Showing posts with label துர்க்கை சித்தர். Show all posts
Showing posts with label துர்க்கை சித்தர். Show all posts

Saturday, October 19, 2013

அழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு

Swarna_Agarshana_bairavar2.166223028

swarna bairavar 123

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgc_STpUJcSUWAmafEMMwtQGMBplgQ17i9Nhxnnd6sqzJx12a7TKgaGViXwcgp3t06pf3TBt4P_hji_1-mqvU61Pbu4HC6X0GvZs5RCWBMPRb9WXs5c0TyS8F2nwodhSjwyPRBihhsMw/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg

 

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை.  அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம்.  அதே போல் அருள் இல்லாதவர்கட்கு விண்ணுலகம் இல்லை என்பதே இதன் பொருள்.  அருளும், பொருளும் ஒருங்கே கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி தான்.  இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய வழி இருக்கிறதா?  ஆம்.  இருக்கிறது.  அது தான் நம் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும். 

 

பொதுவாக எல்லோரும் கடவுள் வழிபாடு செய்வார்கள்.  ஆனால் அவர்களுக்கு வழிபாட்டின் பலன் வந்து சேருவது தாமதமாகும் அல்லது பலன் கிடைக்கமலேயே போய் விடும்.  இதற்கு காரணம் அசைவம் சாப்பிடுவது தான்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்தாமல் வழிபாடு செய்வதன் பலன் கிடைக்காது.  வழிபாடு செய்வதற்கென்றே சில நியமங்கள் உள்ளன.  மேலும் வழிபாட்டை துவக்கும் நாள், கிழமை, நேரம் ஆகியன மிகவும் முக்கியமானது. 

 

நாம் இங்கே பார்க்கப் போவது மிக மிக மிக சிறப்பான, எளிமையான, மிக மிக மிக சக்தி வாய்ந்த சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  அதாவது திருவாதிரை நாள் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  பொதுவாக ஒருவர் வழிபாடு செய்ய உகந்த காலம் என்று பார்க்கும் போது அவரவர் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமை இவற்றில் வழிபாடு செய்யலாம். 

 

நம்மில் சிலருக்கு பிறந்த ஜாதகம் இருக்காது.  அவர்களின் நட்சத்திரம், திதி, கிழமை தெரியாது.  எனவே நாம் எல்லோருக்கும் பொதுவாக சொர்ண பைரவர் வழிபாடு நடத்த ஒரு அற்புதமான நாள் உண்டு.  அது தான் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் ஆகும்.  திருவாதிரை நட்சத்திரம் நம் ஆதி சிவன் அண்ணாமலையார் அவதாரம் செய்த நட்சத்திரம் ஆகும்.

 

திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் நாம் செய்யும் தானம், செபம், வழிபாடு இவற்றிற்கு கோடி மடங்கு பலன் உண்டு.  அப்படியென்றால் பைரவர் வழிபாட்டை தேய்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பரணி நட்சத்திரம், செவ்வாய் கிழமை, ராகு காலம் இவற்றில் செய்யக்கூடாதா?  கண்டிப்பாக செய்ய வேண்டும்.  இதில் மாற்று கருத்தே இல்லை.  ஆனால் இவற்றையும் விட சக்தி வாய்ந்த நாள் தான் திருவாதிரை நாள் ஆகும்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை திருநாளில் தேய்பிறை சஷ்டியோ அல்லது தேய்பிறை அஷ்டமியோ அல்லது செவ்வாய் கிழமையோ வந்தால் இன்னும் சிறப்பு தான்.  சரி திருவாதிரை வரும் நாட்களை எப்படி கண்டு கொள்வது?  அதற்கான விளக்கம் நமது வலைப்பூவில் திருவாதிரை கிரிவல நாட்கள் தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது.  அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டியது தான்.

 

வழிபாடு செய்ய நாம் முதலில் அசைவத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்திய பின்பே வழிபாடு செய்ய வேண்டும்.  அசைவத்தை நிறுத்தாமல் வழிபாடு செய்தால் நாய் வந்து கடிக்கும்.  சொர்ண பைரவரே அசைவத்தை நிறுத்த செய்வார்.   வழிபாடு செய்யும் முறை பின்வருமாறு:-

 

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ண பைரவர் சந்நிதியில் ஆரம்பிக்க வேண்டும்.  அவ்வாறு இயலவில்லையெனில் சொர்ண பைரவர் படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக் கொள்ளவும் அல்லது தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும். 

 

இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  வழிபாடு செய்யும் போது சொர்ண பைரவர் அஷ்டகம்  33 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்த பின்பு “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ“ என்று 108 முறை செபம் செய்யவும். கடைசியாக சொர்ண பைரவர் போற்றி - 33 ஒரு முறை பாராயணம் செய்து முடிக்க வேண்டும்.  அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட வேண்டும்.

