Showing posts with label ஓம் சிவ சிவ ஓம். Show all posts
Showing posts with label ஓம் சிவ சிவ ஓம். Show all posts

Sunday, October 20, 2013

ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்

free-download-shiva-parvati-wallpapers6

 

 

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினைமாளும்
சிவ சிவ என்றிட தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.


இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம்.  இதை அனைவரும் அறிவர்.  இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும்.

நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து)

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து)

சிவய சிவ சிவ - அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து)

சிவ சிவ - காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து)

மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:-

தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள்,  செபிக்கமுடியாது.  அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும்.  அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும்.  தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனிதப்பிறவியிலிருந்து தேவராக (சிவகணமாக) மாறமுடியும்.  அவ்வாறு மேன்மை பெற்று சிவகணமாகி முக்தி பெற்று சிவகதியை (சிவனுள் ஒடுங்குதல் - பிறவியிலா பெருநிலை) அடையமுடியும்.

இது சிவ சிவ என்ற மந்திரத்தின் விளக்கம் மட்டுமே.  ஒவ்வொரு சித்தர்களுக்கும் மூலமந்திரங்கள் உண்டு.  அவையாவன:-

1. நந்தீசர் ------  சும்

2. போகர் ------  சம்

3. அகத்தியர் ------ ஞாம்

4. கொங்கணர் ------- ணம்

5. சட்டைமுனி ------- டம்

6. சுந்தரானந்தர் ------ நம்

7. ராமதேவர் ------- தம்

8. கருவூரார் ------ பம்

9. பிரம்மமுனி ------ மம்

10. ரோமர் ------ ரம்

11. மச்சமுனி ------ யம்

12. புண்ணாக்கீசர் ------ வம்

13. இடைக்காடர் ------- லம்

14. கோரக்கர் ------- ளம்

15. வாசமுனி ------- றம்

16. கமலமுனி ------ ழம்

17. அழுகண்ணி சித்தர் ------ னம்

18. திருமூலர் ------ ஓம்

இம்மூலமந்திரங்களில் திருமூலர் சித்த தெய்வத்தின் மூலமந்திரம் ஓம் ஆகும். 

ஓம் சிவ சிவ ஓம் :-

ஓம் --- ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) --- இரு எழுத்துக்கள்

சிவ --- ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) --- நான்கு எழுத்துக்கள்

ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் - 5 + சக்தி - 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம்.  சிவ சிவ - சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது).  ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது.  சக்தியின் வடிவுடையது.  ஆதிசக்தியை குறிப்பது.  ஓம் சிவ சிவ ஓம் --- இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது).  சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் - ஆறு எழுத்துக்கள்).  சிவசக்தி வடிவமே உலக தத்துவம்.  இதுவே லிங்க யோனி தத்துவம்.  சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம்.

திருமூலரின் மூலமந்திரம் - ஓம்

திருமூலர் அருளிய மந்திரம் - சிவ சிவ

இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம். 

தமிழ் மெய்யெழுத்துக்கள் --- 18

சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் --- 18

அவற்றுள் முதல் (சும் --- நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் --- திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம் இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,.......,னம்) மொத்தம் - 18.  இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் --- கம் (கணபதியின் மூலமந்திரம்).  கணபதியும் ஒரு சித்தர் தாம்.  அவரது சமாதி இமயமலை சாரலில் உள்ளதாக படித்திருக்கிறேன். அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும்.

ஆறு ஆதார தியான மந்திரங்கள்:

மூலாதாரம் --- கணபதி --- ஓம் சிவா

சுவாதிட்டானம் --- பிரம்மா --- நம் சிவ ஓம்

மணிபூரகம் --- விஷ்ணு --- மங் சிவ ஓம்

அநாகதம் --- ருத்திரன் --- சிங் சிவ ஓம்

விசுத்தி --- மகேஸ்வரன் --- வசி சிவ ஓம்

ஆக்ஞை --- சதாசிவம் --- யம் சிவ ஓம்

என்ன வியப்பு...!  மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Thursday, October 3, 2013

ஓம் சிவ சிவ ஓம் - செபிக்கும் முறை




“ஓம் சிவ சிவ ஓம்” செபிக்கும் முறை:


தேவையான பொருட்கள்:

ஒரு மஞ்சள் துண்டு, மஞ்சள் நிற வேட்டி, இரண்டு 5 முக ருத்ராட்சங்கள், இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள், நாட்டு சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு


தொடங்க வேண்டிய காலம்:

அமாவாசை திருநாள் – குரு ஓரை


தொடங்க வேண்டிய இடம்:

பாடல் பெற்ற சிவத்தலம் அல்லது ஜீவ சமாதி அல்லது பசு கட்டப்பட்டிருக்கும் தொழுவம் அல்லது உயரிய மலைக்கோவில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகே உள்ள இடம் அல்லது வீட்டின் பூசையறை


தொடங்க வேண்டிய முறை:


1.    
மஞ்சள் வேட்டியை இடுப்பில் தொப்புள் தெரியாத அளவிற்கு கட்டிக் கொள்ளவும்.  மஞ்சள் துண்டை தரையில் விரித்து அதில் அமரவும்.

