Wednesday, December 4, 2013

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

lord-shiva-45a

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:-

  • முதலில் உங்கள் வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் முன்னர் உங்களின் குலதெய்வத்தினை வேண்ட வேண்டும்.
  • பின்பு சிவாலயத்தின் அருகே சென்றவுடன் கோவிலின் கோபுரத்தினை இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.
  • பிறகு ஆலயத்தினுள் சென்று முழு முதற் கடவுளாகிய விநாயகப்பெருமானை வணங்க வேண்டும்.
  • அதன் பின்னர் கொடி மரத்தினை வணங்க வேண்டும்.
  • கொடி மரத்தினை வணங்கிய பின்பு பலிபீடத்தினை வணங்க வேண்டும்.
  • அதன் பின்னர் நந்தி பெருமானை வணங்க வேண்டும்.
  • மற்ற கடவுளர்களை வரிசையாக தரிசித்து வணங்க வேண்டும்.
  • பின்பு அம்பிகையை வணங்க வேண்டும்.
  • அம்பிகையை வணங்கிய பின்பு சிவபிரானை கண்டு தொழ வேண்டும்.
  • அதன் பின்னர் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
  • பின்பு சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
  • அதன் பின்பு துர்க்கையை வணங்க வேண்டும்.
  • பின்பு பைரவ பெருமானை வணங்க வேண்டும்.
  • அதன் பின்னரே நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.
  • பின்பு கொடிமரத்தின் அருகே நின்று நமது வேண்டுகோள்களை வேண்ட வேண்டும்.
  • பிறகு கொடிமரத்திற்கு நேராக தரையில் விழுந்து வணங்க வேண்டும்
  • சண்டிகேஸ்வரரை மானசீகமாக வணங்கி விடைபெற வேண்டும்.
  • பின்பு ஆலயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும்.
  • அதன் பின்னர் வேறு எந்த கோவிலுக்கோ அல்லது  மற்றவர்களின் வீடுகளுக்ககோ செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

No comments:

Post a Comment