Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Friday, December 15, 2017

பாவங்கள் போக்கும் பாவநாசத் திருப்பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

Thiruvannamalai


தலம் : பொது                                                                                                                                         பண் : பழம் பஞ்சுரம்

திருமுறை : நான்காம் திருமுறை                                                                                         அருளியவர் : திருநாவுக்கரசர்


    1. பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
      சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
      வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
      ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.
    2. ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
      கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
      வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
      மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
    3. மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
      அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
      விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
      நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
    4. புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
      உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
      கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
      அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.
    5. கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
      ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
      பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
      சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    6. மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
      கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
      பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
      திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
    7. எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
      குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
      நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
      அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
    8. மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
      ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
      சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
      மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
    9. சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
      ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
      நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
      தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    10. புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
      வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
      பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
      வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
    11. முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
      அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
      சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
      எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.

நாம் மேலே காணும் பதிகம் பாவநாசத் திருப்பதிகம் ஆகும்.  இது நான்காம் திருமுறையில் 15ம் பதிகமாக அமைந்துள்ளது.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இது எந்த ஒரு தலத்தையும் குறித்து பாடப்படவில்லை.  எனவே இது பொது என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளது.  இதன் பண் பழம் பஞ்சுரம் ஆகும்.  இப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானினின் பெயர்களை குறிப்பிடுகிறார்.

இப்பதிகத்தின் கடைசி வரியில் பாவங்கள் நாசமாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது.  சிவபெருமானின் பல்வேறு பெயர்களை உள்ளன்புடன் கூறி வழிபாடு செய்ய நாம் செய்த பழம் வினைகள் அனைத்தும் நாசமாகும் என்பது திண்ணம்.   இப்பதிகத்தை தினமும் காலை -  மாலை இரு வேளையும் பாராயணம் செய்ய நாம் எத்தனை பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து போகும் என்பது உறுதி.

இப்பதிகத்தை முதன் முதலில் பிரதோஷ வேளையில் பாராயணம் செய்வது நல்லது.  காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.  இதனை பாராயணம் செய்பவர்கள் அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டவர்களாக இருத்தல் நலம் பயக்கும்.  பாராயணம் விரைவில் பலன் தரும்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நோய்கள் ஆகியன நமது முற்பிறவிகளில் செய்த பாவங்களால் தான் ஏற்படுகிறது.  முற்பிறவி மட்டுமல்லாது இப்பிறவி பாவங்களும் அழிந்தால் மட்டுமே நம் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  பாவங்களை அழித்து வாழ விழைவோர் அவர் தம் முன்வினைகளை – கர்மவினைகளை அழித்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பாதம் பணிந்து இப்பதிவினை பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல… அனைத்தும் உன்னுடையதே…! அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


Sunday, January 25, 2015

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்

lor18d

1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?

பித்ரு வழிபாடு

2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?

இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.

3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும்.  பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.

4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?

நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.

5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?

இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.

6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.

7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம்.  இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.

8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?

கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.

9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?

இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை.  அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.

10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?

மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.

11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?

தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.

12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?

வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.

13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?

அன்னதானம் செய்ய வேண்டும்.

14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?

திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.

15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!

Thursday, January 22, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lor24v

Theipirai Thrayodhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 1, 2015

2015 ம் ஆண்டு வளர்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lor23a

Valarpirai Thrayodhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, March 9, 2014

பிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்

mahalingam

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம்.  பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும்.  கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று.

பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது.  பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார்.  பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.

பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும்.  எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே.  ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே.  அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை.  அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். 

கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும்.  ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.  அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது.  அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.

பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்?

ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும்.  முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம்.  எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.  உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை.

பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன?

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது.  ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும்.  இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும்.  தீராத கடனும் பகையும் உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.  தீராத வறுமை உண்டாகும். 

இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.  இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்:

பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார்.  அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும்.  சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார்.  நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும்.  ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.

இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.  இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும்.  அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.

அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.  அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.  இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.  இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.  இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும்.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.

சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும்.  சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு.  அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது.

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்:

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.

காசி
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
இராமேஸ்வரம்
மதுரை
திருவாஞ்சியம்
பிரம்மதேசம்
மேல்மலையனூர்

ஆகியன முக்கியமானவை ஆகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Tuesday, February 4, 2014

2014 ம் வருட மாத சிவராத்திரி வரும் நாட்கள்

lor23a

Theipirai Chadhurdhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, February 2, 2014

2014 ம் வருட வளர்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lord-shiva-35s

Valarpirai Thrayodhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 30, 2014

2014 ம் வருட தேய்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lor24v

Theipirai Thrayodhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, January 5, 2014

2014 ம் வருட பௌர்ணமி வரும் நாட்கள்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash2/251293_10151434060483835_1728852201_n.jpg

Pournami - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Saturday, December 14, 2013

சிறப்புகள் தரும் சிவாஷ்டகம்

lor26h

ப்ரபும் ப்ராணநாதம் விபும் விச்வநாதம்
ஜகந்நாதநாதம் ஸதானந்தபாஜம் |
பவத்பவ்ய பூதேச்வரம் பூதநாதம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 1


கலே ருண்டமாலம் தநெள ஸர்பஜாலம்
மஹாகாலகாலம் கணேசாதிபாலம் |
ஜடாஜூட கங்கோத்தரங்கைர்விசிஷ்யம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 2

முதாமாகரம் மண்டனம் மண்டயந்தம்
மஹாமண்டலம் பஸ்மபூஷாதரம் தம் |
அநாதிம் ஹ்யபாரம் மஹாமோஹமாரம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 3

தடாதோ நிவாஸம் மஹாட்டாட்டஹாஸம்
மஹாபாபநாசம் ஸதா ஸுப்ரகாசம் |
கிரீசம் கணேசம் ஸுரேசம் மஹேசம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 4

கிரீந்த்ராத்மஜாஸங்க்ருஹீதார்த தேஹம்
கிரெள ஸம்ஸ்திதம் ஸர்வதாஸந்நிகேஹம் |
பரப்ரஹ்மப்ரஹ்மாதிபிர்வந்த்யமானம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 5

கபாலம் த்ரிசூலம் கராப்யாம் ததானம்
பதாம்போஜநம்ராய காமம் ததானம் |
பலீவர்தயாநம் ஸுராணாம் ப்ரதானம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 6

சரச்சந்த்ரகாத்ரம் குணாநந்தபாத்ரம்
த்ரிநேத்ரம் பவித்ரம் தனேசஸ்ய மித்ரம் |
அபர்ணாகலத்ரம் சரித்ரம் விசித்ரம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 7

ஹரம் ஸர்பஹாரம் சிதாபூவிஹாரம்
பவம் வேதஸாரம் ஸதா நிர்விகாரம் |
ஸ்மசானே வஸந்தம் மனோஜம் தஹந்தம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 8

ஸ்தவம் ய: ப்ரபாதே நர: சூலபாணே:
படேத் ஸர்வதா பர்கபாவானுரக்த: |
ஸபுத்ரம் ஸுஜானம் ஸுமித்ரம் கலத்ரம்
விசித்ரை: ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி || 9

 

நாம் மேலே காணும் துதி சிவாஷ்டகம் ஆகும்.  இது சிவபெருமானின் அருளை வாரி வழங்கக்கூடியது.  இதனை தினமும் 3 வேளைகள் பாராயணம் செய்து வருபவர்கள் சகல கர்மவினைகளும் நீங்கப் பெற்று, நல்ல நண்பர்கள், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இவற்றைப் பெற்று பிறவியில்லா பெருநிலையை அடைவார்கள்.

 

இதன் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Wednesday, December 11, 2013

மோட்சம் அளிக்கும் காசி விஸ்வநாதாஷ்டகம்

kashivishwnatimgkasi viswanathpbaab030_lord_shiva_with_shivlinga 

கங்காதரங்கரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய
வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம்
ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே மோக்ஷம்

விஶ்வனாதாஷ்டகமிதம் புண்யம் யஃ படேஃ ஶிவ ஸன்னிதௌ
ஶிவலோகமவாப்னோதி ஶிவேனஸஹ மோததே

 

நாம் மேலே காண்பது ஆதிசங்கரர் இயற்றிய காசி விஸ்வநாதாஷ்டகம் ஆகும்.  இதனை தினமும் பாராயணம் செய்பவர்கள் 16 வகை பேறுகளையும் பெற்று கடைசியில் மோட்சத்தினை அடைவார்கள்.

