Saturday, October 19, 2013

அழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு

Swarna_Agarshana_bairavar2.166223028

swarna bairavar 123

http://3.bp.blogspot.com/-0EqrJo67Ypk/UYSNPKi7NqI/AAAAAAAAC9E/bpgmEIsqT7o/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg

 

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை.  அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம்.  அதே போல் அருள் இல்லாதவர்கட்கு விண்ணுலகம் இல்லை என்பதே இதன் பொருள்.  அருளும், பொருளும் ஒருங்கே கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி தான்.  இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய வழி இருக்கிறதா?  ஆம்.  இருக்கிறது.  அது தான் நம் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும். 

 

பொதுவாக எல்லோரும் கடவுள் வழிபாடு செய்வார்கள்.  ஆனால் அவர்களுக்கு வழிபாட்டின் பலன் வந்து சேருவது தாமதமாகும் அல்லது பலன் கிடைக்கமலேயே போய் விடும்.  இதற்கு காரணம் அசைவம் சாப்பிடுவது தான்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்தாமல் வழிபாடு செய்வதன் பலன் கிடைக்காது.  வழிபாடு செய்வதற்கென்றே சில நியமங்கள் உள்ளன.  மேலும் வழிபாட்டை துவக்கும் நாள், கிழமை, நேரம் ஆகியன மிகவும் முக்கியமானது. 

 

நாம் இங்கே பார்க்கப் போவது மிக மிக மிக சிறப்பான, எளிமையான, மிக மிக மிக சக்தி வாய்ந்த சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  அதாவது திருவாதிரை நாள் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  பொதுவாக ஒருவர் வழிபாடு செய்ய உகந்த காலம் என்று பார்க்கும் போது அவரவர் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமை இவற்றில் வழிபாடு செய்யலாம். 

 

நம்மில் சிலருக்கு பிறந்த ஜாதகம் இருக்காது.  அவர்களின் நட்சத்திரம், திதி, கிழமை தெரியாது.  எனவே நாம் எல்லோருக்கும் பொதுவாக சொர்ண பைரவர் வழிபாடு நடத்த ஒரு அற்புதமான நாள் உண்டு.  அது தான் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் ஆகும்.  திருவாதிரை நட்சத்திரம் நம் ஆதி சிவன் அண்ணாமலையார் அவதாரம் செய்த நட்சத்திரம் ஆகும்.

 

திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் நாம் செய்யும் தானம், செபம், வழிபாடு இவற்றிற்கு கோடி மடங்கு பலன் உண்டு.  அப்படியென்றால் பைரவர் வழிபாட்டை தேய்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பரணி நட்சத்திரம், செவ்வாய் கிழமை, ராகு காலம் இவற்றில் செய்யக்கூடாதா?  கண்டிப்பாக செய்ய வேண்டும்.  இதில் மாற்று கருத்தே இல்லை.  ஆனால் இவற்றையும் விட சக்தி வாய்ந்த நாள் தான் திருவாதிரை நாள் ஆகும்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை திருநாளில் தேய்பிறை சஷ்டியோ அல்லது தேய்பிறை அஷ்டமியோ அல்லது செவ்வாய் கிழமையோ வந்தால் இன்னும் சிறப்பு தான்.  சரி திருவாதிரை வரும் நாட்களை எப்படி கண்டு கொள்வது?  அதற்கான விளக்கம் நமது வலைப்பூவில் திருவாதிரை கிரிவல நாட்கள் தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது.  அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டியது தான்.

 

வழிபாடு செய்ய நாம் முதலில் அசைவத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.  அசைவத்தை நிரந்தரமாக நிறுத்திய பின்பே வழிபாடு செய்ய வேண்டும்.  அசைவத்தை நிறுத்தாமல் வழிபாடு செய்தால் நாய் வந்து கடிக்கும்.  சொர்ண பைரவரே அசைவத்தை நிறுத்த செய்வார்.   வழிபாடு செய்யும் முறை பின்வருமாறு:-

 

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ண பைரவர் சந்நிதியில் ஆரம்பிக்க வேண்டும்.  அவ்வாறு இயலவில்லையெனில் சொர்ண பைரவர் படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக் கொள்ளவும் அல்லது தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும். 

 

இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  வழிபாடு செய்யும் போது சொர்ண பைரவர் அஷ்டகம்  33 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்த பின்பு “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ“ என்று 108 முறை செபம் செய்யவும். கடைசியாக சொர்ண பைரவர் போற்றி - 33 ஒரு முறை பாராயணம் செய்து முடிக்க வேண்டும்.  அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட வேண்டும்.

