Thursday, October 31, 2013

எதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்

nataraj 

  தலம்: தில்லை                                                                             ராகம்: மோகனம்

 

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

 
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

 
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

 
உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

 
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற.

 
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

 
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

 
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

 
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

 
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

 
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற.

 
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.

 
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

 
நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

 
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

 
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

 
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

 
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.


தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற.

 
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

 
திருச்சிற்றம்பலம்

ஆக்கம்: மாணிக்கவாசகர்

 

நாம் மேலே காண்பது திருவுந்தியார் பதிகம் ஆகும்.  இதை இயற்றியவர் மாணிக்கவாசகர்.  இதில் மொத்தம் 20 பாடல்கள் உள்ளன.  இந்த 20 பாடல்களிலும் சிவபெருமானின் வெற்றியே கூறப்பட்டுள்ளது.  இதனை பாராயணம் செய்ய செய்ய பகைமை, விரோதம் மற்றும் எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும்.

 

முதன்முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய்க்கிழமை அன்று காலபைரவருக்கு குங்கும நீரால் அபிசேகம் செய்து எலுமிச்சை பழ மாலை அணிவித்து சிவந்த நிற உணவு பொருட்களை படையிலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.  அதாவது மாதுளம் பழம், ஜிலேபி, கேசரி ஆகிய உணவு பொருட்களை படையலிட வேண்டும்.  மேற்கண்ட பதிகத்தை 8 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

வீட்டிற்கு வந்து குத்துவிளக்கேற்றி பருப்பு பொடி கலந்த சாதத்தை படையலிட்டு, குத்து விளக்கை காலபைரவராக நினைத்து 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  பாராயணம் செய்த பின்பு பருப்பு பொடி கலந்த சாதத்தை தானம் செய்ய வேண்டும்.  இவ்வாறு 9 செவ்வாய் கிழமைகள் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் குத்துவிளக்கின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லைகள் அறவே நீங்கும்.

 

சிவபெருமானின் வெற்றியை பாடியே நாமும் நமது வாழ்வில் கர்ம வினைகள் நீங்கப்பெற்று எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வினை வாழ்வோம்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Wednesday, October 30, 2013

திருவாதிரை கிரிவல நாட்கள் – திருத்திய பதிவு

நந்தன – விஜய வருட திருவாதிரை கிரிவல நாட்கள்:

 

16.4.2013 செவ்வாய்க்கிழமைக்கிழமை காலை 9 மணி 34 நிமி 52 வி முதல் 17.4.2013 புதன்கிழமை கிழமை மதியம் 12 மணி 34 நிமி 18 வி வரை

 

13.5.2013 திங்கட்கிழமை கிழமை மாலை 4 மணி 43 நிமி 12 வி முதல் 14.5.2013 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி 45 நிமி 48 வி வரை

 

9.6.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி 2 நிமி 37 வி முதல் 11.6.2013 செவ்வாய்கிழமை இரவு 2 மணி 5 நிமி 10 வி வரை

 

7.7.2013 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி 0 நிமி 3 வி முதல் 8.7.2013 திங்கட்கிழமை காலை 8 மணி 1 நிமி 12 வி வரை (7.7.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 22 நிமி 31 வி முதல் 8.7.2013 திங்கட்கிழமை இரவு 12 மணி 47 நிமி 49 வி வரை அமாவாசை திதியும் சேர்ந்தே வருகிறது)

 

3.8.2013 சனிக்கிழமை மதியம் 11 மணி 16 நிமி 17 வி முதல் 4.8.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை மதியம் 2 மணி 15 நிமி 52 வி வரை (2.8.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 36 நிமி முதல் 3.6.2013 சனிக்கிழமை இரவு 9 மணி 6 நிமி 49 வி வரை துவாதசி திதியும் சேர்ந்தே வருகிறது)

 

30.8.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 20 நிமி 33 வி முதல் 31.8.2013 சனிக்கிழமை இரவு 9 மணி 19 நிமி 5 வி வரை

 

27.9.2013 வெள்ளிக்கிழமை இரவு 2 மணி 12 நிமி 39 வி முதல் 28.9.2013 சனிக்கிழமை அதிகாலை 5 மணி 9 நிமி 51 வி வரை

 

24.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணி 22 நிமி 56 வி முதல் 25.10.2013 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி 16 நிமி 58 வி வரை

 

20.11.2013 புதன்கிழமை மாலை 6 மணி 9 நிமி 33 வி முதல் 21.11.2013 வியாழக்கிழமை இரவு 8 மணி 59 நிமி 21 வி வரை

 

18.12.2013 புதன்கிழமை நள்ளிரவு 1 மணி 4 நிமி 10 வி முதல் 19.12.2013 வியாழக்கிழமை நள்ளிரவு 3 மணி 53 நிமி 10 வி வரை

 

14.1.2014 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி 13 நிமி 19 வி முதல் 15.1.2014 புதன்கிழமை காலை 10 மணி 7 நிமி 25 வி வரை

 

10.2.2014 திங்கட்கிழமை மதியம் 1 மணி 21 நிமி 22 வி முதல் 11.2.2014 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி 19 நிமி 47 வி வரை

 

9.3.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி 21 நிமி 31 வி முதல் 10.3.2014 திங்கட்கிழமை இரவு 11 மணி 13 நிமி 18 வி வரை

 

6.4.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 7 நிமி 32 வி முதல் 7.4.2014 திங்கட்கிழமை காலை 7 மணி 2 நிமி 45 வி வரை

