலிட்டு, குத்து விளக்கை காலபைரவராக நினைத்து 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  பாராயணம் செய்த பின்பு பருப்பு பொடி கலந்த சாதத்தை தானம் செய்ய வேண்டும்.  இவ்வாறு 9 செவ்வாய் கிழமைகள் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் குத்துவிளக்கின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லைகள் அறவே நீங்கும்.

 

சிவபெருமானின் வெற்றியை பாடியே நாமும் நமது வாழ்வில் கர்ம வினைகள் நீங்கப்பெற்று எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வினை வாழ்வோம்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Wednesday, October 16, 2013

பிரசவம் இனிதே நடக்க உதவும் பதிகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuHCVaK2wlEw6DZxb8YU7jS2K7uESm7ObR3GXDkA5LTwdSIZP_NNUbKZldeeHWdE-AeDKAJL7-LsJCdNirMWm8l728qBR3i7_3BxiCu6Bwauc_41SdbnnkxH28YxgzW44nN2V-Wweghp5y/s800/Manikka_Vinayaka.jpg
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
THAYUMANAVAR
அருள்மிகு தாயுமானவ சுவாமி 
http://lh5.ggpht.com/-1l9O8J3Zxlg/THSkFWILvvI/AAAAAAAABrA/OfmWWh3RpvU/2.jpg
அருள்மிகு மட்டுவார்குழலி உடனுறை தாயுமானவ சுவாமி, திருச்சி.
 
திருச்சிற்றம்பலம்

தலம் – திருச்சிராப்பள்ளி                                          பண் – குறிஞ்சிப்பண்

நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.

கைம்மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக்கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.

மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடைஊரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

துறைமல்கு சாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனல்எரி ஆடும் கடவுள்ளம்
பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றன ரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே.

வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே.

வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேவிய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.

மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன்தன்
தலைகலனாகப் பலிதீர்ந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலஅல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.

தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கேறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே.

திருச்சிற்றம்பலம்
 
 
மேற்கண்ட பதிகம் திருஞானசம்பந்தரால் திருச்சிராப்பள்ளி தாயுமானவ சுவாமி மீது பாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி தலத்திற்கு தென் கயிலாயம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்து இறைவனின் மீது அன்பு கொண்ட ரத்னாவதி என்னும் வணிகர் குலப்பெண் காவிரி வடகரையில் வாழ்ந்து வந்தாள். இவளுடைய பிரசவ காலத்தில் காவிரியில் நீர் பெருகியதால் தாய், தந்தையர் யாரும் உதவ இயலவில்லை. கணவன் பொருளீட்ட கடல் கடந்து செல்ல, ரத்னாவதி மிகுந்த வருத்தமுற்று இறைவனை நினைத்தாள்.
 
அவளின் வருத்தம் நீங்க இறைவன் சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் வந்து ரத்னாவதிக்கு மருத்துவம் செய்து, பிரசவம் இனிதே நடக்க அருளினார். இத்தலத்தின் இறைவனை வணங்கி மேற்கண்ட பதிகத்தை தினமும் ஓதிவர பிரசவ காலத்தில் எவ்வித துன்பமும் ஏற்படாமல், பிரசவம் இனிதே நடக்கும் என்பது நம் முன்னோர் அனுபவித்த உண்மையாகும்.
 
இக்காலத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதாக உள்ளது. எதற்கு எடுத்தாலும் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்கும் இக்காலத்தில், கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இந்த பதிகம் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
 
கரு சுமக்கும் பெண்கள் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றவும். முதலில் தங்கள் குலதெய்வத்தை வணங்கவும்.  பின்பு மலைக்கோட்டை முழு முதற்கடவுள் உச்சிப்பிள்ளையாரை வணங்கவும். பின்பு தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும். அதன் பின்பு திருச்சி மலைக்கோட்டை இறைவன் தாயுமானவ சுவாமியை வணங்கவும். இந்த பதிகத்தை ஓதி முடிக்கவும்.
 
இவ்வாறு தினமும் ஓதி வர பிரசவம் எவ்வித துன்பமும் இல்லாமல் பிரசவம் எளிதாக நடக்கும் என்பது திண்ணம்.
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் தாயுமானவா போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
 
 

Thursday, October 3, 2013

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை






1.     பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே


2.     சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே


3.     பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே


4.     பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே


5.     எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ


6.     முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ


7.     ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ


8.     பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ


9.     கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே


          10.     மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ



நீங்கள் மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும்.  இதை  நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும்  இருக்கலாம்.   ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.


குழந்தையில்லா தம்பதிகள் இருவரும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும்.  முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.


பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும்.  அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.  அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.





நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது.  ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.  அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.


ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும்.  மந்திர சக்தி உண்டாகும்.  பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம்.  முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.



தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும்.  குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள்.  நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 


ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்