தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
தென்னாடுடையை சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
| வ.எண் | தலம் | இருப்பிடம் | தலச்சிறப்பு |
| 1. | திருக்கண்டியூர் | தஞ்சை மாவட்டம் | பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம் |
| 2. | திருக்கோவிலூர் | விழுப்புரம் மாவட்டம் | அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம் |
| 3. | திருவதிகை | விழுப்புரம் மாவட்டம் | திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம் |
| 4. | திருப்பறியலூர் | நாகை மாவட்டம் | தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம் |
| 5. | திருவிற்குடி | நாகை மாவட்டம் | சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம் |
| 6. | திருவழுவூர் | நாகை மாவட்டம் | யானையை கொன்று தோலை அணிந்த தலம் |
| 7. | திருக்குறுக்கை | நாகை மாவட்டம் | மன்மதன் எரிக்கப்பட்ட தலம் |
| 8. | திருக்கடவூர் | நாகை மாவட்டம் | காலனை காலால் உதைத்த தலம் |
வழிபாடு செய்யக்கூடிய 25 சிவ வடிவங்களில் பைரவரும் ஒருவர். பைரவரின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. காலத்ததை வென்ற தெய்வங்கள் பதிவில் காளி மற்றும் காலபைரவரின் பெருமைகளை ஆன்மீகச்சுடர் பதிவாக வெளியிட்டுருந்தது. அதனை படித்து பயன் பெற்ற ஒரு வாசகியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தினை பைரவரின் பெருமையினை உலகறிய செய்யும் பொருட்டு ஒரு பதிவாக வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
நாம் மேலே குறிப்பிட்ட அந்த வாசகி வெளிநாட்டினை சேர்ந்தவர். அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உண்டு. அதில் இரண்டாவது குழந்தை பிறந்து சுமார் 7 மாதங்கள் ஆகிறது. அக்குழந்தைக்கு இரண்டாவது மாதத்திலிருந்து சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. மிகச்சிறந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இருவரிடம் குழந்தைக்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். மருத்துவர்கள் எவ்வளவோ மருந்துகளை தந்திருக்கிறார்கள். குழந்தைக்கு அவற்றினை அளித்திருக்கிறார்கள்.
ஆனால் சளி மற்றும் இருமலின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை. அந்த வாசகி நமது வலைப்பூவில் காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும் பதிவில் கூறப்பட்டதை படித்திருக்கிறார். அந்த தகவல் இதோ…
காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன. இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார். பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.
ஒரு நாள் இரவு சுமார் 11 மணியளவில் குழந்தைக்கு சளி மற்றும் இருமல் அதிகமாகி இருக்கிறது. அப்போது அந்த வாசகி மேற்கண்டவாறு காலபைரவரை மனதார நினைத்து தாம் இனி ஒரு போதும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் தனது குழந்தையை நோயிலிருந்து காப்பாற்று மாறும் வேண்டியிருக்கிறார். அவர் வேண்டிய 10 நிமிடங்களில் காலபைரவரின் அருளால் அக்குழந்தை குணம் பெற்றது. அப்போது சரியான சளியும், இருமலும் திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அந்த வாசகி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வில் காலபைரவர் பெருமான் சக்தி மிகுந்த மனோ பைரவராகவும், வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவராகவும் வந்திருக்கிறார்.
ஒரே ஒரு முறை மனதில் நினைத்தவுடனே வந்து வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவரின் அருளினை என்னவென்று சொல்வது…? நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது. எல்லாம் அவன் செயல். அந்த வாசகி இந்த நிகழ்வினை மின்னஞ்சலில் தெரிவித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிகழ்வு பைரவர் வழிபாட்டின் எளிமையையும், ஆற்றலையும் உணர்த்துகிறது. இந்நிகழ்வு பைரவரின் அளவிலா கருணை உள்ளத்தையும், அந்த வாசகியின் உயர்ந்த பக்தியையுமே காட்டுகிறது.
இந்த நிகழ்வு அந்த வாசகியின் அனுமதி பெற்றே பதிவாக வெளியிடப் படுகிறது. அவரது விருப்பப்படி அவரது பெயர் மற்றும் வசிக்கும் நாடு இவற்றை வெளிவிடப்பட வில்லை. அவருக்கு ஆன்மீகச்சுடர் வலைப்பூ தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
காலத்தினை வென்ற தெய்வமான காலபைரவருக்கு கோடான கோடி நன்றிகளும்…! வணக்கங்களும்….!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் க்லீம் காலபைரவாய நமஹ
ஸ்ரீ காலபைரவர், காத்மாண்டு, நேபாளம்
இன்று காலபைரவாஷ்டமி ஆகும். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் தான் காலபைரவர் அவதாரம் செய்தார். இத்தகைய நன்னாளில் பைரவரைப் பற்றி சிறப்பு பதிவு வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.
பைரவர் என்றாலே மனதில் ஒரு வித பரவசமும், பக்தியும் குடி கொள்ளும் என்பது எல்லோரும் உணர்ந்த ஒரு நிகழ்வு ஆகும். பைரவர் என்பதன் பொருள் இதோ.
பை - காத்தல்
ர – அழித்தல்
வ – படைத்தல்
மூன்று தொழில்களும் செய்யும் நாயகர் பைரவர் ஆவார். அதனால் தான் பைரவ பெருமானுக்கு முத்தொழில்களின் அடையாளமான திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளின் தொழிலையும் செய்யும் ஆற்றல் கொண்டவர். இவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர். நிர்வாண கோலத்தில் இருப்பவர். மூன்று கண்களை உடையவர். பாம்புகளை அணிகலனாக கொண்டவர். குண்டலம், சடைமுடியில் மாலை, கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, கோரைப்பற்கள் மற்றும் நாயை வாகனமாக கொண்டவர்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் கோலமே உலகெங்கும் வியாபித்து இருக்கும் சிவ வடிவமாகும். பைரவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். நம் வாழும் இந்த கர்ம பூமியில் பைரவருக்கு எத்தனையோ கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது. பைரவர் முதலில் ஒரு வடிவமாகவும், பின்பு 4 வடிவமாகவும், அதன் பின்னர் 8 வடிவங்களாகவும், அதே 8 வடிவங்கள் 64 வடிவங்களாகவும் தோன்றினார். எந்த பைரவ வடிவத்தை வழிபாடு செய்தாலும் அது ஆதிசிவனின் அவதாரமான ஸ்ரீ சொர்ண பைரவரையே சென்று சேரும்.
எத்தனை கோவில்கள் இருந்தாலும் மனம் என்ற கோவிலே மிகவும் சிறப்பானது. எத்தனை பைரவர்களும் இருந்தாலும் நம் மனதில் குடி கொண்டிருக்கும் பைரவரே மிக மிக மிக சக்தி கொண்டவர். உலகெங்கும் வியாபித்திருக்கும் பைரவ பெருமான் நம் உள்ளத்தில் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. மனோ பைரவர் நம் உடலோடும், உயிரோடும் கலந்து நிற்பவர். இதை எப்படி உணர்வது? அது ஒன்றும் கடினமான செயல் இல்லை. நாம் உள்ளன்புடன் பைரவ பெருமானை வழிபாடு செய்தாலே போதுமானது. அப்படியென்றால் கோவில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யக்கூடாதா? வழிபாடு செய்யலாம். தவறில்லை.
நம்மில் பலருக்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய நேரம் இருக்காது. மேலும் வீட்டில் சொர்ணபைரவர் வழிபாடும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். நமது மனமே பெரிய கோவில். நம் மனக்கோவிலில் பைரவ பெருமானை நிறுத்தி வழிபாடு செய்வதே மிகப் பெரிய சிவ வழிபாடு ஆகும். அதற்கு சில மனப்பயிற்சிகள் கண்டிப்பாக தேவை. சதா சர்வ காலமும் மனதில் பைரவர் பெருமானை நினைத்து வந்தாலே போதுமானது. அதாவது பூரண சரணாகதி அடைய வேண்டும். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பைரவ பெருமானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். எல்லாம் இறைவனின் செயல் என்ற மனநிலை வருகிறதோ அந்த கணத்திலிருந்தே பைரவர் பெருமான் நம் உள்ளங்களி்ல் குடியேறுவார் என்பது திண்ணம்.