 

இது தவிர, இந்த வருடத்தில் வர இருக்கும் சனிக்கிழமைப்பிரதோஷ நாட்கள் வருமாறு:

20.7.2013

30.11.2013

14.12.2013

12.4.2014

 

விஜய வருடத்தில் வர இருக்கும் சோம வார(திங்கட்கிழமை) பிரதோஷ நாட்கள் வருமாறு:

2.9.2013

30.12.2013

 

தொலை தூரத்தில் வாழ்ந்து வருபவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமாவாசை அல்லது பவுர்ணமி வரும் திருவாதிரை நாளில் கிரிவலம் வந்தாலே போதுமானது.  தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் குறைந்தது ஆறு திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலைகிரிவலம் செல்வது அவசியம்.  இனி ஒரு போதும் மனிதப்பிறவி எடுக்கவே கூடாது என்ற சங்கல்பம் உடையவர்கள் தொடர்ந்து திருவாதிரை கிரிவலம் சென்றாலே போதும்.  பவுர்ணமி கிரிவலத்தை விடவும்பல கோடி மடங்கு உயர்ந்தது இந்த திருவாதிரை கிரிவலம் ஆகும்.  சிவ கணம் ஆக விரும்புவோர், நமது கர்மவினைகளையும், நமது முன்னோர்களின் கர்மவினைகளையும் இந்த ஜன்மத்திலேயே கரைத்து, பரிபூரணமான புண்ணிய ஆத்மாவாக்கிட விரும்புவோர் இந்த பட்டியலைப் பின்பற்றி அண்ணாமலை கிரிவலம் செல்வது நன்று.  வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை (முடிந்தால், இந்த கிரிவலத்தோடு சேர்ந்து அன்னதானமும் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும்)

குறிப்பு: முன்பு வெளியிடப்பட்ட பதிவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சக்தி ஓம்

Tuesday, October 29, 2013

தேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள் – திருத்திய மறுபதிவு

bhairava

நந்தன – விஜய வருட தேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள்: (இந்திய நேரப்படி) (IST)

 

2.5.2013 வியாழக்கிழமை காலை 5 மணி 43 நிமி 49 வி முதல் 3.5.2013 வெள்ளிக்கிழமை காலை 4 மணி 1 நிமி 52 வி வரை (வியாழக்கிழமை மதியம் 12.10 முதல் மதியம் 1.44 வரை ராகுகாலம் வருகிறது)

 

31.5.2013 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி 6 நிமி 26 வி முதல் 1.6.2013 சனிக்கிழமை மதியம் 12 மணி 8 நிமி 17 வி வரை (சனிக்கிழமை காலை 8.58 முதல் காலை 10.35 வரை ராகுகாலம் வருகிறது)

 

29.6.2013 சனிக்கிழமை இரவு 10 மணி 30 நிமி 35 வி முதல் 30.6.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி 36 நிமி 2 வி வரை; (ஞாயிற்றுக்கிழமை மாலை 5.06 முதல் மாலை 6.43 வரை ராகுகாலம் வருகிறது)

 

29.7.2013 திங்கட்கிழமை காலை 10 மணி 47 நிமி 28 வி முதல் 30.7.2013 செவ்வாய் கிழமை மதியம் 12 மணி 00 நிமி 42 வி வரை (ராகுகாலம் வரவில்லை)

 

28.8.2013 புதன் கிழமை நள்ளிரவு 2 மணி 12 நிமி 39 வி முதல் 29.8.2013 வியாழக்கிழமை விடியற்காலை 4 மணி 16 நிமி 55 வி வரை (புதன் கிழமை மதியம் 3.21 முதல் மாலை 4.54 வரை ராகுகாலம் வருகிறது)

 

26.9.2013 வியாழக்கிழமை இரவு 8 மணி 17 நிமி 38 வி முதல் 27.9.2013 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 43 நிமி 43 வி வரை (வெள்ளிக்கிழமை காலை 10.34 முதல் மதியம் 12.04 வரை ராகுகாலம் வருகிறது)

 

26.10.2013 சனிக்கிழமை மாலை 4 மணி 1 நிமி 11 வி முதல் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி 19 நிமி 32 வி வரை (ஞாயிற்றுக்கிழமை மாலை 4.21 முதல் மாலை 5.49 வரை ராகுகாலம் வருகிறது)

 

25.11.2013 திங்கட்கிழமை மதியம் 12 மணி 3 நிமி 7 வி முதல் 26.11.2013 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி 48 நிமி 24 வி வரை (ராகுகாலம் வரவில்லை)

 

25.12.2013 புதன் கிழமை காலை 6 மணி 51 நிமி 37 வி முதல் 26.12.2013 வியாழக்கிழமை விடிகாலை 7 மணி 43 நிமி 34 வி வரை (புதன் கிழமை மதியம் 12.13 முதல் மதியம் 1.38 வரை) ஸ்ரீகால பைரவர் பிறந்த அஷ்டமி இது.

 

23.1.2014 வியாழக்கிழமை இரவு 10 மணி 57 நிமி 40 வி முதல் 24.1.2014 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 44 நிமி 51 வி வரை (வெள்ளிக்கிழமை காலை 10.59 முதல் மதியம் 12.25 வரை ராகுகாலம் வருகிறது)

 

22.2.2014 சனிக்கிழமை காலை 11 மணி 25 நிமி 15 வி முதல் 23.3.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 11 நிமி 24 வி வரை (ராகுகாலம் வரவில்லை)

 

23.3.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி 18 நிமி 5 வி மதியம் 3.45 முதல் 24.3.2014 திங்கட்கிழமை மாலை 6 மணி 21 நிமி 26 வி வரை (திங்கட்கிழமை காலை 7.46 முதல் காலை 9.17 வரை ராகுகாலம் வருகிறது)

 

குறிப்பு: முந்தைய பதிவிலும் திருத்தப்பட்டுள்ளது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, October 28, 2013

விலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்

lord-shiva-and-parvati-QG99_l

வ.எண் விலங்கு - பறவை தலங்கள்
1. அணில் குரங்கணில் முட்டம்
2. ஆமை குரங்கணில் முட்டம், திருமணஞ்சேரி
3. திருச்சிற்றேமம், ஈங்கோய்மலை
4. எறும்பு திருவெறும்பூர், எறும்புச்சுரம்
5. ஏறு(காளை) திருவையாறு
6. கரிக்குருவி மதுரை, வலிவலம்
7. கருடன் சிறுகுடி
8. கழுதை கரவீரம்
9. குதிரை ஆயவந்தி
10. குரங்கு குரங்கணில் முட்டம், குரங்காடுதுறைகள், குரங்குக்கா, குரக்குக்கா, குரக்குத்தளி, வாலிகண்டபுரம்
11. சிங்கம் திருநாவலூர்
12. தவளை ஊற்றத்தூர்
13. நண்டு திருந்துதேவன்குடி, நீடூர்
14. நாரை திருநாரையூர், மதுரை
15. பசு திருவாவடுதுறை, கருவூர், ஆவூர், திருக்கொண்டீச்சுரம், பட்டீச்சுரம், திருவாமாத்தூர்
16. பன்றி சிவபுரம்
17. பாம்பு திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருநாகைக்காமராணம்
18. மயில் மயிலாப்பூர், மயிலாடுதுறை
19. மீன் திருச்சேலூர்
20. முயல் திருப்பாதிரிப்புலியூர், திருக்கானப்பேர், திருக்குற்றாலம்
21. யானை மதுரை, திருவானைக்கா, திருக்காளத்தி, ஸ்ரீசைலம், திருவெண்டுறை
22. வண்டு வாளொளிபுறறூர்
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
அன்பே சிவம்
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

Sunday, October 27, 2013

64 பைரவர்கள் மற்றும் அவர்களின் சக்திகள்

Swarna_Agarshana_bairavar2.166223028

முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார்.  ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது.  பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர்.  64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர்.  64 பைரவர்களும் அவர்தம் சக்திகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண்

பைரவர்

யோகினி

1.

நீலகண்ட பைரவர்

ஜயா

2.

விசாலாட்சி பைரவர்

விஜயா

3.

மார்த்தாண்ட பைரவர்

ஜயந்தி

4.

முன்டனப்பிரபு பைரவர்

அபராஜிதா

5.

ஸ்வஸ்சந்த் பைரவர்

திவ்யமோகினி

6.

அதிசந்துஷ்ட பைரவர்

மகாயோகினி

7.

கேசர பைரவர் ஸித்தமோகினி

8.

ஸம்ஹார பைரவர் கணேஸ்வர யோகினி

9.

விஸ்வரூப பைரவர் ப்ரேதாஸின்யை

10.

நானாரூப பைரவர் டாகினி

11.

பரம பைரவர் காளி

12.

தண்டகர்ண பைரவர் காளராத்ரி

13.

ஸீதாபத்ர பைரவர் நிசாசரி

14.

சிரீடன் பைரவர் டங்கார்ரீ

15.

உன்மத்த பைரவர் வேதாள்யா

16.

மேகநாத பைரவர் ஹும்காரி

17.

மனோவேக பைரவர் ஊர்த்துவகேசி

18.

ஷேத்ரபாலக பைரவர் விருபாட்சி

19.

விருபாஷ பைரவர் சுஷ்காங்கீ

20.

காரள பைரவர் நரபோஜினி

21.

நிர்பய பைரவர் பட்சார்ரி

22.

பிசித பைரவர் வீரபத்ரா

23.

ப்ரேஷ்த பைரவர் தூம்ராக்ஷி

24.

லோகபால பைரவர் கலகப்ரியா

25.

கதாதர பைரவர் கோர ரத்தாட்சி

26.

வஜ்ரஹஸ்த பைரவர் விச்வரூபி

27.

மகாகால பைரவர் அபயங்கிரி

28.

பிரகண்ட பைரவர் வீரகௌமாரி

29.

ப்ரளய பைரவர் சண்டிகை

30.

அந்தக பைரவர் வாராஹி

31.

பூமிகர்ப்ப பைரவர் முண்டதாரணி

32.

பீஷண பைரவர் ராக்க்ஷஸி

33.

ஸம்ஹார பைரவர் பைரவி

34.

குலபால பைரவர் த்வாங்க்ஷிணி

35.

ருண்டமாலா பைரவர் தூம்ராங்கி

36.

ரத்தாங்க பைரவர் பிரேதவாகினி

37.

பிங்களேஷ்ண பைரவர் கட்கினி

38.

அப்ரரூப பைரவர் தீர்க்கலம் போஷ்யா

39.

தராபாலன பைரவர் மாலினி

40.

ப்ரஜாபாலன பைரவர் மந்திரயோகினி

41.

குல பைரவர் காளி

42.

மந்திரநாயக பைரவர் சக்ரிணி

43.

ருத்ர பைரவர் கங்காளி

44.

