Friday, October 4, 2013

முக்தி தலங்கள் - தென்னாடுடைய சிவன்








 

முக்தி தலங்கள்:

வ. எண்
தலப்பெருமை
தலம்
1.    
பிறக்க முக்தியளிப்பது
திருவாரூர்
2.    
வாழ முக்தியளிப்பது
காஞ்சிபுரம்
3.    
இறக்க முக்தியளிப்பது
வாரணாசி (காசி)
4.    
தரிசிக்க முக்தியளிப்பது
தில்லை (சிதம்பரம்)
5.    
சொல்ல முக்தியளிப்பது
திருஆலவாய் (மதுரை)
6.    
கேட்க முக்தியளிப்பது
அவிநாசி
7.    
நினைக்க முக்தியளிப்பது
திருவண்ணாமலை


மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.  இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.


இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.  அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.  ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.


ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று.  இது எல்லோராலும் இயலாது.  சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது.  மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.


ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.  ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம்.  அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.


மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.  அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம்.  அர்ச்சனை செய்யலாம்.  அன்னதானம் செய்யலாம்.  சிவத்தலத்தில் மந்திரம் செபிக்கலாம்.  அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவனது மந்திரங்களை கேட்கலாம்.  சிவபெருமானின் பெருமைகளை பேசலாம்.  அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம்.


இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும்.  மிகுந்த புண்ணியம் கிட்டும்.  16 பேறுகளும் கிட்டும்.  சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!


ஓம் ஆதிரை நாயகா போற்றி…!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!


ஓம் சிவ சிவ ஓம்
 

No comments:

Post a Comment