சிவபெருமானின் முகங்கள் ஐந்து ஆகும். அவையாவன:
- சத்யோஜாதம்
- வாமதேவம்
- தத்புருஷம்
- அகோரம்
- ஈசானம்
சத்யோஜாதம்:
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.
தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சத்யோஜாதய நமஹ
ஓம் வாமதேவாய நமஹ
ஓம் தத்புருஷாய நமஹ
ஓம் அகோராய நமஹ
ஓம் ஈசானாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
சிறப்பான விளக்கம் அறிந்தேன்... நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் இறைவனை சாரும்...!
Deleteசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
ReplyDelete(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
கருத்துரை செய்ய இனி தடைகள் ஏதுமில்லை. தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
Deleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteபுதிய தகவல்கள் அறிந்தேன்
மேலும் கடைசியாக " தென்னாடுடைய சிவனே போற்றி…! ஆரம்பித்து ஓம் சிவ சிவ ஓம்" வரை உள்ள வடிவத்தை பாருங்கள் அண்ணாமலையாரின் தீபம் ஏற்றும் கொப்பரை வடிவில் அமைந்துள்ளது என்ன ஆச்சரியம்
ஓம் அண்ணாமலையே போற்றி
வணக்கம். பிரசன்னகுமாரா...!
Deleteஅருமை...! அருமை...!! அருமை...!!! நான் இதை கவனிக்க வில்லையே...! எல்லாம் அவன் செயல்.
ஓம் அண்ணாமலையே போற்றி...!
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete