Friday, September 27, 2013

காலபைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு





காலபைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்அதை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார்இந்த காலபைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.


இந்த பதிவில் காசி காலபைரவர் கயிறு பற்றி பார்ப்போம்இதற்கு தேவையான பொருள் ஒரு கறுப்பு கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமேகாலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி () தேய்பிறை சஷ்டி () பௌர்ணமி () செவ்வாய் கிழமை () ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.


முதலில் கீழ்க்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை 8 முறை காலபைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போது அவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய கறுப்பு கயிற்றை வைக்கவும்.  8 முறை பாராயணம் செய்த பின்பு அந்த கறுப்பு கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து காலபைரவரை மனதில் நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.


அவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் கறுப்பு கயிற்றில் ஒரு முடிச்சு வீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு 9 வது பாடலை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோ அவர்களுக்கு கட்டவும்இந்த காலபைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில் எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.


இவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கதுபைரவரின் அருளை தரக்கூடியதுஎந்த துன்பத்திலிருந்தும் காக்கக்கூடியதுஇந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும் வேலையில் இறங்கவும்இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.


இந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :

1.   பயம் போக்கும்
2.   தைரியம் தரும்
3.   கர்மவினைகளை அழிக்கும்
4.   விபத்துக்களிலிருந்து காக்கும்
5.   ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போக்கும்
6.   நோய்களையும், தோஷங்களையும் போக்கும்
7.   தீய கனவுகளை ஒழிக்கும்
8.   கடன்களை தீர்க்கும்
9.   பைரவர் அருளை பெருக்கும்.




எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது.  வேறு எதுவும் தேவையில்லை.  வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு காலபைரவர் கயிற்றினை தயாரிக்கலாம். 


மனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.  எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

 

No comments:

Post a Comment