Tuesday, December 31, 2013

தோஷங்கள் போக்கும் சுதர்சனர் அஷ்டகம்

sudarsanar

ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

ஆக்கம்: ஸ்ரீ தேசிகர்

நாம் மேலே காண்பது ஸ்ரீதேசிகர் அருளிய சுதர்சனர் அஷ்டகம் ஆகும்.  இதனை தினமும் பாராயணம் செய்து வந்தால் சுதர்சனர் அருளால் எல்லா தோஷங்களும் நீங்கி 16 பேறுகளும் கிட்டும்.

ஸ்ரீசுதர்சனர் அஷ்டகத்தின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Monday, December 30, 2013

நந்திகேஸ்வரர் துதி - சோமவார பிரதோஷ சிறப்பு பதிவு

தஞ்சை_பெரிய_நந்தி

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

மேற்கண்ட துதியினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் நந்தியின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

பரிகார பைரவர் - பீஷண பைரவர் + சாமுண்டி - கேது

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரம் வரும் நாளில் எமகண்ட காலத்தில் அல்லது திங்கட்க்கிழமை எமகண்ட காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் கொள்ளு பரப்பி அதன் மேல் 7 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 7 கொள்ளுகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். சிவப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 7 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 7 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் கொள்ளு சுண்டல் செய்து படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு செவ்வல்லிப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 34 வயது எனில் 34 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 7 ன் மடங்குகளில் (7, 16, 25, 34, 43, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 திங்கட்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் கேதுவின் பலம் குறைந்தவர்கள், கேது திசை நடப்பவர்கள் மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் கேதுவினால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். ஆன்மபலம் உண்டாகும். சர்ப்ப தோஷங்கள் விலகும்.  பித்ரு தோஷம் விலகும்.  ஆன்ம சாதனையில் வெற்றி கிட்டும்.  ஞானமும் மோட்சமும் கிட்டும்.  பாவங்கள் விலகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் பீஷண பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் சாமுண்டியை நமஹ

Sunday, December 29, 2013

பரிகார பைரவர் - சம்ஹார பைரவர் + சண்டீ - ராகு

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் உளுந்து பரப்பி அதன் மேல் 4 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 4 உளுந்து போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். கறுப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 4 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 4 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் உளுத்தம் மாவும் வெல்லமும் சேர்த்து களி செய்து படையலாக வைக்க வேண்டும். சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

பைரவர் பெருமானுக்கு மந்தாரைப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 40 வயது எனில் 40 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 4 ன் மடங்குகளில் (4, 13, 22, 31, 40, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 ஞாயிற்று கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் ராகுவின் பலம் குறைந்தவர்கள், ராகு திசை நடப்பவர்கள் மற்றும் ராகு தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் ராகுவினால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் ஆகியன விலகும்.  திருமணத்தடைகள் அகலும்.  திடீர் தனவரவு உண்டாகும்.  மந்திர செபங்களில் வெற்றியும், தவ சாதனைகளில் முன்னேற்றமும் உண்டாகும்.  பாவங்கள் விலகும்.  அசாத்திய ஞானம் உண்டாகும்.  சகல போகங்களும் உண்டாகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நமஹ

Saturday, December 28, 2013

பரிகார பைரவர் - குரோதன பைரவர் + வைஷ்ணவி - சனி

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் சனி ஓரையில் அல்லது சனிக்கிழமை சனி ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் எள் பரப்பி அதன் மேல் 8 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 8 எள்கள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். கறுப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 8 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 8 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் வெல்லம் சேர்த்த எள்ளுருண்டை படையலாக வைக்க வேண்டும். சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

பைரவர் பெருமானுக்கு கருங்குவளை பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 53 வயது எனில் 53 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 8 ன் மடங்குகளில் (8, 17, 26, 35, 44, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 சனிக்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் சனியின் பலம் குறைந்தவர்கள், சனி திசை நடப்பவர்கள் மற்றும் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.  கவலைகள் தீரும்.  நோய்கள் நீங்ககும்.  கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்கும்.  ஆயுள் அதிகமாகும்.  தொழில் துறையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.  கர்ம வினைகள் தொலையும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் வைஷ்ணவியை நமஹ

Friday, December 27, 2013

பரிகார பைரவர் - ருரு பைரவர் + மாஹேஸ்வரி - சுக்கிரன்

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.  முழுமையான பலன் கிடைக்காது.  நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் வரும் நாளில் சுக்கிர ஓரையில் அல்லது வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் மொச்சைக்காய் பரப்பி அதன் மேல் 6 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 6 மொச்சைக்காய்கள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். வெள்ளை நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 6 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் மொச்சைக்காய் சுண்டல் செய்து படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு அல்லிப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 33 வயது எனில் 33 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 6 ன் மடங்குகளில் (6, 15, 24, 33, 42, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்

ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 வெள்ளிக்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் குறைந்தவர்கள், சுக்கிர திசை நடப்பவர்கள் மற்றும் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும்.  இதன் மூலம் சுக்கிரனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். சுகபோகங்கள் உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் வெற்றியும் உண்டாகும்.  திருவருள் உண்டாகும்.  காதலில் வெற்றி உண்டாகும்.  கலைத்துறையில் வெற்றியும் புகழும் உண்டாகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது.  இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் ருரு பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் மாஹேஸ்வரியை நமஹ

Thursday, December 26, 2013

பரிகார பைரவர் - அசிதாங்க பைரவர் + பிராம்ஹி - வியாழன்

      imageimage 

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் குரு ஓரையில் அல்லது வியாழக்கிழமை குரு ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் கொண்டைக்கடலை பரப்பி அதன் மேல் 3 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 3 கொண்டைக்கடலைகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். மஞ்சள் நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 3 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 3 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் கொண்டைக்கடலை சுண்டல் செய்து படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு முல்லைப்பூ மாலை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 30 வயது எனில் 30 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 3 ன் மடங்குகளில் (3, 12, 21, 30, 39, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 வியாழக்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்கள், குரு திசை நடப்பவர்கள் மற்றும் குரு தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் குருவினால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.  சுபகாரியத்தடைகள் விலகும்.  புத்திர தோஷம் விலகும்.  குருவருள் உண்டாகும்.  படிப்பிலும் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும்.  இறையருள் பூரணமாக கிட்டும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் பிராம்ஹியை நமஹ

Wednesday, December 25, 2013

பரிகார பைரவர் - உன்மத்த பைரவர் + வாராகி - புதன்

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் புதன் ஓரையில் அல்லது புதன் கிழமை புத ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் பச்சைப்பயிறு பரப்பி அதன் மேல் 5 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 5 பச்சைப்பயிறு போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். பச்சை நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 5 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் பச்சைப்பயிறு ரவையில் செய்யப்பட்ட பாயசம் செய்து அதில் வெல்லம் சேர்த்து படையலாக வைக்க வேண்டும். சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

பைரவர் பெருமானுக்கு வில்வ இலை மாலை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 41 வயது எனில் 41 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 5 ன் மடங்குகளில் (5, 14, 23, 32, 41, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 புதன் கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் புதனின் பலம் குறைந்தவர்கள், புதன் திசை நடப்பவர்கள் மற்றும் புத தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் புதனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். வாக்கு வன்மை உண்டாகும். கல்வி கேள்விகளில் வெற்றி உண்டாகும்.  வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.  அறிவு மிகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் வாராகியை நமஹ

Tuesday, December 24, 2013

பரிகார பைரவர் - சண்ட பைரவர் + கவுமாரி - செவ்வாய்

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய் ஓரையில் அல்லது செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் துவரை பரப்பி அதன் மேல் 9 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 9 துவரைகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். சிவப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 9 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 9 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் செய்த துவரம் பருப்பு சாதம் படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு செவ்வரளி பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 45 வயது எனில் 45 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 9 ன் மடங்குகளில் (9, 18, 27, 36, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 செவ்வாய்க்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் செவ்வாயின் பலம் குறைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் செவ்வாயால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.  வறுமையும், நோய்களும் நீங்கும்.  பூமி யோகங்கள் உண்டாகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் கவுமாரியை நமஹ

Monday, December 23, 2013

பரிகார பைரவர் - கபால பைரவர் + இந்திராணி - சந்திரன்

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் சந்திர ஓரையில் அல்லது திங்கட்கிழமை சந்திர ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதன் மேல் 2 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 2 நெல் மணிகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். வெள்ளை நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 2 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் தயிர் சாதம் செய்து படையலாக வைக்க வேண்டும்.

பைரவர் பெருமானுக்கு வெள்ளை அரளி மாலையை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 47 வயது எனில் 47 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 2 ன் மடங்குகளில் (2, 11, 20, 29, 38, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
 
மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 திங்கட்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் மற்றும் சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் சந்திரனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். மன நோய்கள் நீங்கும்.  மன அமைதி உண்டாகும். மன நிம்மதி கிட்டும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் இந்திராணியை நமஹ

Sunday, December 22, 2013

பரிகார பைரவர் - சொர்ண பைரவர் + சொர்ணதா தேவி - சூரியன்

Swarna_Agarshana_bairavar2.166223028_thumb[4]

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாளில் சூரிய ஓரையில் அல்லது ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் கோதுமை பரப்பி அதன் மேல் 10 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 10 கோதுமைகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். சிவப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 10 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 10 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் கோதுமை ரவையில் செய்யப்பட்ட பாயசம் செய்து அதில் வெல்லம் சேர்த்து படையலாக வைக்க வேண்டும். சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

பைரவர் பெருமானுக்கு தாமரைப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 37 வயது எனில் 37 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 1 ன் மடங்குகளில் (1, 10, 19, 28, 37, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்:

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்:

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 ஞாயிற்று கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள் மற்றும் சூரிய தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் சூரியனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். ஆன்மபலம் உண்டாகும்.  சகல சுகங்களும் உண்டாகும்.  அரச போகம் உண்டாகும்.  அரசியலில் வெற்றி உண்டாகும்.  அரசாங்க ஆதரவு உண்டாகும்.  அதிகார பதவிகள் கிட்டும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ணதாயை நமஹ

Saturday, December 21, 2013

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்

pancha muga vinayagaradi-sankara1

1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
     புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
     ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
     கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

நாம் மேலே காண்பது கணேச பஞ்சரத்ன துதியாகும். இதனை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்.  இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

கணேச பஞ்சரத்ன துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் கம் கணபதயே நமஹ

Friday, December 20, 2013

மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்

Lakshmi11

1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே.
    ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
      த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
      மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

நாம் மேலே காண்பது மஹா லட்சுமி அஷ்டகம் ஆகும்.  இது மஹா லட்சுமியின் அருள் வேண்டி இந்திரனால் இயற்றப்பட்டது.  இது மஹா லட்சுமியின் அருளினை வாரி வழங்க வல்லது.  மஹா லட்சுமியின் அருள் இருந்தாலே போதும் நம் வாழ்வில் அனைத்து பேறுகளும் தானே வந்தடையும்.

இதனை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும், நினைத்தவைகள் கைகூடுதலும், அரச போகமும் உண்டாகும்.

இதனை தினமும் 1 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் அழிந்து போகும்.

இதனை தினமும் 2 வேளை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வமும், தானிய விருத்தியும் உண்டாகும்.

இதனை தினமும் 3 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து எதிரிகளும் அழிந்து நிம்மதியான வாழ்வு கிட்டும்.

இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் மகா லட்சுமியின் காட்சியும் வரமும் கிட்டும்.

மகா லட்சுமி அஷ்டகத்தின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியை நமஹ

Thursday, December 19, 2013

நடராஜப்பத்து – ஆருத்ரா திருநாள் சிறப்புப் பதிவு

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய்

தடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனம் உன்னடிவிட்டு அகலாது நிலைநிற்க ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதும்

மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்ப்பவர்கள் பழியார்களோ

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ

முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாயத் திரிந்தென்ன சீஷர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை ஒன்றினைத் தடை செய்யுமோ

உதவுமோ இதுவெல்லாம் உபாயம் கருதியே உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக் கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ பார்வையும் அந்தமோ இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ இதுவே உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் வாழ்வனோ உனையடுத்துங் கெடுவனோ

ஏழை என் முறையீட்டில் குற்றமென கூறுநீ முப்புரம் எரித்த ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருள் அளிக்க நினைவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…!

நாம் மேலே காண்பது சிறுமணவை முனிசாமி முதலியார் இயற்றிய நடராஜப்பத்து என்னும் துதியாகும்.  இது சைவர்களின் கோவில் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானை குறித்து பாடப்பட்டதாகும்.

இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் தில்லைக்கரசே போற்றி…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

govu

குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது.  எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள்.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது.  மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்.  பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.

எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் குலதேவதாய நமஹ

ஓம் குலதேவதாயை நமஹ

Wednesday, December 18, 2013

ஐயப்பனின் அருளினைத் தரும் சாஸ்தா அஷ்டகம்

sasta

ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

களமிருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…!
சரணம் ஐயப்பா…!! ஸ்வாமி சரணம் ஐயப்பா..!!!

நாம் மேலே காண்பது சாஸ்தா அஷ்டகம் ஆகும்.  இது ஐயப்பன் என்னும் சாஸ்தாவின் அருளினை பெற பெரிதும் உதவும் துதியாகும்.  ஐயப்ப பக்தர்கள் தினமும் இரவு பூசை முடிக்கும் போது இதனை பாடி முடிக்க வேண்டும்.  எல்லா ஐயப்பன் கோவில்களிலும் இரவு பூசை முடிந்தவுடன் இந்த அஷ்டகத்தினை பாடி நடைசாத்துவது வழக்கம்.