அதன் பின்னர் பைரவ பெருமான் நம் மனதிலிருந்து இயங்கும் மாபெரும் பைரவ சக்தியாக செயல்படுவார். நாம் எந்த பைரவரை வழிபாடு செய்தாலும் தவறில்லை. நாம் வணங்கும் பைரவரே நம் மனோ பைரவராக செயல்படுவார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பைரவ பெருமானை நாம் வழிபாடு செய்ய நமது மனத்தை விட சிறந்த ஆலயம் இந்த உலகத்தில் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் காலத்தில் நமது உடல், உள்ளம் மற்றும் வாக்கு இவற்றில் சுத்தம் இருந்தாலே போதுமானது. பைரவர் நமது மனத்தில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். அருள் புரிவார். தவறுகளை சுட்டிக்காட்டுவார். தண்டனைகளை கொடுத்து திருத்துவார். தமது அருள் மழையில் நனைய வைப்பார்.
அது மட்டுமல்லாமல் நமது கர்மவினைகளை சுட்டெரிப்பார். பிறவியில்லா பெருநிலை அருளுவார். நவகோள்களையும் நமக்கு நன்மை செய்யுமாறு ஆணையிடுவார். நமது பிறவி பயனை அடைய வைப்பார். நாளடைவில் நாம் பிறவிப்பிணியை ஒழித்து ஒரு பைரவ கணமாக மாறி பைரவ உலகத்தில் பைரவருடன் ஆனந்தமாக இனிதுடன் வாழலாம். நமது உடல், உயிர் மற்றும் வாக்கு இவற்றில் பைரவர் கலந்து நிற்பார். நம் பார்வை பட்ட மாத்திரத்தில் அனைவரின் கர்ம வினைகளும் நாசமாகும். பைரவ சொரூபமாகவே நாமும் மாறிடுவோம். பைரவரைப் போல் வேரொரு தெய்வத்தை நாம் இந்த கர்ம பூமியில் காண இயலாது. இந்த உலகத்தில் நம்மை நாம் அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் காத்துக் கொள்ள பைரவரை துணைக் கொள்ள வேண்டும்.
காலபைரவாஷ்டமி நாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் காலபைரவ பெருமானின் பாதம் பணிந்து அவருக்கு இந்த பதிவை சிறு காணிக்கையாக ஆன்மீகச்சுடர் வலைப்பூ அர்ப்பணிக்கிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் க்லீம் காலபைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
தலம்: தில்லை ராகம்: மோகனம்
திருச்சிற்றம்பலம்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.
உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற.
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற.
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.
நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற.
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.
திருச்சிற்றம்பலம்
ஆக்கம்: மாணிக்கவாசகர்
நாம் மேலே காண்பது திருவுந்தியார் பதிகம் ஆகும். இதை இயற்றியவர் மாணிக்கவாசகர். இதில் மொத்தம் 20 பாடல்கள் உள்ளன. இந்த 20 பாடல்களிலும் சிவபெருமானின் வெற்றியே கூறப்பட்டுள்ளது. இதனை பாராயணம் செய்ய செய்ய பகைமை, விரோதம் மற்றும் எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும்.
முதன்முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய்க்கிழமை அன்று காலபைரவருக்கு குங்கும நீரால் அபிசேகம் செய்து எலுமிச்சை பழ மாலை அணிவித்து சிவந்த நிற உணவு பொருட்களை படையிலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அதாவது மாதுளம் பழம், ஜிலேபி, கேசரி ஆகிய உணவு பொருட்களை படையலிட வேண்டும். மேற்கண்ட பதிகத்தை 8 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
வீட்டிற்கு வந்து குத்துவிளக்கேற்றி பருப்பு பொடி கலந்த சாதத்தை படையலிட்டு, குத்து விளக்கை காலபைரவராக நினைத்து 1 முறை பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் செய்த பின்பு பருப்பு பொடி கலந்த சாதத்தை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு 9 செவ்வாய் கிழமைகள் செய்ய வேண்டும்.
பின்பு தினமும் குத்துவிளக்கின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லைகள் அறவே நீங்கும்.
சிவபெருமானின் வெற்றியை பாடியே நாமும் நமது வாழ்வில் கர்ம வினைகள் நீங்கப்பெற்று எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வினை வாழ்வோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்