பிதாமஹ பைரவர் புவனேஸ்வரி

45.

விஷ்ணு பைரவர் த்ரோடகீ

46.

வடுகநாத பைரவர் மகாமாரீ

47.

கபால பைரவர் யமதூதி

48.

பூதவேதாள பைரவர் காளி

49.

த்ரிநேத்ர பைரவர் கேசினி

50.

திரபுராந்தக பைரவர் மர்த்தினி

51.

வரத பைரவர் ரோமஜங்கே

52.

பர்வதவாகன பைரவர் நிர்வாணி

53.

சசிவாகன பைரவர் விசாலி

54.

கபாலபூஷன பைரவர் கார்முகி

55.

ஸர்வக்ஞ பைரவர் தோத்யமினம

56.

ஸர்வதேவ பைரவர் அதோமுக்யை

57.

ஈசான பைரவர் முண்டாக்ரதாரிணி

58.

ஸர்வபூத பைரவர் வியாக்ரிணி

59.

கோரநாத பைரவர் தூங்ஷிணி

60.

பயங்கர பைரவர் பிரேதரூபிணி

61.

புத்திமுக்திபலப்ரத பைரவர் தூர்ஜட்டை

62.

காலாக்னி பைரவர் கோர்யா

63.

மகாரௌத்தர பைரவர் கராளி

64.

தட்சிணாபிஸ்தித பைரவர் விஷலங்கர்யா

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Saturday, October 26, 2013

இறைவழிபாட்டில் திருவிளக்கின் முக்கியத்துவம்

1379539893817

vallalaar

8225171454_b7a6018ee4_b

09-1352457054-flower-diya-60020121129_CHI_0945Deepavali1Nacathira_Deepam.183234021_std

 

திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது.  இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…!  தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன.  கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது.  தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை.  தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை.  ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.

 

விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:

மண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.
வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும்.
பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.
வெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.

 

விளக்கின் வகைகள்:

1. குத்து விளக்கு

உலோகத்தினால் செய்யப்பட்டது.

2. அகல் விளக்கு மண்ணால் செய்யப்பட்டது.
3. காமாட்சி விளக்கு உலோகத்தினால் செய்யப்பட்டது.
4. கிலியஞ்சட்டி விளக்கு மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.
5. செடி விளக்கு உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.
6. சர விளக்கு உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.

 

திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)

தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர்.  தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும்.  இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர். 

எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.  பூவால் குளிர்விக்கலாம்.  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.  வாயால் ஊதி அணைக்கக்கூடாது.  அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும். 

குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.  தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும்.  ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர்.  இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும். 

உயரம் அதிகமாக உள்ளதாக  நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர்.  இதுவும் தவறாகும்.  இது திருமாலை அவமதிப்பதாகும்.  பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர்.  அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

தீபங்கள் ஏற்றும் இடங்கள்:

வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

 

தீபங்கள் 16 வகைப்படும். அவை…

 1. தூபம்
 2. தீபம்
 3. அலங்கார தீபம்
 4. நாகதீபம்
 5. விருஷ தீபம்
 6. புருஷா மிருக தீபம்
 7. சூலதீபம்
 8. கமடதி (ஆமை) தீபம்
 9. கஜ (யானை) தீபம்
 10. வியக்ர (புலி) தீபம்
 11. சிம்ஹ தீபம்
 12. துவஜ (பொடி) தீபம்
 13. மயூர (மயில்)தீபம்
 14. பூரண கும்ப (5 தட்டு) தீபம்
 15. நட்சத்திர தீபம்
 16. மேரு தீபம்

 

விளக்கேற்றும் காலம்:

வேளை நேரம்
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)

மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.  நமது கர்ம வினைகள் நீங்கும்.  தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும்.  நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.  தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும்.  தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும்.  ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.  குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும்.  குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)

ஒரு முகம்

நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.  துன்பங்கள் நீங்கும்.  நன்மதிப்பு உண்டாகும்.

இரண்டு முகம்

கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.

மூன்று முகம்

புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.

நான்கு முகம்

அனைத்து பீடைகளும் நீங்கும்.  அனைத்து செல்வங்களும் கிட்டும்.

ஐந்து முகம்

எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும்.  குடும்ப ஒற்றுமை உண்டாகும்.  திருமணத்தடை நீங்கும்.  புண்ணியம் பெருகும்.

 

விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)

கிழக்கு

இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும்.  அனைத்து துன்பங்களும் நீங்கும்.  குடும்பம் செழிப்புறும்.  பீடைகள் நீங்கும். 

மேற்கு

கடன் தொல்லை நீங்கும்.  சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.  சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  பங்காளிப்பகை நீங்கும்.

வடக்கு

திருமணத்தடை நீங்கும்.  சர்வ மங்கலமும் உண்டாகும்.  பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும்.  சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

தெற்கு

மரணபயம் உண்டாகும்.  துன்பங்கள் வந்து சேரும்.  பாவம் வந்து சேரும்.  கடன் உண்டாகும்.

 
 
விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:
 
1. நெய் கடன் தீரும்.  வருமானம் அதிகரிக்கும்.  நினைத்தது நடக்கும்.  கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.
2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும்.  ஆரோக்கியம் அதிகரிக்கும்.  நவகிரகங்களின் அருள் உண்டாகும்.  தாம்பத்ய உறவு சிறக்கும்.  அனைத்து பீடைகளும் விலகும்.
3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்.  துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.
4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும்.  தேவதை வசியம் உண்டாக்கும்.  அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.  மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.
6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.
7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.
8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும்.  குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது. 
9.

விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்

பராசக்தி அருள் உண்டாக்கும்.  மந்திர சித்தி தரும்.  கிரகதோஷம் நீக்கும். 

குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.  மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.  

 

தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:

விநாயகர் தேங்காய் எண்ணெய்
திருமகள், முருகன் நெய்
குலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்
பைரவர் நல்லெண்ணெய்
சக்தியின் வடிவங்கள்

விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய்  எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்

ருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்
எல்லா தெய்வங்கள் நல்லெண்ணெய்
நாராயணன் நல்லெண்ணெய்
 

விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:

இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.
தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும்.  செல்வம் சேரும்.  திருமகள் அருள் உண்டாகும்.
வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும்.  மன அமைதி உண்டாகும்.  குடும்ப அமைதி உண்டாகும்.  தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும்.  குழந்தைப்பேறு உண்டாகும்.
வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும்.  ஆயுள் நீடிக்கும்.  குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.
பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும்.  வம்சம் விருத்தியாகும்.
வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.
சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும்.  மக்கட் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.  அம்பிகையின் அருள் உண்டாகும்.  வியாதிகள் நீங்கும்.  செய்வினை நீங்கும்.  எதிரிகள் பயம் நீங்கும்.  தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்.  மங்களம் உண்டாகும்.
பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.

 

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:

ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

 

செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.


முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:

வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.

பொதுவான விதிமுறைகள்:

 • விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.  குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
 • பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
 • விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
 • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.  இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.
 • ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
 • தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
   

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

 

விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

 

இப்பதிவினை எழுத தூண்டிய அருட்பெரும்சோதி கண்ட வள்ளல் ராமலிங்க அடிகளின் பாதம் பணிந்து அவருக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப் படுகிறது.

 

அகர தீபமோ குகநாதம்

உகர தீபமோ கணநாதம்

மகர தீபமோ பூதநாதம்

மகா தீபமோ சிவநாதம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

 

Friday, October 25, 2013

தெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்

Lingam

வ.எண்

வழிபட்ட தெய்வம் வணங்கிய தலம்

1.

திரிமூர்த்தி திரயம்பகேஸ்வரம் (மகாராஷ்டிரம்), பேறு (அமெரிக்கா)

2.

பிரம்மா திருவிரிஞ்சிபுரம், சீர்காழி, அயனீச்சுரம்(அயனாவரம்), பர்மா
3. திருமால் திருமாற்பேறு, பேறு (அமெரிக்கா), திருவீழிமிழலை, சிதம்பரம், சக்கரப்பள்ளி, காசி, திருவாஞ்சியம்
4. ருத்திரன் ருத்திர ப்ரயாகை, ருத்ர கோடி, ரோம் (இத்தாலி)
5. பராசக்தி திருவண்ணாமலை, திருச்சத்தி முற்றம், காஞ்சி, மதுரை, மயிலை, காசி, திருவாவடுதுறை, கிரானேஸ்வரம், அம்பா சமுத்திரம், அம்பர்சிக் (ரஷ்யா)
6. முருகன் சேய்ஞ்ஞலூர், திருமுருகன் பூண்டி, சிக்கல், திருச்செந்தூர்
7. விநாயகர் திருச்செங்காட்டங்குடி கணபதீச்சுரம், திருக்கச்சி அனேகதங்காவதம்
8. ஐயப்பன் சாத்தமங்கை, சாத்தனூர்
9. காளி உஜ்ஜயினி மாகாளம், திருவாலங்காடு, அம்பர் மாகாளம், இரும்பை மாகாளம்
10. கலைமகள் திருநெய்த்தானம் (தில்லைத்தானம்), சீர்காழி, திருக்கச்சபேசம், திருமெய்ஞானம் (கடவூர் மயானம்), வாணியம்பாடி
11. திருமகள் ஸ்ரீசைலம், திருநின்றவூர், திருவேட்களம், திருத்தெங்கூர்
12. இந்திரன் மதுரை, இந்திர நீலப்பருப்பதம், கண்ணார்க்கோயில், திருவெறும்பூர்
13. அனுமன் குரங்காடுதுறை, திருக்குரக்குக்கா, திருவலிதாயம் (பாடி - சென்னை), இராமேஸ்வரம், திருவுசாத்தானம்
14. நாகராசன் முதலிய நாக தெய்வங்கள் நாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்), நாகளேச்சுரம் (நாகாலாந்து), நாகர் கோவில், திருப்பாம்புரம்
15. காலன் (யமன்) தருமபுரம், திருக்கடவூர்
16. மாரியம்மன் திருவேற்காடு
17. சூரியன் கும்பகோணம், சூரியனார் கோவில், பரிதி நியமம், பரிதியூர்
18. சந்திரன் திங்களூர், சோமேஸ்வரம் (சோமநாதர் கோவில் – குஜராத்)
19. செவ்வாய் உஜ்ஜயினி, வைத்தீஸ்வரன் கோவில்
20. புதன் திருவெண்காடு
21. வியாழன் ஆலங்குடி, திருவலிதாயம்(பாடி - சென்னை)கும்பகோணம்
22. சுக்கிரன் திருமயிலை (மயிலாபுரி - மயிலாப்பூர் – சென்னை)
23. சனி திருநள்ளாறு
24. ராகு சீர்காழி, திருநாகேஸ்வரம், திருக்காளத்தி
25. கேது சீர்காழி, கீழ்பெரும்பள்ளம், திருக்காளத்தி
26. வராகமூர்த்தி திருக்கச்சி, கச்சூர், திருச்சிவபுரம்
27. வாமனமூர்த்தி மாணிக்குழி, கண்ணார்க் கோயில்
28. நரசிம்மமூர்த்தி சிங்கபுரி (சிங்கப்பூர்)
29. பரசுராமர் திருவஞ்சைக்களம் (சேரநாடு - சேரளம் – கேரளா), திருநின்றவூர்
30. ராமன் இராமேஸ்வரம், திருவுசாத்தானம், திருக்காளத்தி, பாலைத்துறை, இராமனதீச்சுரம், திருமறைக்காடு
31. கண்ணன் கிருஷ்ணகிரி

குறிப்பு: எமது அறிவுகெட்டியவரை தெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்களை தெரிவித்துள்ளேன்.  வாசக அன்பர்களுக்கு தெரிந்த தெய்வங்கள் சிவனை வழிபாடு செய்த தலங்களை கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.  அது இந்த பதிவினை மேலும் செம்மைபடுத்த உதவும்.  மிக்க நன்றி…!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Thursday, October 24, 2013

அகத்தியரின் அருள் மழை

 agathiyarசித்தர்களின் தலைவர் அகத்தியர்

agathiஅன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான்

 

அகத்தியர்” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம்.  கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுபவர் நம் அகத்தியர் பெருமான்.  சித்தர்களுக்கெல்லாம் தலைவர் இவரே.  முக்காலமும் அறிந்தவர்.  கடவுளர் அனைவரின் அருளை ஒருங்கே பெற்றவர் நம் அகத்தியர் பெருமான்.

 

அகத்தியர் வாழும் மலை பொதிகை மலை ஆகும்.  சிவபெருமானின் திருமணத்தின் போது ஏற்பட்ட பூமி சமமற்ற நிலையை நீக்க இறைவனால் தென்னாடு அனுப்பப்பட்டவர்.  தென்னாட்டில் சிவசக்தி திருமணத்தை இறைவன் அருளால் கண்டவர்.  சித்த மருத்துவத்தின் தந்தை இவரே.  இவருக்கு தெரியாத மருத்துவ முறைகளே இல்லை.  அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியவர். 

 

சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர்.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.  கருணையில் தாயைவிட மேலானவர்.  வீணை வாசிப்பதில் சிறந்த சிவபக்தனும் இலங்கை வேந்தனுமாகிய இராவணனை வென்றவர்.  காவிரியை அடக்கி கமண்டலத்தில் நிறுத்தியவர்.  அறுமுகக்கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர்.  ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியவர்.  விந்தியமலையை அடக்கியவர்.  வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர்.

 

ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் மற்றும் சிவகீதை இவற்றை உபதேசித்தவர்.  கும்பத்திலிருந்து தோன்றியவர்.  தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர்.  முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர்.  சித்தர்களுக்கெல்லாம் சித்தர்.  இவர் இயற்றிய அகத்தியர் ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது.  அகத்தியர் எழுதிய நூல்கள் பல.  அவற்றுள் சில மட்டுமே கிடைத்துள்ளன.  மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் அகத்தியரே.  இதற்கு அகத்தியர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய அகத்திய சம்ஹிதை என்ற நூலே சாட்சி.

 

அகத்தியருக்கு சிவபெருமான் எப்போது காட்சியளித்தாலும் திருமணக்கோலத்திலேயே காட்சி தந்துள்ளார்.  அகத்தியரின் காலம் 9000 ஆண்டுகளுக்கு முன்பானது.  இன்றும் அகத்தியர் ஜீவநாடியில் நம்மில் பலருக்கு வழிகாட்டியுள்ளார்.  இவரின் கருணை அளவிடற்கரியது.  எல்லா உயிர்களின் துயரை துடைத்து அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.  நவகிரகங்களில் புதனை பிரதிபலிப்பவர்.  அறிவின் சிகரம்.  சித்த வைத்தியத்தின் பிதாமகர் இவரே.

 

அகத்தியரின் வேறு பெயர்கள்:

  1. தமிழ் முனி
  2. மாதவ முனி
  3. மாமுனி 
  4. குறுமுனி
  5. குருமுனி
  6. திருமுனி
  7. முதல் சித்தர்
  8. பொதிகை முனி
  9. அமர முனி
  10. குடமுனி

 

வழிபடும் முறை:

முக்கரணங்களின் சுத்தியோடு மஞ்சள் பூசிய சிறுபீடத்தில் அகத்தியரின் சிலையையோ அல்லது அவரது படத்தையோ வைத்து அதற்கு முன்பாக இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  சுத்தமான செம்பில் நீரை வைக்க வேண்டும். பின்பு அவரது தியான செய்யுளை மனதார 3 முறை செபிக்க வேண்டும்.

 

தியானச் செய்யுள்:
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

 
பதினாறு போற்றிகள்:
 1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
 2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
 3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
 4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
 5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
 6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
 7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
 8. இசைஞான ஜோதியே போற்றி!
 9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
 10. காவேரி தந்த கருணையே போற்றி!
 11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
 12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
 13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
 14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
 15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
 16. இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
 
படையல்:

இளம் பச்சை நிற துணியை அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை வழிபாட்டை ஆரம்பிக்கவும்.  நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” அல்லது “ஓம் அகத்தீசாய நமஹ” என்று 108 முறை செபிக்க வேண்டும்.

