Saturday, December 14, 2013

சிறப்புகள் தரும் சிவாஷ்டகம்

lor26h

ப்ரபும் ப்ராணநாதம் விபும் விச்வநாதம்
ஜகந்நாதநாதம் ஸதானந்தபாஜம் |
பவத்பவ்ய பூதேச்வரம் பூதநாதம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 1


கலே ருண்டமாலம் தநெள ஸர்பஜாலம்
மஹாகாலகாலம் கணேசாதிபாலம் |
ஜடாஜூட கங்கோத்தரங்கைர்விசிஷ்யம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 2

முதாமாகரம் மண்டனம் மண்டயந்தம்
மஹாமண்டலம் பஸ்மபூஷாதரம் தம் |
அநாதிம் ஹ்யபாரம் மஹாமோஹமாரம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 3

தடாதோ நிவாஸம் மஹாட்டாட்டஹாஸம்
மஹாபாபநாசம் ஸதா ஸுப்ரகாசம் |
கிரீசம் கணேசம் ஸுரேசம் மஹேசம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 4

கிரீந்த்ராத்மஜாஸங்க்ருஹீதார்த தேஹம்
கிரெள ஸம்ஸ்திதம் ஸர்வதாஸந்நிகேஹம் |
பரப்ரஹ்மப்ரஹ்மாதிபிர்வந்த்யமானம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 5

கபாலம் த்ரிசூலம் கராப்யாம் ததானம்
பதாம்போஜநம்ராய காமம் ததானம் |
பலீவர்தயாநம் ஸுராணாம் ப்ரதானம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 6

சரச்சந்த்ரகாத்ரம் குணாநந்தபாத்ரம்
த்ரிநேத்ரம் பவித்ரம் தனேசஸ்ய மித்ரம் |
அபர்ணாகலத்ரம் சரித்ரம் விசித்ரம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 7

ஹரம் ஸர்பஹாரம் சிதாபூவிஹாரம்
பவம் வேதஸாரம் ஸதா நிர்விகாரம் |
ஸ்மசானே வஸந்தம் மனோஜம் தஹந்தம்
சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || 8

ஸ்தவம் ய: ப்ரபாதே நர: சூலபாணே:
படேத் ஸர்வதா பர்கபாவானுரக்த: |
ஸபுத்ரம் ஸுஜானம் ஸுமித்ரம் கலத்ரம்
விசித்ரை: ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி || 9

 

நாம் மேலே காணும் துதி சிவாஷ்டகம் ஆகும்.  இது சிவபெருமானின் அருளை வாரி வழங்கக்கூடியது.  இதனை தினமும் 3 வேளைகள் பாராயணம் செய்து வருபவர்கள் சகல கர்மவினைகளும் நீங்கப் பெற்று, நல்ல நண்பர்கள், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இவற்றைப் பெற்று பிறவியில்லா பெருநிலையை அடைவார்கள்.

 

இதன் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Friday, December 13, 2013

முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம்

murugan

swamigal-muruganஓம் குமர குருதாச குருப்யோ நம:


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்

 

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.

 

மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

 

பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.

 

அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.

 

எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே

 

இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

 

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும்.  இது மொத்தம் 10 பாடல்களை உடையது.  இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம்.  வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.

 

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும்.  பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும்.  அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம்.  நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.

 

பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம்.  தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும்.  அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.  அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.

 

தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத்தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

மேற்கண்ட பகை கடிதல் பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

 

Thursday, December 12, 2013

அகத்தியர் பெருமானின் குரு பூசை (21.12.2013 & 22.12.2013)

agathiyar kallaragathiyar poosai

 

அகத்தியரை அறியாத தமிழர்களே இல்லை எனலாம்.  என்றும் இனிய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.  சித்த மருத்துவத்தின் பிதாமகர் இவரே.  சித்தர்களின் தலைவரும் இவரே.  முக்காலமும் உணர்ந்த இவரின் பெருமைகளை பற்றி நமது வலைப்பூவில் ஏற்கனவே ஒரு பதிவு வெளி வந்துள்ளது.

 

எல்லாம் வல்ல அகத்தியர் பெருமான் அவதாரம் செய்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் 21.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 9 மணி 47 நிமி 25 வி முதல் 22.12.2014 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணி 41 நிமி 12 வி வரை வருகிறது.