2.    
இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி அதன் முன்னர் எலுமிச்சைப் பழச்சாறு வைக்கவும்.

3.    
முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் ரேணுகா பரமேஸ்வரியை நமஹ – 1 முறை)

4.    
இரண்டாவதாக விநாயகரை வணங்கவும். (ஓம் கம் கணபதயே நமஹ – 1 முறை)

5.    
மூன்றாவதாக உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கவும். (உதாரணமாக ஓம் மஹா முனீஸ்வராய நமஹ – 1 முறை)

6.    
பின்பு “ஓம் தக்ஷிணாமூர்த்தயே நமஹ” என 108 முறை செபிக்கவும்.

7.    
பின்பு “ஓம் சிவ சிவ ஓம்” என்ற சிவமந்திரத்தை முதலில் ஒரு வாரம் வரையில் 10 நிமிடங்கள் இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வீதம் அடக்கிக் கொண்டு செபிக்கவும்.  ஒவ்வொரு வாரமும் 10 நிமிடங்கள் அதிகரித்துக் கொண்டே சென்று கடைசியாக 60 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் செபிக்கவும்
.
8.    
பின்பு “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என 108 முறை செபிக்கவும்.

9.    
கடைசியாக பின்வரும் சித்தர் துதியை செபித்து முடிக்கவும்.


·        ஓம் அருணாசலாய நமஹ
·        ஓம் காகபுசுண்ட தேவாய நமஹ
·        ஓம் அகத்தீசாய நமஹ
·        ஓம் நந்தீசாய நமஹ
·        ஓம் போக சித்தாய நமஹ
·        ஓம் கோரக்க தேவாய நமஹ
·        ஓம் புலிப்பாணி தேவாய நமஹ
·        ஓம் கருவூர் தேவாய நமஹ
·        ஓம் ராமலிங்க தேவாய நமஹ

10.  
கடைசியாக எலுமிச்சைப்பழச்சாறை குடிக்கவும்.



சாவு தீட்டு போன்ற காரியங்களை விலக்கவும்.  சாவிற்கு சென்று வந்தால் 5 நாட்கள் தீட்டு உண்டு.  நெருங்கிய ரத்த உறவாக இருப்பின் 30 நாட்கள் தீட்டு உண்டு.  பிள்ளைப்பேறு தீட்டு 40 நாட்கள் உண்டு.  அசைவம் சாப்பிட்டு விட்டால் 5 நாட்கள் தீட்டு உண்டு.


அவசியம் தீட்டுக்காரியங்களில் கலந்து கொள்ள நேரிட்டால் மேற்கண்ட நாட்கள் வரை மந்திர செபம் செய்யக்கூடாது.


மந்திர செபம் செய்ய செய்ய நமது கர்மவினைகள் அடியோடு அழிய ஆரம்பிக்கும்.  மந்திர செபம் 1,00,000 அளவை எட்டும் போது நீங்கள் ஒரு அசாதாரணமான மனிதர் என்பதை உணருவீர்கள்.  தொடர்ந்து செபம் செய்ய இயலாமல் போவதுமுண்டு.  அதற்காக வருந்த வேண்டாம்.  மீண்டும் தொடர்ந்து செபிக்கவும்.  தினமும் ஒரு மணி நேரம் செபிப்பவர்களுக்கு அருட்காட்சிகள் காண கிடைக்கும்.  மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் இவர்களின் அருளாசி கிட்டும்.  கர்மவினைகள் தீரும்.  நிம்மதியான வாழ்வு கிட்டும்.  ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்கும்.



இந்த மந்திர செபத்தில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவர் மந்திரங்கள் செபிக்கப்படவேண்டும்.  அப்போது தான் சிவ வழிபாடு முழுமை பெறும்.  சிவ வழிபாட்டில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் பைரவரின் பங்கு பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!


ஓம் ஆதிரை நாயகா போற்றி…!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!


ஓம் சிவ சிவ ஓம்