நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய திருவிராமேச்சுரம் பாடல் ஆகும். இது நமக்கு வெளியே உள்ள பகை, நமக்கு உள்ளே உள்ள பகை (கர்மவினை) இவற்றை அழித்து பித்ருக்களின் சாபத்தையும், தோஷத்தையும் போக்க வல்லது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது உங்களின் பிறந்த நட்சத்திரம் அல்லது பிறந்த திதி வரும் நாளில் ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அல்லது அமாவாசை திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும். அமாவாசை திதியே மிக மிக சிறப்பானது.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று. மேலும் பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு. அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்றும், ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.
அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள். தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும். அனைத்துவித தோஷங்களும் நீங்கும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். பாராயணம் செய்த பின்பு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக அளிக்கவும். வெகு விரைவில் பித்ரு தோஷம் நீங்கும். வாழ்வில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்கும். நிம்மதியும், பித்ருக்களின் அருளும் கிட்டும். நமக்கு வெளியே உள்ள பகையும், நமக்கு உள்ளே உள்ள பகையும் அழிந்து பித்ரு தோஷம் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!
This comment has been removed by the author.
ReplyDeleteபிதுர் தோஷம் நீங்க வேறு பரிகாரங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள் நண்பரே..
ReplyDeleteமிக்க நன்றி
தமிழ்நேசன்
newtamilnesan@gmail.com