Showing posts with label அமாவாசை. Show all posts
Showing posts with label அமாவாசை. Show all posts

Sunday, January 18, 2015

2015 ம் ஆண்டு அமாவாசை வரும் நாட்கள்

sarabar__lord_sarabeswarar_large

Amavasai - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

Thursday, February 20, 2014

2014 ம் வருட முக்கிய திதிகள் மற்றும் நட்சத்திர நாட்கள்

lord-shiva-57a

வ.எண்

திதிகள் / நட்சத்திரங்கள் pdf வடிவில் jpg வடிவில்

1.

அமாவாசை Amavasai - 2014.pdf Amavasai - 2014.jpg
2. பௌர்ணமி Pournami  - 2014.pdf Pournami - 2014.jpg
3. தேய்பிறை சதுர்த்தி / சங்கடஹர சதுர்த்தி Sankadahara Chadhurthi - 2014.pdf Sankadahara Chadhurthi - 2014.jpg
4. வளர்பிறை சதுர்த்தி Valarpirai Chadhurthi - 2014.pdf Valarpirai Chadhurthi - 2014.jpg
5. தேய்பிறை சஷ்டி Theipirai Shashti - 2014.pdf Theipirai Shashti - 2014.jpg
6. வளர்பிறை சஷ்டி Valarpirai Shashti - 2014.pdf Valarpirai Shashti - 2014.jpg
7. தேய்பிறை அஷ்டமி Theipirai Ashtami - 2014.pdf Theipirai Ashtami - 2014.jpg
8. வளர்பிறை அஷ்டமி Valarpirai Ashtami - 2014.pdf Valarpirai Ashtami - 2014.jpg
9. தேய்பிறை நவமி Theipirai Navami - 2014.pdf Theipirai Navami - 2014.jpg
10. வளர்பிறை நவமி Valarpirai Navami - 2014.pdf Valarpirai Navami - 2014.jpg
11. தேய்பிறை துவாதசி Theipirai Dwadhasi - 2014.pdf Theipirai Dwadhasi - 2014.jpg
12. வளர்பிறை துவாதசி Valarpirai Dwadhasi - 2014.pdf Valarpirai Dwadhasi - 2014.jpg
13. தேய்பிறை பிரதோஷம் / மாத பிரதோஷம் Theipirai Thrayodhasi - 2014.pdf Theipirai Thrayodhasi - 2014.jpg
14. வளர்பிறை பிரதோஷம் / பட்ச பிரதோஷம் Valarpirai Thrayodhasi - 2014.pdf Valarpirai Thrayodhasi - 2014.jpg
15. தேய்பிறை சதுர்தசி / மாத சிவராத்திரி Theipirai Chadhurdhasi - 2014.pdf Theipirai Chadhurdhasi - 2014.jpg
16. பரணி நட்சத்திரம் Barani - 2014.pdf Barani - 2014.jpg
17. கிருத்திகை நட்சத்திரம் Kiruthigai - 2014.pdf Kiruthigai - 2014.jpg
18. திருவாதிரை நட்சத்திரம் Thiruvadhirai - 2014.pdf Thiruvadhirai - 2014.jpg
19. ஆயில்யம் நட்சத்திரம் Aayilyam - 2014.pdf Aayilyam - 2014.jpg
20. விசாகம் நட்சத்திரம் Visagam - 2014.pdf Visagam - 2014.jpg
21. மைத்ர முகூர்த்தங்கள் Maithra Muhurtham - 2014.pdf Maithra Muhurtham-2014-1
Maithra Muhurtham-2014-2
22. அனைத்து நாட்களும் .rar வடிவில் 2014 - PDF.rar 2014 - JPG.rar
23. அனைத்து நாட்களும் .zip வடிவில் 2014 - PDF.zip 2014 - JPG.zip
24. அனைத்து நாட்களும் .b1 வடிவில் 2014 - PDF.b1 2014 - JPG.b1
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 

Thursday, January 2, 2014

2014 ம் வருட அமாவாசை வரும் நாட்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4IRnAN4mnpz6C0nRfwC8YgVewX_2QyQfLPkesvD0RTdVcK9hPhAyItSJqVaEGxdIXpQNpeHQ37K5kXsAltV9skdE2hWYG_S0MgjP62BM9f-GS1JTG5oAWKWWQfogobGqy6hFaIaRFDJaq/s1600/0a.Lord-Rama-and-Lord-Shiva.jpg

Amavasai - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, November 17, 2013

பித்ரு தோஷம் நீக்கும் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்

image

image

image

image

image

image

 

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய திருவிராமேச்சுரம் பாடல் ஆகும்.  இது நமக்கு வெளியே உள்ள பகை, நமக்கு உள்ளே உள்ள பகை (கர்மவினை) இவற்றை அழித்து பித்ருக்களின் சாபத்தையும், தோஷத்தையும் போக்க வல்லது.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது உங்களின் பிறந்த நட்சத்திரம் அல்லது பிறந்த திதி வரும் நாளில் ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அல்லது அமாவாசை திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.  அமாவாசை திதியே மிக மிக சிறப்பானது.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.  மேலும் பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

 

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்றும், ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

 

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.  அனைத்துவித தோஷங்களும் நீங்கும்.

