Tuesday, November 12, 2013

வில்வம் மற்றும் மலர்களின் விதிகள்

image
  • பஞ்ச வில்வங்கள்:
    1. நொச்சி
    2. விளா
    3. வில்வம்
    4. கிளுவை
    5. மாவிலங்கம்


  • வில்வம் எடுக்கக்கூடாத நாட்கள்:
  1. மாதப்பிறப்பு
  2. சதுர்த்தி
  3. அஷ்டமி
  4. நவமி
  5. சதுர்தசி
  6. அமாவாசை
  7. பௌர்ணமி
  8. திங்கட்கிழமை

  • பறித்தப்பின்பு மலர்களை பயன்படுத்த வேண்டிய கால அளவுகள்:
    தாமரைப்பூ 7 நாட்கள்
    அரளிப்பூ 3 நாட்கள்
    வில்வம் 6 மாதங்கள்
    துளசி 12 மாதங்கள்

  • ஒரு முறை பூசித்த பின்பு மீண்டும் பயன்படுத்தக்கூடியவை:
    1. துளசி
    2. வில்வம்
    3. கருஊமத்தை
    4. நீலோற்பவம்
    5. பொன்னால் செய்யப்பட்ட மலர்


  • பூசைக்கு பயன்படுத்தக் கூடாத மலர்கள்:
    1. எடுத்தப்பின் மலர்ந்த மலர்கள்
    2. பழைய மலர்கள்
    3. எருக்கிலையிலும் ஆமணக்கிலையிலும் கட்டி வைத்த மலர்கள்
    4. உடுத்திய ஆடையில் பட்ட மலர்கள்
    5. கீழே உதிர்ந்த மலர்கள்
    6. இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள்
    7. புழுக்கடி பட்ட மலர்கள்
    8. பறவைகளின் எச்சம் பட்ட மலர்கள்
    9. மயிர் பட்ட மலர்கள்
    10. இரவில் எடுத்த மலர்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment