Thursday, December 19, 2013

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

govu

குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது.  எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள்.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது.  மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்.  பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.

எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் குலதேவதாய நமஹ

ஓம் குலதேவதாயை நமஹ

 

Wednesday, December 18, 2013

ஐயப்பனின் அருளினைத் தரும் சாஸ்தா அஷ்டகம்

sasta

ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

களமிருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா…!
சரணம் ஐயப்பா…!! ஸ்வாமி சரணம் ஐயப்பா..!!!

 

நாம் மேலே காண்பது சாஸ்தா அஷ்டகம் ஆகும்.  இது ஐயப்பன் என்னும் சாஸ்தாவின் அருளினை பெற பெரிதும் உதவும் துதியாகும்.  ஐயப்ப பக்தர்கள் தினமும் இரவு பூசை முடிக்கும் போது இதனை பாடி முடிக்க வேண்டும்.  எல்லா ஐயப்பன் கோவில்களிலும் இரவு பூசை முடிந்தவுடன் இந்த அஷ்டகத்தினை பாடி நடைசாத்துவது வழக்கம்.

சாஸ்தா அஷ்டகத்தின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய பின்வரும் தொடர்புகளை சொடுக்கவும்.

1. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (முதல் வடிவம்)

2. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (இரண்டாம் வடிவம்)

3. திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியது (மூன்றாம் வடிவம்)

4. திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடியது

5. திரு. உன்னிக்கிருஷ்ணன் அவர்கள் பாடியது

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

சுவாமியே சரணம் ஐயப்பா

 

Tuesday, December 17, 2013

நவதுர்க்கையின் வடிவங்கள்

Happy-Dussehra-Greeting-Card-Maa-Durga-Facemaa-durga-wallppaer

வ.எண் துர்க்கையின் பெயர் வடிவத்தின் விளக்கம்
1. வன துர்க்கை வனங்களில் உறைந்திருப்பவள்
2. ஜல துர்க்கை நீரில் உறைந்திருப்பவள்
3. வன்னி துர்க்கை மரத்தினில் உறைந்திருப்பவள்
4. தூல துர்க்கை மண்ணில் உறைந்திருப்பவள்
5. விஷ்ணு துர்க்கை ஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6. பிரம்ம துர்க்கை படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7. சிவ துர்க்கை அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8. மகா துர்க்கை சகல பாக்கியங்களைத் தருபவள்
9. சூலினி துர்க்கை சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Monday, December 16, 2013

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Periachi

பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.

பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.

அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.

அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.

அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.

தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.

கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சக்தி ஓம்

 

 

Sunday, December 15, 2013

அரசு வேலை கிடைக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம்

agathiyar

surya

ram

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக


தியானம்
ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி


1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
    ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
    உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
    யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
    ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
    சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
    பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
    ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
    மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
    வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
      ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
      திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
      அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
      கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
      கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
      தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
      ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
       நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
       நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
       பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
      கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
       நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
       பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
       ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
       யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
      கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
      எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
       ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
       தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
       த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
       ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி

 

நாம் மேலே காண்பது மகத்துவம் பொருந்திய அகத்தியர் இயற்றிய ஆதித்ய ஹ்ருதயம் ஆகும்.  இது அகத்தியரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்டது.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.  தன்னை மனிதனாக கூறிக் கொண்ட ராமனுக்கு சூரியனின் அருளை வழங்க அகத்தியர் இதனை உபதேசம் செய்தார்.  இது சோர்வினை போக்க வல்லது.  தைரியத்தையும், பலத்தையும் கொடுக்கக்கூடியது.  ஆயுளை வளர்க்கக்கூடியது.  புண்ணியத்தை தர வல்லது.  எதிரிகளை அழிக்கக்கூடியது.

நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.  அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.

பொதுவாக நம்மில் பலர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.  அவ்வாறு முயற்சி செய்யும் எல்லோருக்கும் அரசு வேலை அமைவதில்லை.  பலரின் முயற்சி வீணாக போகிறது.  இதனை போக்கும் விதத்தில் அரசு வேலையை பெற ஆதித்ய ஹ்ருதய துதியை பயன்படுத்தும் முறையை கீழே காண்போம்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.

முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும்.  பின்பு கணபதியை வணங்கவும்.  பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும்.  பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்.  பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.

இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும்.  கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும்.  பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும். 

ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும்.  எனவே அதனை விலக்க வேண்டும்.  எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும்.  சூரிய தோஷம் நீங்கும்.  அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும்.  அரசாங்க ஆதரவு உண்டாகும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.  அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.

மற்றவர்கள் இதனை பின்பற்றினால் எல்லா செயல்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.  தைரியமும் மனபலமும் உண்டாகும். ஆன்ம லாபமும் உண்டாகும்.  செல்லுமிடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும்.

கிரக தோஷங்கள் நீங்கி, சூரியனின் அருளினைப் பெற்று எல்லா நலங்களும் பெற இறையருளும் குருவருளும் திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஜயமில்லை.

சூரிய வழிபாடு என்பது சிவ வழிபாட்டில் ஒரு அங்கம் என்பதை நாம் கருத்தினில் கொள்ள வேண்டும்.

இப்பதிவினை ஆதித்ய ஹ்ருதயம் வழங்கிய அகத்தியரின் பாதம் பணிந்து ஆன்மீகச்சுடர் வலைப்பூ வெளிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஆதித்ய ஹ்ருதயம் துதியின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஆதித்யாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