 

இதனை தினமும் சிவ சந்நிதியில் பாராயணம் செய்பவர்கள் சிவலோகத்தில் சிவனுடன் நட்பு பாராட்டி நலமுடன் வாழ்வார்கள்.

 

இதன் ஒலி வடிவம் பழைய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (திரு.S.P. பாலசுப்ரமணியம்)

இதன் ஒலி வடிவம் புதிய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (உமா மோகன் மற்றும் காயத்ரி தேவி)

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

 

Tuesday, December 10, 2013

விஜய வருட (2013–2014) பரணி நட்சத்திர நாட்கள்

bhairava

Barani

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, December 9, 2013

சிவனின் 5 முகங்களும் – 25 மகேஸ்வர வடிவங்களும்

siva family 1

சிவபெருமானின் 5 முகங்கள்:-

  1. ஈசான முகம்
  2. தத்புருஷ முகம்
  3. அகோர முகம்
  4. வாமதேவ முகம்
  5. சத்யோஜாத முகம்

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.  அவையாவன:-

 

ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. சோமாஸ்கந்தர்
2. நடராசர்
3. ரிஷபாரூடர்
4. கல்யாணசுந்தரர்
5. சந்திரசேகரர்

 

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. பிட்சாடனர்
2. காமாரி
3. காலாரி
4. சலந்தராரி
5. திரிபுராரி

 

அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. கஜசம்ஹாரர்
2. வீரபத்திரர்
3. தக்ஷிணாமூர்த்தி
4. கிராதமூர்த்தி
5. நீலகண்டர்

 

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. கங்காதரர்
2. சக்ரவரதர்
3. கஜாந்திகர்
4. சண்டேசானுக்கிரகர்
5. ஏகபாதர்

 

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. லிங்கோத்பவர்
2. சுகாசனர்
3. உமாமகேசர்
4. அரிஹரர்
5. அர்த்தநாரி

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

 

Sunday, December 8, 2013

சிவபெருமானின் 5 முகங்களின் விளக்கம்

shivalinga-CP63_l

சிவபெருமானின் முகங்கள் ஐந்து ஆகும்.  அவையாவன:

  1. சத்யோஜாதம்
  2. வாமதேவம்
  3. தத்புருஷம்
  4. அகோரம்
  5. ஈசானம்

 

சத்யோஜாதம்:

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார்.  இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

 

வாமதேவம்:

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.

 

தத்புருஷம்:

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும்.  பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார்.  காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

 

அகோரம்:

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.

 

ஈசானன்:

கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும்.  அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள்.  மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

 

இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சத்யோஜாதய நமஹ

ஓம் வாமதேவாய நமஹ

ஓம் தத்புருஷாய நமஹ

ஓம் அகோராய நமஹ

ஓம் ஈசானாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Saturday, December 7, 2013

அட்ட வீரட்டத் தலங்கள் : வீரட்டானங்கள் - 8

lord-shiva-31v

வ.எண் தலம் இருப்பிடம் தலச்சிறப்பு
1. திருக்கண்டியூர் தஞ்சை மாவட்டம் பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்
2. திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்
3. திருவதிகை விழுப்புரம் மாவட்டம் திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்
4. திருப்பறியலூர் நாகை மாவட்டம் தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்
5. திருவிற்குடி நாகை மாவட்டம் சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்
6. திருவழுவூர் நாகை மாவட்டம் யானையை கொன்று தோலை அணிந்த தலம்
7. திருக்குறுக்கை நாகை மாவட்டம் மன்மதன் எரிக்கப்பட்ட தலம்
8. திருக்கடவூர் நாகை மாவட்டம் காலனை காலால் உதைத்த தலம்
 
 
குறிப்பு:- அட்டவீரட்டத்தலங்கள் பற்றி தனித்தனி பதிவுகள் வெளி வரும்.
 
