Thursday, August 29, 2013

மகா முனீஸ்வரர் துணை

    

எம் காவல் தெய்வம் - மகா முனீஸ்வரர்



நம் பாரத தேசத்தில் உருவான கோவில்களில் அவற்றின் பாதுகாப்புக்காக ஒரு தெய்வம் அமர்த்தப்பட்டிருக்கும்.  நம் தமிழ் நாட்டு அம்மன் கோவில்களின் பாதுகாப்புக்காக அய்யனார், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் போன்ற தெய்வங்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

முருகர் தன் தாயின் கோவில்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கிய காவல் தெய்வமே முனீஸ்வரர் ஆவார்.  இவர் பைரவரின் அம்சம்.  இவரின் வாகனம் நாய் ஆகும்.  இவரின் கோவில்களில் சிமெண்டினாலான பெரிய சுதை வடிவமும், அதற்கு கீழே கற்சிலையும் காணக்கிடக்கும்.

இவர் சக்தி வாய்ந்த லாட தெய்வம் ஆவார்.  குழந்தைகளை பேணி வளர்ப்பதில் இவருக்கு மிகுந்த ஆவல் உண்டு.  நம்மில் பலரின் குலதெய்வமாக இவர் தான் திகழ்கிறார்.  இவருக்கு முனி, சடையன், சடைசாமி என்று பல பெயர்கள் உண்டு.

திருடர்களிடமிருந்தும், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிலிருந்தும் நம்மையும், நாம் வாழும் ஊரையும் காப்பவர் இவரே.  இவரை முறைப்படி தொடர்ந்து வழிபடின் திருடர், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் இவற்றின் பாதிப்பில்லாமல் நலமுடன் வாழலாம்.

இவரின் கண்களுக்கு நேராக சூலம், வேல், வீச்சரிவாள் ஆகிய மூன்று போர்கலன்கள் நிலத்தில் ஊன்றி வைக்கப்பட்டிருக்கும்.  சக்தியின் ஆயுதமாக சூலமும்முருகனின் ஆயுதமான வேலும்முனீஸ்வரரின் ஆயுதமான வீச்சரிவாளும் இவருக்கு முக்கியமானவை.

அதாவது சக்திக்கு காவலாக முருகனால் படைக்கப்பட்ட தெய்வம் முனீஸ்வரர் என்பதே இதன் விளக்கமாகும்.  இத்தகைய பெருமை வாய்ந்த தெய்வம் முனீஸ்வரர் ஆவார்.

இவருக்கு அதிரசம், பொரி கடலை, கருவாடு, முட்டை, இறைச்சி, சாராயம் இவற்றை படைப்பது உண்டு.  இவருக்கு ஆடு, பன்றி, எருமை ஆகிய மூன்று உயிர்களை பலியிடும் வழக்கமும் உண்டு.  சிலர் 108 ஆடுகளையும், 1008 ஆடுகளையும் பலியிட்டு தனது நேர்த்திகடனை செலுத்தியிருக்கிறார்கள் என்றால் இவரது சக்தியை நீங்களே உணரலாம்.

எது எப்படியிருப்பினும் இவருக்கு அதிரசமே மிகவும் பிடித்தமானது.  மேலும் எந்த முனீஸ்வரரும் தனக்கு இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று கேட்டதில்லை.  மக்கள் தன் திருப்திக்காக தான் மேற்கண்ட பொருட்களை படையலிடுவதும், பலியிடுவதும் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இப்பதிவில் நீங்கள் காணும் முனீஸ்வரரின் பெயர் மகா முனீஸ்வரர் ஆவார்.  முனிகளுக்கெல்லாம் மூத்தவர் இவரே.  இவரை பெரியண்ணன், பெரியாண்டவர், பெரியசாமி என்றும் அழைப்பதும் உண்டு.

இவரது ஆலயம் வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், ஊசூரை அடுத்த சிவநாதபுரம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இவரின் ஆலயங்களுக்கு கூரை கிடையாது.  தற்போது சிமெண்டினாலான சுதை வடிவம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 12 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  யார் வேண்டுமானாலும் அவருக்கு தங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம் என்பது முக்கிய செய்தியாகும்.

தம்மை அண்டியவர்களை காப்பாற்றி அருள்பாலிக்கும் மகா முனீஸ்வரின் பாதம் பணிந்து நாமும் எல்லா வளங்களையும், மன நிம்மதியையும் பெறுவோம்.

ஓம் ஹ்ரீம் மகா முனீஸ்வராய நமஹ

21 comments:

  1. முனீஸ்வரன் 108 போற்றி அர்சனை அனுப்புங்கள்

    ReplyDelete
  2. Trichy veerapur laium irukanga mandhira magamuni

    ReplyDelete
  3. Muneeswaran 108 potri anupunga

    ReplyDelete
  4. குடியாத்ததம் தாலுக்கா மூங்கப்பட்டு கிராமத்தில் விஷ்வரூபமாய் எழுந்தருளியிருக்கும் மஹா முனீஸ்வரர்

    ReplyDelete
  5. குடியாத்ததம் தாலுக்கா மூங்கப்பட்டு கிராமத்தில் விஷ்வரூபமாய் எழுந்தருளியிருக்கும் மஹா முனீஸ்வரர்

    ReplyDelete
  6. குடியாத்ததம் தாலுக்கா மூங்கப்பட்டு கிராமத்தில் விஷ்வரூபமாய் எழுந்தருளியிருக்கும் மஹா முனீஸ்வரர்

    ReplyDelete
  7. அர்ச்சனை அனுப்புங்கள்
    பகவதி

    ReplyDelete
  8. கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் சிஎன்சி காலனி வெரைட்டி ஹால் ரோடு சங்கிலி சங்கிலி மகா முனீஸ்வரர் சங்கிலி கருப்பராயன் இப்பகுதியில் எழுந்தருளியிருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. கோவில் பூசாரி பகவதி

      Delete
  9. Om muniswara namaha om muniswara namaha om muniswara namaha 🙏🙏🙏 iyya Sri muniswar 108 potri anupumgal🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. முனிஸ்வரன் 108 போற்றி அர்ச்சனை அனுப்புங்கள் ஐயா

    ReplyDelete
  11. தர்மபுரி நல்லம்பள்ளி எல்லையில் எழுத்தருளியுள்ளார் ஆதி மகா முனியப்பன் சங்கிலி கருப்பர் சுடலை மாடன் சப்த கனினியர் மற்றும் கால பைரவர்

    ReplyDelete