 
அகத்திய சித்தரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:
 1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
 2. கல்வித்தடை நீங்கும்.
 3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
 4. முன்வினை பாவங்கள் அகலும்.
 5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
 6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
 7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
 8. சகலவிதமான நோய்களும் தீரும்.
 9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

 

அகத்தியர் பெருமானை வழிபட வழிபட நமது நெடுநாளைய பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக தீர ஆரம்பிக்கும்.  நாளடைவில் அவரது கருணைக்கு நாம் பாத்திரமாவோம்.  நமது வாழ்க்கையை மாற்றி அமைப்பார் அகத்தியர்.  தவறு செய்பவர்களையும் மன்னித்து திருத்துவார்.  பிறவி என்னும் கடலை கடக்க உதவுவார்.  நமது கர்மவினைகளை அடியோடு போக்குவார்.

 

கும்ப லக்கினம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் காட்சி தருவார் என்பது கூடுதல் செய்தி.

 

இந்த பதிவினை எழுத தூண்டிய கொல்லிமலையில் வாசம் செய்யும் அகத்தியரின் சீடர் போகர் சித்தரின் பாதம் பணிந்து இந்த பதிவினை போகர் பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி

ஓம் போக சித்தாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Wednesday, October 23, 2013

விவசாயத்தின் தெய்வம் வாராகி

varahi

os98

Varahi Amman

 

நாம் மேலே பார்க்கும் தெய்வம் சப்த மாதாக்களில் ஒருவளும், வராக மூர்த்தியின் தங்கையும், 64 யோகினிகளில் ஒருவளும், உன்மத்த பைரவரின் துணைவியுமான வலிமை மிக்க வாராகி ஆவாள்.

 

பன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராகி, பராசக்தியின் படைத்தலைவி ஆவாள்.  பராசக்தியின் முக்கிய அமைச்சரும் இவளே.  வாராஹம் எனப்படும் பன்றியின் முகத்தை கொண்டதனால் வாராகி என்றழைக்கப்படுகிறாள்.  இவள் திருமால், அம்பிகை மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுளரின் அம்சம் ஆவாள்.  எருமையை வாகனமாக கொண்டவள்.

 

பெண் தெய்வம் ஆதலால் அம்பிகையின் அம்சம், வாராஹ முகம் கொண்டதனால் திருமாலின் அம்சம்,  மூன்று கண்களை கொண்டதனால் சிவபெருமானின் அம்சம் ஆவாள்.  எதையும் அடக்கும் வல்லமை உடையவள்.  சப்தமாதர்களில் மிகவும் வேறுபட்டவள்.  பலத்தில் மிருக பலம் கொண்டவள்.  குணத்தில் தேவகுணத்தை கொண்டவள்.  தன்னை அண்டிவயர்களின் துயரை போக்குபவள்.  ஊழிக்காலத்தில் உலகை பாதுகாத்த பெருமை இவளையே சாரும்.

 

திருமாலின் வராக அவதாரத்தில் திருமாலுக்கு பெரிதும் துணை புரிந்த பெருமை இவளுக்குண்டு.  இவளின் துணையில்லாமல் வராகமூர்த்தி உலகை தன் கோரைப்பற்களால் தாங்கியிருக்க முடியாது.  தேவர்கள், அசூரர்கள் மற்றும் மனிதர்கள் இவர்களால் போற்றப்படுவள் இவளே.  மிகவும் துடிப்பானவள்.  மிகவும் வேகமானவள்.  சப்தமாதர்களில் ஐந்தாவதாக தோன்றியவள்.

 

கோபத்தில் உச்சம் இவளே.  அன்பு காட்டுவதிலும், ஆதரவு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே.  பராசக்தி வாராகியின் துணை கொண்டே 14 உலகங்களையும் வெற்றி கொண்டாள்.  பண்டாசூரனை பராசக்தி வதம் செய்ய துணை புரிந்தவள் இவளே.

 

எதிரிகளை அழிப்பவள்.  செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள்.  பயத்தினை போக்குபவள்.  வெற்றியைத் தருபவள்.  எல்லா நலன்களையும் தருபவள்.  ராசராச சோழனின் வெற்றி தெய்வம் இவளே.  இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான்.  ராசராசனுக்கு தோல்வியில்லா நிலையை தந்தவளும் இவளே.

 

நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப வி்வசாதயத்தின் தெய்வம் இவளே.  கலப்பை இவளது ஆயுதம்.  பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கா தலத்தின் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே.  ராசராச சோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தை தொடங்குவான் என்று வரலாறு தெரிவிக்கிறது.  தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராசராச சோழன்.

 

இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு.  பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும்.  ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும்.  சோழர்களின் குலதெய்வம் துர்க்கை.  துர்க்கையின் தளபதி வாராகி ஆவாள்.

 

சோழர்களின் காலத்தில் வாராகி வழிபாடு சிறந்து விளங்கியது.  வாராகியின் கலப்பை ஆயுதம் விவசாயத்தினை பெருக்கும் தன்மையுடையது.  இவளின் அருள் பெற்றவர் விவசாயத்தில் சிறந்து விளங்குவர் என்பது எமது அனுபவ உண்மை.  காலப்போக்கில் இவளின் வழிபாடு குறைந்து விட்டது.  அதனால் தான் விவசாயம் மோசமான நிலையை எய்தியுள்ளது.