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

Friday, December 6, 2013

வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவர் – உண்மை நிகழ்வு

vaidhyanaadhar vaitheeswaran kovil

bairavar statueஸ்ரீ காலபைரவர் பெருமான்

 

வழிபாடு செய்யக்கூடிய 25 சிவ வடிவங்களில் பைரவரும் ஒருவர்.  பைரவரின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  காலத்ததை வென்ற தெய்வங்கள் பதிவில் காளி மற்றும் காலபைரவரின் பெருமைகளை ஆன்மீகச்சுடர் பதிவாக வெளியிட்டுருந்தது.  அதனை படித்து பயன் பெற்ற ஒரு வாசகியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தினை பைரவரின் பெருமையினை உலகறிய செய்யும் பொருட்டு ஒரு பதிவாக  வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

 

நாம் மேலே குறிப்பிட்ட அந்த வாசகி வெளிநாட்டினை சேர்ந்தவர்.  அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உண்டு.  அதில் இரண்டாவது குழந்தை பிறந்து சுமார் 7 மாதங்கள் ஆகிறது.  அக்குழந்தைக்கு இரண்டாவது மாதத்திலிருந்து சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது.  மிகச்சிறந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இருவரிடம் குழந்தைக்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள்.  மருத்துவர்கள் எவ்வளவோ மருந்துகளை தந்திருக்கிறார்கள்.  குழந்தைக்கு அவற்றினை அளித்திருக்கிறார்கள்.

 

ஆனால் சளி மற்றும் இருமலின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.  அந்த வாசகி நமது வலைப்பூவில் காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும் பதிவில் கூறப்பட்டதை படித்திருக்கிறார்.  அந்த தகவல் இதோ…

 

காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன.  இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார்.  பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.

 

ஒரு நாள் இரவு சுமார் 11 மணியளவில் குழந்தைக்கு சளி மற்றும் இருமல் அதிகமாகி இருக்கிறது.  அப்போது அந்த வாசகி மேற்கண்டவாறு காலபைரவரை மனதார நினைத்து தாம் இனி ஒரு போதும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் தனது குழந்தையை நோயிலிருந்து காப்பாற்று மாறும் வேண்டியிருக்கிறார்.  அவர் வேண்டிய 10 நிமிடங்களில் காலபைரவரின் அருளால் அக்குழந்தை குணம் பெற்றது.  அப்போது சரியான சளியும், இருமலும் திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  அந்த வாசகி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இந்த நிகழ்வில் காலபைரவர் பெருமான் சக்தி மிகுந்த மனோ பைரவராகவும், வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவராகவும் வந்திருக்கிறார்.

 

ஒரே ஒரு முறை மனதில் நினைத்தவுடனே வந்து வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவரின் அருளினை என்னவென்று சொல்வது…?  நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.  எல்லாம் அவன் செயல்.  அந்த வாசகி இந்த நிகழ்வினை மின்னஞ்சலில் தெரிவித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வு பைரவர் வழிபாட்டின் எளிமையையும், ஆற்றலையும் உணர்த்துகிறது.  இந்நிகழ்வு பைரவரின் அளவிலா கருணை உள்ளத்தையும், அந்த வாசகியின் உயர்ந்த பக்தியையுமே காட்டுகிறது.

 

இந்த நிகழ்வு அந்த வாசகியின் அனுமதி பெற்றே பதிவாக வெளியிடப் படுகிறது.  அவரது விருப்பப்படி அவரது பெயர் மற்றும் வசிக்கும் நாடு இவற்றை வெளிவிடப்பட வில்லை.  அவருக்கு ஆன்மீகச்சுடர் வலைப்பூ தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

காலத்தினை வென்ற தெய்வமான காலபைரவருக்கு கோடான கோடி நன்றிகளும்…! வணக்கங்களும்….!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

 

 

Thursday, December 5, 2013

நலம் தரும் நட்சத்திர தலங்கள் – 27

constellation_north

Star -27 Temples_Page_1Star -27 Temples_Page_2Star -27 Temples_Page_3

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்