Showing posts with label முக்தி தலங்கள். Show all posts
Showing posts with label முக்தி தலங்கள். Show all posts

Sunday, November 17, 2013

கர்மவினை நீக்கும் தீபங்கள் - தீப திருநாள் சிறப்பு பதிவு

image

அண்ணாமலையார் பாதம்

image

திருஅண்ணாமலை

image

தீபம் ஏற்றுவதற்கு முன்

image

தீபம் ஏற்றிய பின்

image

கோபுரங்களுக்கிடையே மலைமேல் தீபம்

image 

மலைமேல் தீபம்

 

தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக்கூடியவை.  சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.  தீபங்கள் தீய சக்திகளை அண்டாத வண்ணம் காக்கக்கூடியவை.  வேண்டும் பலனைத் தரக்கூடியவை.  சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவ லோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.  தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.  மிகுந்த புண்ணியம் சேரும்.  சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

 

இன்று திருக்கார்த்திகை திருநாள்.  இன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.  இன்று ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.  தீபங்களின் மகிமை பற்றிய சிறு கணக்கு இதோ.

 

1000 நெய் தீபங்கள் = 1 தேங்காய் எண்ணெய் தீபம்

1000 தேங்காய் எண்ணெய் தீபங்கள் = 1 நல்லெண்ணெய் தீபம்

1000 நல்லெண்ணெய் தீபங்கள் = 1 விளக்கெண்ணெய் தீபம்

1000 விளக்கெண்ணெய் தீபங்கள் = 1 வேப்பெண்ணெய் தீபம்

1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்

 

ஒவ்வொரு தீபமும் நம் வாழ்வில் ஒளி ஏற்றட்டும்.  தீபங்களை ஏற்றி அனைத்து கர்மவினைகளை நீக்கி சிவனருள் பெற்று இனிதுடன் வாழ்வோம்.  தீபத்திருநாளில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ அண்ணாமலையாரின் பாதம் பணிந்து இப்பதிவினை வெளிவிடுவதில் பெருமை கொள்கிறது.

 

தீபத்திருநாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் அண்ணாமலையார் பாதங்களில் இப்பதிவு சிறு காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

தீபம்

கார்த்திகை தீபம்

அகர தீபமோ குகநாதம்

உகர தீபமோ கணநாதம்

மகர தீபமோ பூதநாதம்

மகா தீபமோ சிவ நாதம்

அகார – உகார – மகார வடிவான ஓங்கார தீபம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

திருச்சிற்றம்பலம்…! – பொன்னம்பலம்…!! – அருணாச்சலம்…!!!

 

Friday, October 4, 2013

முக்தி தலங்கள் - தென்னாடுடைய சிவன்








 

முக்தி தலங்கள்:

வ. எண்
தலப்பெருமை
தலம்
1.    
பிறக்க முக்தியளிப்பது
திருவாரூர்
2.    
வாழ முக்தியளிப்பது
காஞ்சிபுரம்
3.    
இறக்க முக்தியளிப்பது
வாரணாசி (காசி)
4.    
தரிசிக்க முக்தியளிப்பது
தில்லை (சிதம்பரம்)
5.    
சொல்ல முக்தியளிப்பது
திருஆலவாய் (மதுரை)
6.    
கேட்க முக்தியளிப்பது
அவிநாசி
7.    
நினைக்க முக்தியளிப்பது
திருவண்ணாமலை


மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.  இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.


இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.  அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.  ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.


ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று.  இது எல்லோராலும் இயலாது.  சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது.  மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.


ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.  ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம்.  அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.


மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.  அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம்.  அர்ச்சனை செய்யலாம்.  அன்னதானம் செய்யலாம்.  சிவத்தலத்தில் மந்திரம் செபிக்கலாம்.  அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவனது மந்திரங்களை கேட்கலாம்.  சிவபெருமானின் பெருமைகளை பேசலாம்.  அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம்.


இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும்.  மிகுந்த புண்ணியம் கிட்டும்.  16 பேறுகளும் கிட்டும்.  சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!


ஓம் ஆதிரை நாயகா போற்றி…!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!


ஓம் சிவ சிவ ஓம்