 

இந்த சிறப்பு வாய்ந்த மார்கழி ஆயில்யம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அகத்தியர் ஆலயத்திற்கு சென்று எல்லாம் வல்ல அகத்தியர் பெருமானை வழிபட்டால் எல்லா வித இன்னல்களும் நீங்கி எல்லா வித பேறுகளையும் பெறுவர் என்பது திண்ணம்.  அகத்தியரின் ஆலயம் கிடைக்காவிடில் அகத்தியர் பெருமானின் திருவுருவப்படத்தினை வைத்து வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் அகத்தியரின் வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்கலாம்.  அவ்வாறு இயலாவிடில் ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் அகத்தியர் பெருமானை வழிபாடு செய்யலாம்.  அகத்தியரை வழிபடும் முறைப் பற்றி ஏற்கனவே வந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

வழிபாடு செய்யும் நேரம் அதாவது கும்ப லக்கினம்  21.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 10 மணி 11 நிமி 33 முதல் காலை 11 மணி 53 நிமி 31 வி வரையிலும், 22.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 10 மணி 7 நிமி 37 வி முதல் காலை 11 மணி 49 நிமி 35 வி வரையிலும் வருகிறது.

 

இந்த பொன்னான தருணத்தில் “ஓம் அகத்தீசாய நமஹ” செபிக்க ஆரம்பிக்கலாம் அல்லது எழுத ஆரம்பிக்கலாம்.  இது வரை செபித்து வந்தவர்கள் அல்லது வழிபாடு செய்து வந்தவர்கள் அல்லது எழுதி வந்தவர்கள் நடுவில் செபிக்காமலோ அல்லது வழிபாடு செய்யாமலோ அல்லது எழுதாமலோ தடைகள் ஏற்பட்டிருக்கலாம்.  இவ்வாறு தடையினால் நடுவில் நிறுத்தியவர்கள் இந்த பொன்னான நேரத்தில் மீண்டும் தொடரலாம்.

 

மேற்கண்ட நேரத்தில் செய்யும் அகத்தியர் வழிபாடு மிகுந்த பலனை கொடுக்கும்.  அகத்தியரை வழிபாடு செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றி விரிவாக ஏற்கனவே வந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.  எனவே நாம் அனைவரும் மேற்கண்ட பொன்னான நேரத்தில் அகத்தியர் பெருமானை வழிபட்டு நமது கர்ம வினைகளை கரைத்து அவரது அன்பிற்கு பாத்திரமாவோம்.

 

அகத்தியர் வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரமான ஆயில்யம் வரும் நாட்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளி வரும்.

 

இப்பதிவினை எழுத தூண்டிய கொல்லிமலையில் வாசம் செய்யும் அகத்தியரின் சீடர் போகர் சித்தரின் பாதங்கள் பணிந்து இப்பதிவினை அகத்தியர் பெருமான் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி

ஓம் போக சித்தாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

 

Wednesday, December 11, 2013

மோட்சம் அளிக்கும் காசி விஸ்வநாதாஷ்டகம்

kashivishwnatimgkasi viswanathpbaab030_lord_shiva_with_shivlinga 

கங்காதரங்கரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய
வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம்
ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே ச மோக்ஷம்

விஶ்வனாதாஷ்டகமிதம் புண்யம் யஃ படேஃ ஶிவ ஸன்னிதௌ
ஶிவலோகமவாப்னோதி ஶிவேனஸஹ மோததே

 

நாம் மேலே காண்பது ஆதிசங்கரர் இயற்றிய காசி விஸ்வநாதாஷ்டகம் ஆகும்.  இதனை தினமும் பாராயணம் செய்பவர்கள் 16 வகை பேறுகளையும் பெற்று கடைசியில் மோட்சத்தினை அடைவார்கள்.

 

இதனை தினமும் சிவ சந்நிதியில் பாராயணம் செய்பவர்கள் சிவலோகத்தில் சிவனுடன் நட்பு பாராட்டி நலமுடன் வாழ்வார்கள்.

 

இதன் ஒலி வடிவம் பழைய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (திரு.S.P. பாலசுப்ரமணியம்)

இதன் ஒலி வடிவம் புதிய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (உமா மோகன் மற்றும் காயத்ரி தேவி)

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

 

Tuesday, December 10, 2013

விஜய வருட (2013–2014) பரணி நட்சத்திர நாட்கள்

bhairava

Barani

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்