1.
பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே
2.
சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே
3.
பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே
4.
பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே
5.
எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
6.
முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
7.
ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
8.
பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ
9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ
நீங்கள்
மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
குழந்தையில்லா தம்பதிகள் இருவரும் அசைவம் சாப்பிடுவதை
நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து
வரவும்.
முதன்
முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது
விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன்
தலத்தில் 1
முறை
பாராயணம் செய்யவும். முருகன் தலம்
இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம்
செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு
மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை
விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும்
கழுவி விபூதி,
சந்தனம்
மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.
அவ்வாறு
தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு
தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி
உண்டாகும்.
பாராயணம்
வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு
சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம்.
முருகன்
அருள் கூடவே வந்து நிற்கும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். புத்திர
தோஷம் நீங்கி குலம் தழைக்கும்.
குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ
முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்
Thank God
ReplyDeleteKaru urpathi manthiram explain about that too god
ReplyDeleteThank you so much for details and eplain the manthiram. 🙏🙏
ReplyDeleteGod is great
ReplyDeleteThere is nothing without you
Very useful Padhigam Om Muruga Potri
ReplyDelete