 

தொடர்ச்சியாக 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாவிடிலும் பரவாயில்லை.  விட்டுவிட்டாவது 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  இந்த வழிபாடு செய்யும் நாளில் விரதம் இருப்பதும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தலும் மிக்க சிறப்பு. இவ்வாறு விரதம் இருத்தலும் கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்தால் பலன்கள் வெகு விரைவில் தேடிவரும்.  இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்தால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-

 

    1. கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும்
    2. சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக வந்து சேரும்
    3. எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்
    4. எல்லா கடன்களும் தீரும்
    5. குன்றாத செல்வம் வந்து சேரும்
    6. வராத கடன்களும் வசூல் ஆகும்
    7. தொழில் பெரிய வளர்ச்சியை அடையும்
    8. நியாயமான பதவி உயர்வுகள் வந்து சேரும்
    9. நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்
    10. நியாயமான முறையில் பண வரவு உண்டாகும்
    11. வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்
    12. மறைமுக எதிரிகள் விலகுவர்
    13. செய்வினை கோளாறுகள் நீங்கும்
    14. அனைத்து வித செல்வங்களும் உண்டாகும்
    15. மிகுந்த புண்ணியம் சேரும்
    16. அட்டமா சித்துக்களும் உண்டாகும்
    17. நிரந்தரமான மனநிம்மதி கிட்டும்
    18. பிறவியில்லா பெருநிலை உண்டாகும்
    19. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
    20. கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்
    21. சாபங்கள் அனைத்தும் நீங்கும்
    22. எல்லா வித நோய்களும் தீரும்
    23. நல்ல மக்கட் பேறு உண்டாகும்
    24. அட்ட லட்சுமிகளின் வாசம் இல்லங்களில் உண்டாகும்
    25. லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு இணையான செல்வம் உண்டாகும்
    26. வீட்டில் கால்நடைகளின் விருத்தி உண்டாகும்
    27. விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்
    28. சித்தர்களின் அருள் கிட்டும்
    29. எல்லா பிரச்சனைகளும் தீரும்
    30. வழக்குகள் அனைத்தும் தீரும்
    31. தவறான பழக்கங்கள் நீங்கும்
    32. அனைத்து கிரகங்களும் நன்மையே செய்யும்
    33. அனைத்து யோகங்களும் உண்டாகும்

 

இதில் விடுபட்ட அனைத்துவித கோரிக்கைகளும் நிறைவேறும்.  வேண்டப்பட்ட கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.

 

குறிப்பு:-

இந்த பதிவினை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பைரவரின் வாகனம் எமது வீட்டின் வாயிலில் படுத்துக் கொண்டிருந்தது.  எங்கள் வீட்டில் பைரவரின் வாகனத்தை வளர்க்கவில்லை.  இப்பதிவினை தட்டச்சு செய்து முடித்த பின்பே பைரவரின் வாகனம் அவ்விடத்தை விட்டு அகன்றது.  மேலும் இந்த பதிவினை தட்டச்சு செய்யும் போது பல்லி நல்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தது.  எல்லாம் அவன் செயல்.  எல்லாம் சொர்ண பைரவரின் அருள்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

38 comments:

  1. வணக்கம் அண்ணா...

    பல புதிய தகவல்கள்.... இதை பின்பற்றி பைரவரே துணை நிற்க வேண்டும்.


    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

    என்ற வள்ளுவ வாக்கிற்கேற்ப நாங்கள் அனைவரும் தங்களுக்கு கடமை பட்டுள்ளோம் அண்ணா...

    மேலும் தங்களிடம் இருந்து அருணாசலத்தின் மகிமையால் பற்பல ஆன்மிக தகவல்களை இனிவரும் காலங்களில் பகிர்ந்தளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான், இறைவன் எழுதும் எழுதுகோல். மை தீர்ந்ததும் (ஆயுள் முடிந்ததும்) இந்த எழுதுகோலுக்கு பதிலாக இறைவன் வேறு ஒரு எழுதுகோலை நியமிப்பான். இதுவே உலக நியதி.

      Delete
  2. Ayya Vanakkam

    Thanks for this wonderful information

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம். தங்களின் நன்றிகள் அனைத்தும் ஆதிசித்தர் காகபுசுண்டரையே சாரும்...!

      Delete
  3. Office irukum poothu , Thiruvathirai Soorna Pairavar Valipadu Seiyalamaa ?? Please give me Answer,


    Thank u sir

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் இறைவனையே சாரும்...! முதன்முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ணபைரவர் சந்நிதியில் தான் ஆரம்பிக்க வேண்டும். பின்பு வீட்டின் பூசையறையில் வழிபாட்டை தொடர வேண்டும். தங்களின் அலுவலகத்தில் பூசையறை இருப்பின் அங்கும் வழிபாடு செய்யலாம்.