 

வாராகியை வழிபட்ட சோழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர்.  அதனால் தான் சோழநாடு சோறுடைத்து என்றழைக்கப்பட்டது.  சோழர்கள் வாராகியின் அருள் கொண்டே போர்களில் வெற்றி வாகை சூடினர்.  சோழ நாட்டில் மக்கள் எதிரிகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர்.

 

இப்போதைக்கு தேவை நாம் ஒவ்வொருவரும் வாராகி வழிபாடு செய்வது தான்.  வாராகி வழிபாடு செய்வதன் மூலம் நம் பாரத நாட்டினை எதிரிகளிடமிருந்து காக்க முடியும்.  நம் நாட்டினை விவசாயத்தில் முதலிடம் பிடிக்க செய்து உலகிற்கே உணவளிக்க முடியும்.  வாராகியை வழிபடுவது மிகவும் எளிது.  பக்தர்கள் அழைத்தால் ஓடோடி வருவாள்.

 

வாராகியின் 12 திருப்பெயர்களை அனுதினமும் துதித்தால் எவ்வித துன்பமும் நேராது என்பது உண்மை.  எல்லா செயல்களும் வெற்றியுடனே தான் முடியும்.  வாராகியின் 12 திருப்பெயர்கள்:-

 

   1. பஞ்சமி
   2. தண்டநாதா
   3. சங்கேதா
   4. சமேச்வரி
   5. சமய சங்கேதா
   6. வாராகி
   7. போத்ரிணி
   8. சிவா
   9. வார்த்தாளி
   10. மகா சேனா
   11. ஆக்ஞா சக்ரேஸ்வரி
   12. அரிக்நி

 

பஞ்சமி நம் பஞ்சத்தை போக்குவாள்.  தண்டநாதா தவறு செய்வோரை தண்டிப்பாள்.  மகா சேனா எதிரிகளை அழிப்பாள்.  ஆக்ஞா சக்ரேஸ்வரி நம் ஞானக்கண்ணை திறப்பாள்.

 

தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

 

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

 

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

 

வாராகிக்கு பல வடிவங்கள் உண்டு.  இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

வாராகி மாலை என்றொரு 32 பாடல்கள் கொண்ட சிறப்பான நூல் இவளின் பெருமைகளை கூறுகிறது. வாராகி மாலை தனிப்பதிவாக வெளி வரும்.

 

ஓம் வாம் வாராஹி நமஹ

ஓம் சிவ சக்தி ஓம்

Tuesday, October 22, 2013

பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள்

Swarna_Agarshana_bairavar2.166223028

swarna bairavar 123

613

 http://3.bp.blogspot.com/-0EqrJo67Ypk/UYSNPKi7NqI/AAAAAAAAC9E/bpgmEIsqT7o/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg

 

        1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
        2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
        3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
        4. ஓம் பக்தப்ரிய நமஹ
        5. ஓம் பக்த வச்ய நமஹ
        6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
        7. ஓம் ஸித்தித நமஹ
        8. ஓம் கருணாமூர்த்தி நமஹ
        9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
        10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
        11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
        12. ஓம் ரசஸித்தித நமஹ

 

சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன.  அவற்றில் 12 ஐ மிக முக்கியமானதாக கொள்கிறார்கள்.  அவற்றை மேலே காணலாம்.

அந்த 12 திருப்பெயர்கள்:

ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸ்வர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்ட ப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ண ஸித்தித, ரசஸித்தித

இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார்.

எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து செபித்தால் மந்திர செபமாகவும், அப்படியே பெயர்களை மட்டும் சொல்லுதல் நாம செபமாகவும் கொள்ளப்படும்.

மந்திர செபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு.  ஆனால் நாம செபத்திற்கு கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.  இதே 12 பெயர்களை 9 முறை சொன்னால் 108 தடவைகள் என்றாகும்.  இந்த திருப்பெயர்களை சொல்லுதல் மூலம் சொர்ண பைரவரின் அருள் மிக எளிதில் கிடைக்கும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Monday, October 21, 2013

சிவபூசைக்குரிய 25 சிவ வடிவங்கள்

64-siva

சிவபெருமானின் 64 வடிவங்களில் சிவபூசைக்குரிய வடிவங்கள் 25 என ஆகமங்கள் உரைக்கின்றன.  அவை:-

        1. லிங்கோத்பவர்
        2. சுகாஸநர்
        3. சக்திதர மூர்த்தி
        4. கல்யாண சுந்தரர்
        5. அர்த்த நாரீச்வரர்
        6. சோமாஸ்கந்தர்
        7. சக்ரவரதர்
        8. திரிமூர்த்தி
        9. ஹரிமர்த்தனர்
        10. தக்ஷிணாமூர்த்தி
        11. பிஷாடனர்
        12. கங்காளர்
        13. காமாரி
        14. காலசம்ஹார மூர்த்தி
        15. ஜலந்தராரி
        16. திரிபுராரி
        17. சரபமூர்த்தி
        18. நீலகண்டர்
        19. திரிபாதர்
        20. ஏகபாதர்
        21. பைரவர்
        22. வ்ருஷபாரூடர்
        23. சந்திரசேகரர்
        24. நடராஜர்
        25. கங்காதரர்

 

சிவபெருமானின் 64 வடிவங்களின் விளக்கம் தனிப்பதிவாக வெளிவரும்.  மேலும் சிவபூசைக்குரிய 25 சிவ வடிவங்களின் விளக்கமும் தனிப்பதிவாக வெளிவரும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்