Friday, September 20, 2013

ஆண் பெண் ஒற்றுமை நல்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி - வடமொழியில்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2009/01.12.09/karthikaideepam1.jpghttp://dc343.4shared.com/img/OAWo940n/s7/SIVAN_1768.jpg சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய
 

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
 
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய
 

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
 
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய
 
 
விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய
 

மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய
  
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய
 

அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
  
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய
 

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை
ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
  
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய
 

ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
  
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய
 

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ
  
ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்

ஆக்கம்: ஆதி சங்கரர்


மேற்கண்ட அர்த்தநாரீஸ்வர துதி மிகவும் சக்தி மிக்கது.  குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது.  கணவன் மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது.


இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன் மனைவியை விட்டு பிரியமாட்டார்.  மனைவி கணவனை விட்டு பிரியமாட்டாள்.  இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் உண்டாக்குவார்.


கணவன் மனைவி இடையே விவாகரத்து ஆகாமல் கணவன் மனைவி ஒற்றுமையை நிலை நாட்டுவார்.  இருவரிடையே அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்குவார். 


தம்பதிகளில் யார் வேண்டுமானலும் பாராயணம் செய்யலாம்.  இருவரும் செய்தால் சிறப்பு.  இருவரும் ஒரே சமயத்தில் பாராயணம் செய்தால் அதிக சிறப்பு.  இருவரும் ஒரே நேரத்தில் ஒரே விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு, ஒரே சமயத்தில் தொடங்கி ஒரே சமயத்தில் முடிப்பது மிக மிக சிறப்பு.


இதை எந்த பெண் பாராயணம் செய்கிறாளோ அவளது கணவன் மற்ற பெண்களின் வசியம், மந்திரம், மருந்து இவற்றினால் ஏற்படும் மோகவலையில் விழாமல்,  தன் மனைவியின் பால் மாறா அன்பு கொண்டிருப்பான்.


இதை எந்த ஆண் பாராயணம் செய்கிறானோ அவனது மனைவி மற்ற ஆண்களின் வசியம், மந்திரம், மருந்து இவற்றினால் ஏற்படும் மோகவலையில் விழாமல்,  தன் கணவனின் பால் மாறா அன்பு கொண்டிருப்பாள்.


திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் பாராயணம் செய்தால் இனிய வாழ்க்கை துணையை அமைத்து தருவார் உமாபதி.  இனிய இல்லற வாழ்க்கையை தருவார்.  குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவார்.


காதலிக்கும் ஆணும், பெண்ணும் இதை பாராயணம் செய்து வந்தால் திருமணம் எளிதில் கைகூடும்.  காதலுக்கு ஏற்படும் எதிர்ப்புள் எல்லாம் விலகும்.  மனம் விரும்பிய வண்ணமே திருமணம் இனிதே நடக்கும்.  ஒற்றுமை மேலோங்கும்.  காதலில் முறிவு ஏற்படாது.


இத்துதியை பாராயணம் செய்து வேறொரு ஆணினுடைய மனைவியின் அன்பை பெறவோ அல்லது வேறொரு பெண்ணினுடைய கணவரின் அன்பை பெறவோ இயலாது.  நியாமான அன்பிற்கு மட்டுமே பலனளிக்கும் என்பதை நன்கு நினைவில் கொள்ளவும்.


இதை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவதலத்தில் கொடி மரத்தின் அருகே அமர்ந்து 1 முறை பாராயணம் செய்யவும்.  பின்பு வீட்டிற்கு வந்து அர்த்தநாரீஸ்வரர் சிலை அல்லது படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்யவும்.  பிறகு தினமும் 1 முறை பாராயணம் செய்தால் போதுமானது. 


இதனை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது திருவண்ணாமலையிலோ அல்லது திருச்செங்கோடு தலத்திலோ ஆரம்பம் செய்வது மிக மிக மிக சிறப்பு.  திருவண்ணாமலையில் தான் சிவபெருமான் இறைவிக்கு இடபாகம் அளித்தார்.  அர்த்தநாரீஸ்வரருக்கென்று தனியாக கோவில் உள்ள தலம் திருச்செங்கோடு தலம் ஆகும்.

திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரர் கார்த்திகை தீப திருநாளன்று தீபம் ஏற்றும் வேளையில் காட்சி தருவார்.
  திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் தினமும் காட்சி தருவார்.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வாழும் ஒரு வகுப்பினர் திருமணம் நடந்தவுடன் மணமக்களை திருச்செங்கோடு அழைத்து சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வீடு திரும்பிய பின்பு தான் சாந்தி முகூர்த்தம் நடத்துகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரரை வணங்கும் அவர்களின் வாழ்வில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.  அந்த வகுப்பினை சார்ந்த தம்பதிகள் குடும்ப வாழ்வில் எவ்வித பிரிவும் இல்லாமல் மனமொத்த, உடலொத்த, உயிரொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.


இப்பதிவினை எழுத தூண்டிய கொல்லிமலை நாயகன் அரப்பளீஸ்வரர் பெருமானுக்கு, இப்பதிவினை ஆன்மீகச்சுடர் அவரின் பாதங்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கிறது.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

ஓம் அண்ணாமலையே போற்றி...!
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி...!!
ஓம் அரப்பளீஸ்வரா போற்றி...!!!

ஓம் சிவ சிவ ஓம்


3 comments:

  1. https://www.youtube.com/watch?v=2-0aNq2349E
    This link is very useful..

    ReplyDelete
  2. ஆண் பெண் ஒற்றுமை நல்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி - தமிழ் மொழியில் இருந்தால் பதிவு செய்து உதவவும்.

    ReplyDelete