      Delete
    2. சொர்ண பைரவர் சன்னதி எங்கு உள்ளது நண்பரே..
      தமிழ்நேசன்

      Delete
    3. தாங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

      Delete
  4. Aaiya vanakam Bairavarai sasti,pornami,Astami, tuesday entha natgalil ragukalathil vanaga venduma allathu ella neramum vanankalama

    ReplyDelete
    Replies
    1. எல்லா நாட்களிலும் வணங்கலாம். தவறில்லை...!

      Delete
  5. May god bless you thank you for enlighten our soul

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவன் செயல்...!

      Delete
  6. அருமையான பதிவு ! அத்துடன் எளிமையான விளக்கம் !

    நன்றி அய்யா !

    அன்புடன்,

    சசி.இராஜசேகர் ,துபாய்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் இறைவனையே சாரும்...!

      Delete
  7. sir i am living in foreign country where is no sornabairavar temple.May i start at home? Please reply me sir

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டில் கோவில் காணக் கிடைக்காத நிலையில் வீட்டின் பூசையறையில் ஆரம்பிக்கலாம். தவறில்லை.

      Delete
  8. ayya thagavalukku nanri
    en peyar gopalakrishnan ulundurpet near by villupuram dist ingu swarna bhairavar temple kattu pokiren .aagaiyal enakku bhairavar udaiya bhairavar astagam ,bhairavar pottri,bhairavar padalgal vendum. in tamil.will u please send me the details.to contact me 9585112421 send in pdf format or in word format or jpeg. or send through mailid gopalrajangam@gmail.com.

    ReplyDelete
    Replies
    1. அய்யா...!

      தங்களின் வரவு நல்வரவாகுக...! மிக்க மகிழ்ச்சி...!! தங்களின் முயற்சி திருவினையாக்கும்...!!! தாங்கள் கோரும் தகவல்கள் அனைத்தும் நமது ஆன்மீகச்சுடர் வலைப்பூவிலேயே உள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்வதில் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  9. அருமையான பதிவு ! அத்துடன் எளிமையான விளக்கம் !

    ReplyDelete
    Replies
    1. இறைவன் கொடுத்த வரம்...!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நல்ல தகவலுக்கு நன்றிகள். சொர்ண பைரவரின் சன்னதி எங்கு உள்ளது. சிவ ஆலயத்தில் மேற்கு நோக்கி பைரவர் சன்னதி இருக்கிறது. அங்கு படிக்கலாமா.
    தமிழ்நேசன்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

      Delete
    2. கடலூர் மாவட்டம். திட்டகுடி நண்பரே.

      Delete
    3. சிதம்பரம் நடராசர் கோவிலில் சொர்ண பைரவர் இருக்கிறாரே...!

      Delete
  12. வணக்கம் ஐயா, அசைவம் நிரந்தரமாக விட வேன்டும் என்றால் , வாழ் நாட்கள் முழுவதும் விட்டே ஆக வேண்டுமா ? தயவு சேய்து கூரூங்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆம். வாழ்நாளில் மீண்டும் அசைவத்தினை சாப்பிடக்கூடாது...!

      Delete
  13. idhai thavirkka veru yedhum vazhi unda ?

    ReplyDelete
  14. I m in salem. Soorna bairavar engu irukaru. Sir.

    ReplyDelete
    Replies
    1. சேலம் - ஆத்தூர் சாலையில் உள்ள உடையாப்பட்டிக்கு அருகில் உள்ள கந்தாசிரமம் தலத்தில் உள்ளார்.

      Delete
  15. sir i am in krishnagiri engu sorna bairavar temple engu ullathu.

    ReplyDelete
  16. Sir In chennai where is Swarna Agarshna bhairava temple

    ReplyDelete
  17. Ungal thagaval Aanaithum Meeka Arumai,Thankal Sevai Kantippaka Thotaravendi aantha Bhairavar arul puriyattum

    ReplyDelete
  18. thank you so much sir . but one thing i have many enemies, i am getting many problems in daily life. please suggest me.
    please tell me court case problems solve pariharam .... Thank you......

    ReplyDelete
  19. sir,

    please send detail of spl saambarani preperation for bhairavar prayer with paal saambarani,naai kadugu,venkadugu,arugampul podi,veppam podi,vilvam podi.

    ReplyDelete
  20. அள்ளி தருவதில்லை என் இறைவன் நம்பி வந்தவரே போதும் என் கூறும் அளவிற்க்கு செல்வவளத்தை குவித்துவிடுவார்

    ReplyDelete