Showing posts with label காலபைரவர் அஷ்டகம். Show all posts
Showing posts with label காலபைரவர் அஷ்டகம். Show all posts

Sunday, January 19, 2014

2014 ம் வருட வளர்பிறை அஷ்டமி வரும் நாட்கள்

Sornaagarsna Bairavar

Valarpirai Ashtami - 2014

தென்னாடுடையை சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 16, 2014

2014 ம் வருட தேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள்

bairavar parrot

Theipirai Ashtami - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Friday, September 27, 2013

காலபைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு





காலபைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்அதை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்இந்த காலபைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.


இந்த பதிவில் காசி காலபைரவர் கயிறு பற்றி பார்ப்போம்இதற்கு தேவையான பொருள் ஒரு கறுப்பு கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமேகாலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி () தேய்பிறை சஷ்டி () பௌர்ணமி () செவ்வாய் கிழமை () ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.


முதலில் கீழ்க்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை 8 முறை காலபைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போது அவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய கறுப்பு கயிற்றை வைக்கவும்.  8 முறை பாராயணம் செய்த பின்பு அந்த கறுப்பு கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து காலபைரவரை மனதில் நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.


அவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் கறுப்பு கயிற்றில் ஒரு முடிச்சு வீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு 9 வது பாடலை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோ அவர்களுக்கு கட்டவும்இந்த காலபைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில் எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.


இவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கதுபைரவரின் அருளை தரக்கூடியதுஎந்த துன்பத்திலிருந்தும் காக்கக்கூடியதுஇந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும் வேலையில் இறங்கவும்இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.


இந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :

1.   பயம் போக்கும்
2.   தைரியம் தரும்
3.   கர்மவினைகளை அழிக்கும்
4.   விபத்துக்களிலிருந்து காக்கும்
5.   ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போக்கும்
6.   நோய்களையும், தோஷங்களையும் போக்கும்
7.   தீய கனவுகளை ஒழிக்கும்
8.   கடன்களை தீர்க்கும்
9.   பைரவர் அருளை பெருக்கும்.




எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு காலபைரவர் கயிற்றினை தயாரிக்கலாம். 


மனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.  எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

 

Thursday, September 26, 2013

கர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSA5PinclRI5ocUGn73olK8ldQlAlXU5ILY6eVVG4wh5H_Yld3m
http://farm3.static.flickr.com/2619/4183857597_bc0ef0b01e.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizmbsEfu3tsvAuJwcZ21aC2JyCg1fhfdLNmNW1LnaC4UGj-Kzi6HfbD22TkhhelfEXQ6yqWgEmesGBLUc4ZLjpoKqQ48PoS7Mm9Ery6IohP345QFkmwLXM9nvBWn_elLICdk3jLZffr4o/s1600/Kaal+Bhairav1.jpg





1.   தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



2.   பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



3.   சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



4.   புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



5.   தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



6.   ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



7.   அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



8.   பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



9.   காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்.



காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.



காலபைரவம் பஜே.

காலபைரவம் பஜே.



ஓம்.



ஆக்கம்: ஆதிசங்கரர்


மேற்கண்ட பாடல் காலபைரவர் அஷ்டகம் ஆகும்.  இதை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.  இது ஆதிசங்கரரால் காசி மாநகரின் காவல் தெய்வமான காலபைரவர் மேல் பாடிய அஷ்டகம் ஆகும்.  இன்றும் காசியில் இதைக் கொண்டு தான் காலபைரவருக்கு வழிபாடுகள் நடக்கின்றன.  இந்த அஷ்டகம் மூலம் தான் காசி காலபைரவர் கயிறு தயாரிக்கப்படுகிறது.  அதனை தயாரிக்கும் முறையைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.


இதில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.  முதல் 8 பாடல்கள் அஷ்டகம் ஆகும்.  கடைசி 1 பாடல் அஷ்டகத்தின் பலனை கூறுகிறது.  காலபைரவர் அஷ்டகத்தினை பாராயணம் செய்யும் முறைகளைப் பற்றி காண்போம்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை காலபைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு செய்து  வந்தால் கர்ம வினைகள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.

தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.

மேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையில் மனதில் காலபைரவரை நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும்.  அசைவத்தை காலபைரவரே நிறுத்த வைப்பார்.  அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் தண்டனை உண்டு.  தண்டித்து திருத்துவார்.  என்றென்றும் கண்ணின் இமைபோல காப்பார்.  கர்மவினைகளை அழிப்பார் (எல்லா தோஷங்களும் இதில் அடக்கம்).  மனதிற்கு நிம்மதியை அளிப்பார்.  ஞானத்தையும், முக்தியையும் அளிப்பார்.  பாவங்களை அழித்து புண்ணியத்தினை தருவார்.  வருத்தம், சோகம், மயக்கம், ஏழ்மை, கோபம், தாபம் இவற்றை அழித்து பிறவியில்லா பெருநிலையை அளிப்பார்.


காலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒரு முறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதுமானது.  காலபைரவர் ஓடோடி வருவார்.  கண்ணின் இமை போல் காத்து நிற்பார்.  இவரின் அருளில்லாமல் முக்தி கிட்டாது என்பதே உண்மையாகும்.


எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.


ஆலயம் சென்று வழிபாடு செய்வதாக இருந்தால் வழிபாடு செய்யும் நாளுக்கு முந்தைய நாளும், வழிபாடு செய்யும் நாளன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

நீங்கள் காலபைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம்.  அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தினமும் வழிபடுபவர்கள் முக்தியை அடையும் புண்ணியசாலிகளே...!

மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று செபித்து வந்தாலே போதுமானது. மேற்கண்ட மந்திரத்திற்கு அசைவம் மட்டுமே கட்டுப்பாடு ஆகும்.


காலபைரவர் அஷ்டகம் ஒலி வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