 

தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  பாராயணம் செய்த பின்பு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக அளிக்கவும்.  வெகு விரைவில் பித்ரு தோஷம் நீங்கும்.  வாழ்வில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்கும்.  நிம்மதியும், பித்ருக்களின் அருளும் கிட்டும்.  நமக்கு வெளியே உள்ள பகையும், நமக்கு உள்ளே உள்ள பகையும் அழிந்து பித்ரு தோஷம் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

 

Saturday, November 2, 2013

நந்தன – விஜய வருட அமாவாசை தினங்கள்

cow

ammavasai-21

a936a5af-a017-4da0-be16-24377f566407_S_secvpf.gif

 

நந்தன – விஜய வருட அமாவாசை வரும் தினங்கள் (இந்திய நேரப்படி):

 

9-5-2013 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி 22 நிமி 0 வி முதல் 10-5-2013 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 3 நிமி 3 வி வரை

 

7-6-2013 வெள்ளிக்கிழமை இரவு 7 மணி 5 நிமி 46 வி முதல் 8-6-2013 சனிக்கிழமை இரவு 9 மணி 30 நிமி 28 வி வரை

 

7-7-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 22 நிமி 31 வி முதல் 8-7-2013 திங்கட்கிழமை மதியம் 12 மணி 47 நிமி 49 வி வரை

 

6-8-2013 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணி 35 நிமி 56 வி முதல் 7-8-2013 புதன்கிழமை அதிகாலை 3 மணி 24 நிமி 3 வி வரை

 

4-9-2013 புதன்கிழமை மாலை 4 மணி 24 நிமி 59 வி முதல் 5-9-2013 வியாழக்கிழமை மாலை 5 மணி 9 நிமி 21 வி வரை

 

4-10-2013 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 41 நிமி 41 வி முதல் 5-10-2013 சனிக்கிழமை காலை 6 மணி 8 நிமி 6 வி வரை

 

2-11-2013 சனிக்கிழமை இரவு 8 மணி 18 நிமி 1 வி முதல் 3-11-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி 24 நிமி 18 வி வரை

 

2-12-2013 திங்கட்கிழமை காலை 8 மணி 58 நிமி 45 வி முதல் 3-12-2013 செவ்வாய்க்கிழமை காலை 5 மணி 56 நிமி 30 வி வரை

 

31-12-2013 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி 31 நிமி 37 வி முதல் 1-1-2014 புதன்கிழமை மாலை 4 மணி 46 நிமி 55 வி வரை

 

30-1-2014 வியாழக்கிழமை காலை 7 மணி 1 நிமி 13 வி முதல் 31-1-2014 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி 10 நிமி 4 வி வரை

 

28-2-2014 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி 50 நிமி 43 வி முதல் 1-3-2014 சனிக்கிழமை மதியம் 1 மணி 31 நிமி 4 வி வரை

 

30-3-2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி 33 நிமி 36 வி முதல் 31-3-2014 திங்கட்கிழமை இரவு 12 மணி 16 நிமி 39 வி வரை

  

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

Friday, October 4, 2013

மகாளய அமாவாசை திருநாள் - தானங்கள்


  மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்வோம்...!  
கர்ம வினைகளைத் தூள் தூளாக்குவோம்...!

 
 
இன்று (4-10-2013) காலை 7.04 மணி முதல் நாளை (5-10-2013) காலை 6.49 மணி வரை அமாவாசை திருநாள் அமைந்துள்ளது.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானது.  இதற்கு மகாளய அமாவாசை என்று பெயர்.  இது நாள் வரை திதி மற்றும் தர்ப்பணங்கள் செய்யாதவர்கள் இந்த மகாளய அமாவாசையில் திதி மற்றும் தர்ப்பணங்கள் செய்யலாம்.  இந்த மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது.  இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.  நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

பொருட்கள்
தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
அன்னம்
வறுமையும், கடனும் நீங்கும்
துணி
ஆயுள் அதிகமாகும்
தேன்
புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம்
கண்பார்வை தெளிவாகும்
அரிசி
பாவங்களை போக்கும்
நெய்
நோய்களை போக்கும்
பால்
துக்கம் நீங்கும்
தயிர்
இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள்
புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம்
குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி
மனக்கவலை நீங்கும்
பசு
ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய்
நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி
ஞானம் உண்டாகும்
பூமி தானம்
ஈஸ்வர தரிசனம் உண்டாகும்



மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு.  சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும்.  அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.  இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று உண்டு.  அது என்ன?


அது தான் பசுவிற்கு உணவளிப்பது.  கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.  பசுவிற்கு என்ன பொருட்கள் தானமாக தரலாம் என்ற கேள்விக்கு பதில் இதோ.


பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.


கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர்.  அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா?  முடியும்.  பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம்.  எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.


அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து நமது கர்ம வினைகளை போக்குவோம்.  அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும்.  நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும்.  நமது குலம் தழைக்கும்.  திருவண்ணாமலை தலத்தில் பசுவிற்கு உணவளித்தலே உலகின் மிகப்பெரிய தானம் ஆகும்.  இவ்வாறு செய்யும் தருணம் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கே கிட்டும்.


அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.


ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பசுவிற்கு உணவளிப்போம். நமது கர்ம வினைகளை தூள் தூளாக்குவோம்.



தென்னாடுடைய சிவனே போற்றி...!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

எம் அண்ணாமலையானே போற்றி போற்றி...!!!

ஓம் சிவ சிவ ஓம்