Tuesday, November 19, 2013

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்

image
image

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.  நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.  நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
 
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.  வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
 
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. 
 
 
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
 
 
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
 
 
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 
 
ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!
 
 
 
 

7 comments:

 1. அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும் என்றால் எவ்வளவு நாட்களுக்கு சார் ?

  ReplyDelete
  Replies
  1. தற்காலிகமாக நிறுத்திவிடுதல் என்பதற்கு ஒரு கால வரையறை உண்டு. ஆனால் நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும் என்றால் மீண்டும் வாழ்நாளில் சாப்பிடக்கூடாது என்று தானே பொருள்...!

   Delete
 2. வணக்கம் ஐயா
  என் நீண்டநாள் தேடுதலுக்கு இவ் பதிவு மிக பலன் உள்ளதாக உள்ளது .... இவ் மந்திரத்தினை ஒலி பதிவாக பதிவு செய்தல் மிக பலன் உள்ளதாக இருக்கும் ஐயா ... இவ் மந்திரத்தினை ஒலி பதிவாக நான் எதிர்பார்க்கின்றேன்

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா
  நல்ல பயனுள்ள பதிவு நன்றி.
  காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் தான் பண்ணவேண்டுமா அல்லது அவர்களுக்கு பதில் மற்றவர்கள் பண்ணலாமா
  ஒரே வீட்டில் முன்று பேர்களுக்கு இருந்தால் என்ன பண்ணுவது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒருவரே மற்ற இரண்டு பேர்களுக்கும் சேர்த்து பண்ணலாமா விளக்கவும்
  உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது
  புத்தாண்டு வாழ்த்துகள்
  நினைத்த நல்ல காரியங்கள் நடக்க வாழ்த்துகள்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 4. I have kala sarpa dosham 30 unmarried,i will try to do this pariharam

  ReplyDelete
 5. what to do with silver naagams,after some days whether it has to be donated?sorry I don't know to type in tamil.....

  ReplyDelete
 6. நண்பர்களே நாக தோஷம் என்ற தோசம் உண்டு. கால சர்ப்ப தோசம் என்ற ஒரு தோசமே இல்லை. மூல ஏடுகளில் அதைப்பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இந்த கால சர்ப்ப தோசம் என்பது நவீன கால ஜோதிட அன்பர்கள் தங்களது பங்கும் இந்த ஜோதிடத்தில் இருக்க வேண்டும் என்று அதிமேதாவித்தனமாக தினித்து விட்ட ஒரு இழிசெயல் தான்.

  ReplyDelete