 

தொடர்ச்சியாக 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாவிடிலும் பரவாயில்லை.  விட்டுவிட்டாவது 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இந்த வழிபாடு செய்யும் நாளில் விரதம் இருப்பதும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தலும் மிக்க சிறப்பு. இவ்வாறு விரதம் இருத்தலும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தால் பலன்கள் வெகு விரைவில் தேடிவரும்.  இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்தால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-

 

    1. கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும்
    2. சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக வந்து சேரும்
    3. எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்
    4. எல்லா கடன்களும் தீரும்
    5. குன்றாத செல்வம் வந்து சேரும்
    6. வராத கடன்களும் வசூல் ஆகும்
    7. தொழில் பெரிய வளர்ச்சியை அடையும்
    8. நியாயமான பதவி உயர்வுகள் வந்து சேரும்
    9. நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்
    10. நியாயமான முறையில் பண வரவு உண்டாகும்
    11. வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்
    12. மறைமுக எதிரிகள் விலகுவர்
    13. செய்வினை கோளாறுகள் நீங்கும்
    14. அனைத்து வித செல்வங்களும் உண்டாகும்
    15. மிகுந்த புண்ணியம் சேரும்
    16. அட்டமா சித்துக்களும் உண்டாகும்
    17. நிரந்தரமான மனநிம்மதி கிட்டும்
    18. பிறவியில்லா பெருநிலை உண்டாகும்
    19. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
    20. கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்
    21. சாபங்கள் அனைத்தும் நீங்கும்
    22. எல்லா வித நோய்களும் தீரும்
    23. நல்ல மக்கட் பேறு உண்டாகும்
    24. அட்ட லட்சுமிகளின் வாசம் இல்லங்களில் உண்டாகும்
    25. லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு இணையான செல்வம் உண்டாகும்
    26. வீட்டில் கால்நடைகளின் விருத்தி உண்டாகும்
    27. விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்
    28. சித்தர்களின் அருள் கிட்டும்
    29. எல்லா பிரச்சனைகளும் தீரும்
    30. வழக்குகள் அனைத்தும் தீரும்
    31. தவறான பழக்கங்கள் நீங்கும்
    32. அனைத்து கிரகங்களும் நன்மையே செய்யும்
    33. அனைத்து யோகங்களும் உண்டாகும்

 

இதில் விடுபட்ட அனைத்துவித கோரிக்கைகளும் நிறைவேறும்.  வேண்டப்பட்ட கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.

 

குறிப்பு:-

இந்த பதிவினை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பைரவரின் வாகனம் எமது வீட்டின் வாயிலில் படுத்துக் கொண்டிருந்தது.  எங்கள் வீட்டில் பைரவரின் வாகனத்தை வளர்க்கவில்லை.  இப்பதிவினை தட்டச்சு செய்து முடித்த பின்பே பைரவரின் வாகனம் அவ்விடத்தை விட்டு அகன்றது.  மேலும் இந்த பதிவினை தட்டச்சு செய்யும் போது பல்லி நல்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தது.  எல்லாம் அவன் செயல்.  எல்லாம் சொர்ண பைரவரின் அருள்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Friday, September 27, 2013

சொர்ண பைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு

 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgc_STpUJcSUWAmafEMMwtQGMBplgQ17i9Nhxnnd6sqzJx12a7TKgaGViXwcgp3t06pf3TBt4P_hji_1-mqvU61Pbu4HC6X0GvZs5RCWBMPRb9WXs5c0TyS8F2nwodhSjwyPRBihhsMw/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg



சொர்ண பைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அதை இயற்றியவர் உபாசனா குலபதி துர்க்கை சித்தர் ஆவார்.  இந்த சொர்ண பைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.


இந்த பதிவில் சொர்ண பைரவர் கயிறு பற்றி பார்ப்போம்.  இதற்கு தேவையான பொருள் ஒரு மஞ்சள் கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமே.  சொர்ண பைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி (அ) தேய்பிறை சஷ்டி (அ) பௌர்ணமி (அ) செவ்வாய் கிழமை (அ) ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.


முதலில் கீழ்க்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை 8 முறை சொர்ண பைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போது அவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய மஞ்சள் கயிற்றை வைக்கவும்.  8 முறை பாராயணம் செய்த பின்பு அந்த மஞ்சள் கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக (அ) பூசையறையின் தெற்கு சுவற்றில் சந்தனத்தில் சூலம் வரைந்து அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.


அவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் மஞ்சள் கயிற்றில் ஒரு முடிச்சு வீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு சொர்ண பைரவர் போற்றி – 33 யை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோ அவர்களுக்கு கட்டவும்.  இந்த சொர்ண பைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில் எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.  அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.


இவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கது.  பைரவரின் அருளை தரக்கூடியது.  எந்த துன்பத்திலிருந்தும் காக்கக்கூடியது.  இந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்.  அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும் வேலையில் இறங்கவும்.  இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.


இந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :

1.   பயம் போக்கும்
2.   தைரியம் தரும்
3.   பண வரவை அதிகரிக்கும்
4.   விபத்துக்களிலிருந்து காக்கும்
5.   நேர்முகத் தேர்வுகளில் வெற்றியை தரும்
6.   தொழிலில் விருத்தியை தரும்
7.   தீய கனவுகளை ஒழிக்கும்
8.   கடன்களை தீர்க்கும்
9.   பைரவர் அருளை பெருக்கும்.






எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு சொர்ண பைரவர் கயிற்றினை தயாரிக்கலாம். 


மனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.  எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.
 


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ
 


Thursday, September 19, 2013

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgc_STpUJcSUWAmafEMMwtQGMBplgQ17i9Nhxnnd6sqzJx12a7TKgaGViXwcgp3t06pf3TBt4P_hji_1-mqvU61Pbu4HC6X0GvZs5RCWBMPRb9WXs5c0TyS8F2nwodhSjwyPRBihhsMw/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg 



தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான் 
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.


ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர் 



அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை சொர்ண பைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு செய்து  வந்தால் என்றும் பணத்திற்கு குறைவிருக்காது.


தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.


மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும்.


எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.


நீங்கள் சொர்ண பைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம்.  அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


தினமும் வழிபடுபவர்கள் மிகுந்த புண்ணியசாலிகளே...!


மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹஎன்று செபித்து வந்தாலே போதுமானது.



தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