Sunday, December 29, 2013

பரிகார பைரவர் - சம்ஹார பைரவர் + சண்டீ - ராகு

imageimage

பரிகார முறை:

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.

அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.

அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வாழையிலையில் உளுந்து பரப்பி அதன் மேல் 4 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 4 உளுந்து போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். கறுப்பு நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 4 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 4 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

அவரவர் வீட்டில் உளுத்தம் மாவும் வெல்லமும் சேர்த்து களி செய்து படையலாக வைக்க வேண்டும். சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

பைரவர் பெருமானுக்கு மந்தாரைப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 40 வயது எனில் 40 ரூபாய்கள் தர வேண்டும்.

பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 4 ன் மடங்குகளில் (4, 13, 22, 31, 40, …) செபம் செய்ய வேண்டும்.

 

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

 

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

 

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 ஞாயிற்று கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.

வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

பரிகாரத்தின் பலன்:-

பிறந்த ஜாதகத்தில் ராகுவின் பலம் குறைந்தவர்கள், ராகு திசை நடப்பவர்கள் மற்றும் ராகு தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் ராகுவினால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் ஆகியன விலகும்.  திருமணத்தடைகள் அகலும்.  திடீர் தனவரவு உண்டாகும்.  மந்திர செபங்களில் வெற்றியும், தவ சாதனைகளில் முன்னேற்றமும் உண்டாகும்.  பாவங்கள் விலகும்.  அசாத்திய ஞானம் உண்டாகும்.  சகல போகங்களும் உண்டாகும்.

குறிப்பு:-

இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நமஹ

 

4 comments:

 1. iya vanakkam. thangal 5 ennaigalil vilakku etra vendum endru sonneergal. 5 im kalantha ennai ya? allathu 5 m thani thani yagava? thangal vilakkumaru kettukolgiren. vanakkam.

  ReplyDelete
  Replies
  1. அய்யா..வணக்கம்...! ஐந்து எண்ணெய்களும் கலந்த எண்ணெய் தான். தனித்தனியாக இல்லை. மேலும் விபரங்களுக்கு http://aanmeegachudar.blogspot.in/2013/10/blog-post_26.html மற்றும் http://aanmeegachudar.blogspot.in/2013/11/blog-post_6290.html பதிவுகளை பார்க்கவும்.

   Delete
 2. iya vanakkam. thangal mantharai pu endru sonnathu sembaruthi pu va iya? mantharai endra pu thelunggu matrum malaiyalathil mantharai endru sonnargal. thamizhil sembaruthi endru sonnargal. thanggal vilakkam tharumaru anbudan kettukkolgiren. nandri vanakkam.

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கம்...! மந்தாரை மலர் வேறு. செம்பருத்தி மலர் வேறு. இரண்டும் ஒன்றல்ல.

   Delete