Showing posts with label சங்கடஹர சதுர்த்தி. Show all posts
Showing posts with label சங்கடஹர சதுர்த்தி. Show all posts

Friday, January 9, 2015

2015 ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி வரும் நாட்கள்

Ganesha-Gives-Blessings

Sankadahara Chadhurthi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் கம் கணபதயே நமஹ

Thursday, February 27, 2014

தெய்வ வழிபாடு - தேய்பிறை திதிகளா? வளர்பிறை திதிகளா?

lord-shiva-57a

பொதுவாக கடவுளரை அக்கடவுளருக்குரிய திதி மற்றும் நட்சத்திரங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.  இது கடவுள் வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஆகும்.  அவ்வாறு வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானதாகும்.  அவ்வாறு நாம் வழிபட்டால் கடவுளின் அருளும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நமது கர்ம வினைகள் நீங்கி நமது நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.

அவ்வாறு வழிபாடு செய்வதில் நட்சத்திரங்களில் பொதுவாக சந்தேகங்கள் வருவதில்லை.  ஆனால் திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு.  ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன.  இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம்.  நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம்.  பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும்.  இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன.  இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை.  அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.

முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம்.  தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும்.  தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும்.  எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது.

இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம்.  வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும்.  வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.  எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.

நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள்.  இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும்.  தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும்.  பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும்.  இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம்.  தவறில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, January 7, 2014

2014 ம் வருட தேய்பிறை (சங்கடஹர) சதுர்த்தி வரும் நாட்கள்

ganesh

Sankadahara Chadhurthi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Saturday, December 21, 2013

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்

pancha muga vinayagaradi-sankara1

1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
     புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
     ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
     கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

 

நாம் மேலே காண்பது கணேச பஞ்சரத்ன துதியாகும். இதனை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்.  இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

 

கணேச பஞ்சரத்ன துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் கம் கணபதயே நமஹ

Friday, November 22, 2013

விஜய வருட (2013 – 2014) சங்கடஹர சதுர்த்தி நாட்கள்

image

ஓம் கம் கணபதயே நமஹ

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, October 17, 2013

குன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி

 

http://i2.wp.com/hindupad.com/wp-content/uploads/2012/08/Shakti-Ganapati.jpg?w=360

http://www.indianetzone.com/photos_gallery/61/Shakti%20Ganapati%20Form%20of%20Lord%20Ganesha.jpg

 

அலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்

பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்

சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்

பயபஹம் சக்தி கணேச மீதே.

 

மேலே உள்ள படத்தில் நாம் காண்பது கணபதியின் உயரிய வடிவமான சக்தி கணபதி ஆகும்.  கணபதியின் பல்வேறு வடிவங்களில் இவர் தான் மிக மிக மிக சக்தி வாய்ந்தவர்.  இந்த வடிவம் தந்திர வழிபாட்டில் மட்டுமே காணப்படுகிறது.

 

இவர் பச்சைநிறமுடைய தனது சக்தியை (மனைவி) தனது இடது தொடை மீது அமர்த்தி இருப்பார்.  இவர் சூரிய மறையும் காலத்தில் உள்ள வானத்தின் இளஞ்சிவப்பான நிறமுடையவர்.  ஒரு கரத்தில் பாசத்தை உடையவர்.  மற்றொரு கரத்தில் பூங்கொத்தினை உடையவர்.  மற்றொரு கரத்தில் அபய முத்திரை காட்டுபவர்.  மற்றொரு கரத்தில் தனது மனைவியை அணைத்துக் மகிழ்ச்சியாக இருப்பவர்.

 

இந்த வடிவம் வட இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.  இவரின் பெருமையை அறிந்த முதலாம் குலோத்துங்க சோழன் இவரை தினமும் வழிபாடு செய்து வந்துள்ளான்.  முதலாம் குலோத்துங்க சோழன் வழிபாடு செய்த மூன்று முக்கிய தெய்வங்களில் இவரே மிகவும் முக்கியமானவர்.

 

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எப்போதும் போரும் அதில் வெற்றி மட்டுமே இருந்திருக்கிறது.  அவனது படைத்தலைவன் கருணாகர தொண்டைமான் சக்தி கணபதியை வணங்கியே போருக்கு சென்றிருக்கிறான். 

