அண்ணாமலையார் பாதம்
திருஅண்ணாமலை
தீபம் ஏற்றுவதற்கு முன்
தீபம் ஏற்றிய பின்
கோபுரங்களுக்கிடையே மலைமேல் தீபம்
மலைமேல் தீபம்
தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக்கூடியவை. சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு. தீபங்கள் தீய சக்திகளை அண்டாத வண்ணம் காக்கக்கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை. சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவ லோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம். தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது. மிகுந்த புண்ணியம் சேரும். சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.
இன்று திருக்கார்த்திகை திருநாள். இன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம். இன்று ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள். தீபங்களின் மகிமை பற்றிய சிறு கணக்கு இதோ.
1000 நெய் தீபங்கள் = 1 தேங்காய் எண்ணெய் தீபம்
1000 தேங்காய் எண்ணெய் தீபங்கள் = 1 நல்லெண்ணெய் தீபம்
1000 நல்லெண்ணெய் தீபங்கள் = 1 விளக்கெண்ணெய் தீபம்
1000 விளக்கெண்ணெய் தீபங்கள் = 1 வேப்பெண்ணெய் தீபம்
1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்
ஒவ்வொரு தீபமும் நம் வாழ்வில் ஒளி ஏற்றட்டும். தீபங்களை ஏற்றி அனைத்து கர்மவினைகளை நீக்கி சிவனருள் பெற்று இனிதுடன் வாழ்வோம். தீபத்திருநாளில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ அண்ணாமலையாரின் பாதம் பணிந்து இப்பதிவினை வெளிவிடுவதில் பெருமை கொள்கிறது.
தீபத்திருநாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் அண்ணாமலையார் பாதங்களில் இப்பதிவு சிறு காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
தீபம்
கார்த்திகை தீபம்
அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவ நாதம்
அகார – உகார – மகார வடிவான ஓங்கார தீபம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
திருச்சிற்றம்பலம்…! – பொன்னம்பலம்…!! – அருணாச்சலம்…!!!
No comments:
Post a Comment