சாஸ்தா அஷ்டகத்தின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய பின்வரும் தொடர்புகளை சொடுக்கவும்.

1. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (முதல் வடிவம்)

2. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (இரண்டாம் வடிவம்)

3. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (மூன்றாம் வடிவம்)

4. திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடியது

5. திரு. உன்னிக்கிருஷ்ணன் அவர்கள் பாடியது

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

சுவாமியே சரணம் ஐயப்பா

Tuesday, December 17, 2013

நவதுர்க்கையின் வடிவங்கள்

Happy-Dussehra-Greeting-Card-Maa-Durga-Facemaa-durga-wallppaer

வ.எண் துர்க்கையின் பெயர் வடிவத்தின் விளக்கம்
1. வன துர்க்கை வனங்களில் உறைந்திருப்பவள்
2. ஜல துர்க்கை நீரில் உறைந்திருப்பவள்
3. வன்னி துர்க்கை மரத்தினில் உறைந்திருப்பவள்
4. தூல துர்க்கை மண்ணில் உறைந்திருப்பவள்
5. விஷ்ணு துர்க்கை ஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6. பிரம்ம துர்க்கை படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7. சிவ துர்க்கை அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8. மகா துர்க்கை சகல பாக்கியங்களைத் தருபவள்
9. சூலினி துர்க்கை சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

Monday, December 16, 2013

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Periachi

பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.

பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.

அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.

அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.

அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.

தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.

கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சக்தி ஓம்

Sunday, December 15, 2013

அரசு வேலை கிடைக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம்

agathiyar

surya

ram

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக

தியானம்
ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
    ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
    உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
    யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
    ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
    சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
    பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
    ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
    மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
    வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
      ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
      திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
      அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
      கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
      கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
      தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
      ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
       நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
       நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
       பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
      கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
       நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
       பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
       ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
       யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
      கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
      எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
       ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
       தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
       த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
       ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி

நாம் மேலே காண்பது மகத்துவம் பொருந்திய அகத்தியர் இயற்றிய ஆதித்ய ஹ்ருதயம் ஆகும்.  இது அகத்தியரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்டது.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.  தன்னை மனிதனாக கூறிக் கொண்ட ராமனுக்கு சூரியனின் அருளை வழங்க அகத்தியர் இதனை உபதேசம் செய்தார்.  இது சோர்வினை போக்க வல்லது.  தைரியத்தையும், பலத்தையும் கொடுக்கக்கூடியது.  ஆயுளை வளர்க்கக்கூடியது.  புண்ணியத்தை தர வல்லது.  எதிரிகளை அழிக்கக்கூடியது.

நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.  அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.

பொதுவாக நம்மில் பலர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.  அவ்வாறு முயற்சி செய்யும் எல்லோருக்கும் அரசு வேலை அமைவதில்லை.  பலரின் முயற்சி வீணாக போகிறது.  இதனை போக்கும் விதத்தில் அரசு வேலையை பெற ஆதித்ய ஹ்ருதய துதியை பயன்படுத்தும் முறையை கீழே காண்போம்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.

முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும்.  பின்பு கணபதியை வணங்கவும்.  பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும்.  பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்.  பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.

இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும்.  கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும்.  பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். 

ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும்.  எனவே அதனை விலக்க வேண்டும்.  எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும்.  சூரிய தோஷம் நீங்கும்.  அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும்.  அரசாங்க ஆதரவு உண்டாகும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.  அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.

மற்றவர்கள் இதனை பின்பற்றினால் எல்லா செயல்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.  தைரியமும் மனபலமும் உண்டாகும். ஆன்ம லாபமும் உண்டாகும்.  செல்லுமிடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும்.

கிரக தோஷங்கள் நீங்கி, சூரியனின் அருளினைப் பெற்று எல்லா நலங்களும் பெற இறையருளும் குருவருளும் திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஜயமில்லை.

சூரிய வழிபாடு என்பது சிவ வழிபாட்டில் ஒரு அங்கம் என்பதை நாம் கருத்தினில் கொள்ள வேண்டும்.

இப்பதிவினை ஆதித்ய ஹ்ருதயம் வழங்கிய அகத்தியரின் பாதம் பணிந்து ஆன்மீகச்சுடர் வலைப்பூ வெளிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஆதித்ய ஹ்ருதயம் துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஆதித்யாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