 

முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் அவனது நாட்டில் பஞ்சம் என்பதே இல்லாமல் இருந்திருக்கிறது.  நாடே செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது.  ஒரு தடவை போர் நடத்தினாலே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.  இருப்பினும் முதலாம் குலோத்துங்கன் தொடர்ந்து போர்களை நடத்தியும் அவனது குன்றாத செல்வத்திற்கு காரணம் அவனது சக்தி கணபதி வழிபாடு தான்.

 

முதலாம் குலோத்துங்கனின் கலிங்கத்து வெற்றியை கலிங்கத்துப்பரணி பாடுகிறது.  இந்த வெற்றிக்கு காரணம் அவன் செய்த மூன்று தெய்வங்களின் வழிபாடு தான் காரணமாக அமைந்திருக்கிறது. 

 

நாமும் இத்தகைய கணபதியின் உயரிய வடிவத்தினை தினமும் வழிபட்டு அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும், மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியையும் பெறுவோம்.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு இவரது வழிபாட்டை முதலில் சதுர்த்தி நாளில் தொடங்க வேண்டும்.  இவரது படத்தை அச்சிட்டு பூசை அறையில் வைத்துக் கொண்டு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபாட்டினை துவக்கவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து துவக்கவும்.  பின்பு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் மட்டுமே போதுமானது.

 

முதலில் விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை சதுர்த்தி அன்று மேற்கண்ட துதியை ஒரு முறை செபித்து பின்பு “ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ” என்று 108 முறை செபிக்க வேண்டும்.   பின்பு வீடு வந்து சக்தி கணபதி படத்தின் முன்பு 27 முறை செபிக்க வேண்டும்.  பிறகு தினமும் வீட்டில் 27 முறை செபித்தாலே போதுமானது. 

 

 இவரை வழிபாடு செய்வதால் அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் உண்டாகும்.  செல்வத்திற்கு என்றும் குறைவு வராது.  மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியும் உண்டாகும்.

 

முதலாம் குலோத்துங்கன் வழிபட்ட மூன்று தெய்வங்களில் மற்ற இரண்டு தெய்வங்கள் பற்றி தனியாக பதிவுகள் வெளிவரும்.

 

ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Sunday, September 22, 2013

வேலை கிடைக்க வைக்கும் காரிய சித்தி மாலை - சங்கடஹர சதுர்த்தி பரிசு

http://www.srisiddhivinayak.com/Images/Stories/3.jpg 
http://www.indianetzone.com/photos_gallery/61/Shakti%20Ganapati%20Form%20of%20Lord%20Ganesha.jpg



பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.


உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 


இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 


மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.


வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 


பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.


நூற்பயன் 

 
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். 


திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.


ஆக்கம்: காசிப முனிவர்

                                                தமிழில்: கச்சியப்பர்


இன்றைய உலகில் வேலை கிடைக்காமல் அவதிபடுவர்கள் எத்தனையோ பேர்.  வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் மேற்கண்ட விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.

வேலையில்லாமல் அவதிபடுபவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலிலுள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சர்க்கரை சேர்க்காத பால் கோவா வாங்கி வந்து சந்தன காப்பு செய்வது போல் பால் கோவா காப்பு செய்து மேற்கண்ட அஷ்டகத்தை 1 முறை பாராயணம் செய்யவும்.  காப்பு செய்த பால் கோவாவில் பாதியை அங்கிருப்பவர்களுக்கு வழங்கவும்.

பின்பு வீட்டிற்கு வந்து சக்தி கணபதி படம் அல்லது விநாயகர் சிலை முன்பு 8 முறை பாராயணம் செய்து மீதி பால்கோவாவை வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கவும்.  இதை மூன்று சங்கடஹர சதுர்த்திகள் செய்யவும்.  கோவிலின் விநாயகர் சிலைக்கு ஏற்ப பால்கோவாவின் அளவை வாங்கிக் கொள்ளவும்.

90 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்.  கண்டிப்பாக பலன் கிடைக்கும்.  

மேற்கண்ட படத்தில் நீங்கள் காண்பது சக்தி கணபதியின் உருவம் ஆகும்.  விநாயகர் வடிவங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் இவரே.  இவரைப் பற்றி பதிவு தனியாக விரைவில் வெளிவரும்.

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும்.  கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர்.  சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான்.  மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.

தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.

தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.


ஓம் கம் கணபதயே நமஹ

ஓம் சங்கடஹர கணபதயே நமஹ

ஓம் சக்தி கணபதயே நமஹ